Published:Updated:

Covid Questions: உயர்கல்விக்காக வெளிநாட்டுப் பயணம்; முன்கூட்டியே 2-வது டோஸ் போட என்ன செய்யவேண்டும்?

Higher education abroad travel - Representational Image
News
Higher education abroad travel - Representational Image ( Image by Rudy and Peter Skitterians from Pixabay )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்ல வேண்டிய நிலையில் அடுத்த டோஸுக்கான இடைவெளி முடிவதற்கு முன்னரே போட்டுக்கொள்ள அரசு அனுமதித்திருப்பதாகச் சொல்கிறார்கள். எத்தனை நாள்கள் இடைவெளிவரை அரசு அனுமதிக்கிறது? அந்த மாணவர்கள் எங்கே இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாம்? ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனை எனப் பல இடங்களிலும் இரண்டாவது டோஸுக்கான இடைவெளி முடிவதற்குள் போட மாட்டோம் எனத் திருப்பி அனுப்புகிறார்களே... இந்நிலையில் அந்த மாணவர்கள் என்ன மாதிரியான ஆவணங்களைக் காட்டி, முன்கூட்டியே இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாம்?

- ஜகதீஷ் (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் குமாரசாமி
டாக்டர் குமாரசாமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.

`` கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொறுத்தவரை முதல் டோஸ் போட்டுக்கொண்டதிலிருந்து 12 முதல் 16 வாரங்களில் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாம். கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை 4 முதல் 6 வாரங்களில் போட்டுக்கொள்ளலாம். இந்தியாவைப் பொறுத்தவரை இதுதான் நேஷனல் கைடுலைன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்கிற காலம். எனவே அவர்கள் ஏற்கெனவே முதல் டோஸ் போட்டிருக்கும் நிலையில், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள மேற்குறிப்பிட்ட கால அவகாசம்வரை காத்திருக்கத் தேவையின்றி, முதல் டோஸ் போட்டுக்கொண்ட நான்கு வாரங்கள் கழித்து இரண்டாவது தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள இந்திய அரசாங்கம் சிறப்பு அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால் அந்த மாணவர்கள் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லவிருப்பதற்கான உரிய ஆவணங்களைக் காட்ட வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு அட்மிஷன் சான்றிதழ், விசா, ஃப்ளைட் டிக்கெட் போன்றவற்றைக் காட்டி, மாநகராட்சியின் சுகாதார மையங்களில் சிறப்பு அனுமதிப் பிரிவின் கீழ் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Steven Senne

கோவின் ஆப்பிலும் இதற்கான ஆவணங்களை அப்லோடு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். வெளிநாட்டுக்குப் பயணம் செய்யவிருக்கும் மாணவர்களுக்கான இந்தச் சிறப்பு அனுமதியின் பேரில் மாநகராட்சியின் சுகாதார மையங்களில் மட்டும்தான் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. உரிய ஆவணங்களுடன் அவர்களை அணுகவும்.''

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!