Published:Updated:

`ஒரு ரூபாயில் ஹீமோகுளோபின் டெஸ்ட்!' - புதிய கருவியைக் கண்டுபிடித்த ஐஐடி குழு

ஹீமோகுளோபின் டெஸ்ட்டுக்கு - புதிய கருவி.

Blood Test
Blood Test

சர்வதேச ஊட்டச்சத்து அறிக்கையின்படி, இந்தியாவில் இனப்பெருக்க வயதில் இருக்கும் பெண்களில் 52 சதவிகிதம் பேர், கர்ப்பிணிகளில் 50 சதவிகிதம் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்தசோகையினால், கருவுற்ற பெண்களின் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் குறைந்து, உடல் உறுப்புகள் பாதிப்படைவது மட்டுமல்லாமல், கருவில் உள்ள குழந்தையையும் அது பாதிக்கும்.

hemoglobin
hemoglobin

பிரசவ கால உயிரிழப்புகளுக்கு ரத்தசோகை முக்கியக் காரணமாக விளங்குகிறது. இந்தியாவின் பெரும் பாரமாக விளங்கும் ரத்தசோகையை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவேண்டியது அவசியம்.

 ஹெல்த்: உயர் ரத்த அழுத்தம் உதாசீனம் வேண்டாம்!

அதற்கு ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், மருத்துவமனையிலோ ஆய்வகங்களிலோதான் ஹீமோகுளோபின் அளவைத் தெரிந்துகொள்ள முடியும். இதனால், பாதிக்கப்பட்ட பலரைக் கண்டறிய இயலாமலேபோய்விடுகிறது.

இந்தக் கருவி, ஸ்மார்ட்போனுடன் இணைந்து செயல்புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, குறைந்த செலவில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைக் கண்டறியும் கருவியை கராக்பூர் ஐஐடி-யைச் சேர்ந்த பேராசிரியர் சுமன் சக்கரபர்த்தியும் அவரது குழுவினரும் கண்டறிந்துள்ளனர்.

அந்தக் கருவியில், ரத்தத்தில் சிறிய அளவை எடுத்து வைத்தால், அதிலிருக்கும் ரசாயனங்கள் செயலாற்றத் தொடங்கும். அதன்பிறகு, ரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகமாக இருந்தால், அது அடர் நிறமாக மாறும். குறைவாக இருந்தால் வெளிர் நிறமாக மாறும். இந்தக் கருவி, ஸ்மார்ட்போனுடன் இணைந்து செயல்புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனையைச் செய்ய, நோயாளியிடம் இருந்து மிகக் குறைந்த அளவு ரத்தம் எடுத்தால் போதுமானது. ஒரு நபருக்கு ஒரு ரூபாய் செலவில் பரிசோதனையை முடித்துவிட முடியும்.

Blood Test
Blood Test

``சிறிய மற்றும் நடுத்தர மருத்துவமனைகளில் இந்தக் கருவியைப் பயன்படுத்தி பரிசோதனை செய்கின்றனர். பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு, எங்கள் கண்டுபிடிப்பின் பயன்பாட்டை நிரூபித்துள்ளோம்" என்கின்றனர், ஆராய்ச்சிக் குழுவினர்.