Published:Updated:

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு பீரியட்ஸ் வரவில்லை; என்ன காரணம்?

Sanitary Napkin (Representational Image)
News
Sanitary Napkin (Representational Image) ( Image by burin kul from Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

பிரசவத்திற்குப் பிறகு எனக்கு மாதவிடாய் வரவில்லை. என்ன காரணம்? இந்தப் பிரச்னையை சரி செய்ய என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்?

- சந்தியா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

``பிரசவத்துக்குப் பிறகு உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டும் கொடுக்கும் பட்சத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு உங்களுக்கு மாதவிடாய் வராமலிருப்பது சகஜம்தான். அதாவது குழந்தைக்கு எல்லா நேரமும் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது. தண்ணீர், ஃபார்முலா ஃபீடு எனப்படும் குழந்தை உணவு உள்ளிட்ட எதையும் கொடுக்காமல் வெறும் தாய்ப்பால் மட்டும் கொடுப்பது.

குழந்தைக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு அரை திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கும்வரை இது தொடரலாம். தாய்ப்பால் சுரப்பைத் தூண்டக்கூடிய புரொலாக்டின் என்ற ஹார்மோன் சுரப்பால் பெண் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஆகியவற்றின் சுரப்பு குறையும். அதனால் உங்களுக்கு மாதவிடாய் வராது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் கேள்வியில் பிரசவமாகி எத்தனை மாதங்கள் ஆகின்றன என்ற தகவல் இல்லை. ஒருவேளை ஒரு வருடத்துக்குள் பிரசவமாகியிருந்தால் காத்திருக்கலாம்.

ஒருவேளை உங்களுக்கு முறையற்ற மாதவிடாய் சுழற்சியோ, பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னையோ, தைராய்டு பாதிப்போ இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றின் காரணமாக மாதவிடாய் வரவில்லையா என்பதைத் தெரிந்துகொள்ள மருத்துவ ஆலோசனை பெறலாம்.

இவற்றைத் தாண்டி வேறு சில காரணங்களாலும் பிரசவத்துக்குப் பிறகு மாதவிடாய் வராமலிருக்கலாம். உதாரணத்துக்கு பிரசவத்தின்போது ரத்தம் ஏற்றும் அளவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கலாம்.

Sanitary Napkin
Sanitary Napkin
Pixabay

இது பிட்யூட்டரி சுரப்புகளைச் செயலிழக்கச் செய்யும் `ஷீஹன் சிண்ட்ரோம்' (Sheehan's syndrome) எனும் அபூர்வ பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

எதற்கும் உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுவதோடு தேவைப்பட்டால் ஹார்மோன் பரிசோதனைகளைச் செய்து பாருங்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?