Published:Updated:

Covid Questions: முதல் தடுப்பூசி போட்ட பின் கோவிட் பாசிட்டிவ்; 2-வது தடுப்பூசி எப்போது போட வேண்டும்?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முதல் தவணை தடுப்பூசிக்குப் பின், அதாவது இரண்டாவது தவணைக்கான இடைப்பட்ட காலத்தில் ஜுரமோ, சளியோ, இருமலோ அல்லது கொரோனாவோ வந்திருந்தால், இரண்டாவது தடுப்பூசியை குறித்த காலத்தில் போட்டுக்கொள்ள வேண்டுமா அல்லது கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்ளலாமா?

- புகழ் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி
மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``எந்தத் தடுப்பூசியாக இருந்தாலும் இன்னொரு தொற்று இருக்கும்போது போடக்கூடாது. அதுதான் பொதுவான அறிவுறுத்தல். எனவே உங்களுக்கு இருமலோ, சளியோ, காய்ச்சலோ இருந்தால் அவை குணமாகும்வரை காத்திருந்து பிறகு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள்.

அதுவே ஒருவேளை உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்ததில் இருந்து மூன்று மாதங்கள் கழித்து அதற்கான தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும், இரண்டாவது டோஸை மூன்று மாதங்கள் கழித்து போட்டுக்கொள்வதுதான் சரி.

covid vaccine
covid vaccine
AP Photo/Pavel Golovkin
Covid Questions: கோவிட் காலத்தில் ஏறிய குழந்தையின் உடல் எடை; இதற்கு தீர்வு உண்டா?

கொரோனா தொற்றோ.... வேறு தொற்றுகளோ ஏற்பட்டு, அதன் விளைவாக தடுப்பூசியைத் தள்ளிப் போடுவதால் உங்களுக்கு ஏற்படப் போகிற நோய் எதிர்ப்பாற்றலில் எந்தக் குறைவும் இருக்காது. ஒரு தொற்று குணமாகும்வரை காத்திருக்கும் அந்தக் கால இடைவெளியால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு