Published:Updated:

Doctor Vikatan: தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் தொற்று; வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாமா?

Doctor Vikatan
News
Doctor Vikatan ( AP Illustration/Peter Hamlin )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் தொற்று; வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan
News
Doctor Vikatan ( AP Illustration/Peter Hamlin )

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்க வேண்டுமா? வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமா?

- பரத் (விகடன் இணையத்திலிருந்து)

பூங்குழலி
பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``இப்போதைக்கு நம்மிடம் இருக்கும் எம்ஆர்என்ஏ (mRNA) வகை தடுப்பூசிகளான ஃபைஸர், மாடர்னா, அடினோவைரஸ் வகை தடுப்பூசியான கோவிஷீல்டு, இன்ஆக்டிவேட்டடு வகை தடுப்பூசியான கோவாக்சின் என எதுவாக இருந்தாலும் கோவிட் தொற்று தீவிரநிலையை அடையாத அளவுக்குப் பாதுகாப்பளிக்கும். கிட்டத்தட்ட ஒரு வருடமாகத் தடுப்பூசிகள் போடப்படுவதில் நமக்குக் கிடைத்த தகவல் இதுதான்.

எந்தத் தடுப்பூசியானாலும் இரண்டு டோஸ்களும் போடப்பட்ட இரண்டு வாரங்கள் கழித்துதான் முழுமையான பாதுகாப்பு நமக்கு கிடைக்கும்.

அதனால்தான் எல்லோரையும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் தவறாமல் செலுத்திக்கொள்ள வலியுறுத்துகிறோம். கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் சரி, போட்டுக்கொள்ளாதவர்களும் சரி, ஒரே ஒரு டோஸ் மட்டும் செலுத்திக்கொண்டவர்களும் சரி... அவர்களது நோயின் தீவிரத்தைப் பொறுத்து, மருத்துவரின் அறிவுரையின்பேரில்தான் எப்படிப்பட்ட சிகிச்சையை மேற்கொள்வது என்று முடிவு செய்ய வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டாலும் அது தீவிர பாதிப்பில் கொண்டுவிடாது என்பதைத்தான் இத்தனை நாள்களாகப் பார்த்து வருகிறோம்.

Covid-19 Vaccine
Covid-19 Vaccine
AP Photo

ஆனாலும், தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையிலும் தொற்று ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபரின் உடல்நிலையை மருத்துவரால் மட்டுமே கவனித்து சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் மட்டுமே வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்று அர்த்தமாகாது. எனவே, தொற்று உறுதியானால் உடனே உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?