Published:Updated:

`குறைந்த செலவில் கொரோனா சோதனைக் கருவி!’ - டெல்லி ஐஐடி சாதனை

கொரோனா
கொரோனா

கோவிட்-19ஐ உறுதிப்படுத்தும் பரிசோதனைக் கருவியை டெல்லி ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பதிலும் கோவிட்-19ஐ உறுதிசெய்யும் சோதனைக் கருவிகளை உருவாக்குவதிலும் உலக நாடுகள் ஒருசேர பெரும் சவாலை சந்தித்து வருகின்றன.

கோவிட் - 19
கோவிட் - 19
`தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று’ - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் #NowAtVikatan

உலகளவில் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19க்கு மருந்து கண்டுபிடிக்கப் பல விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும், மருந்து நிறுவனங்களும் முயன்று கொண்டிருக்க, டெல்லியிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கோவிட்-19ஐ உறுதிப்படுத்தும் பரிசோதனைக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இது சோதனைச் செலவை கணிசமாகக் குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.

குறைந்த செலவில் கோவிட்-19ஐ துல்லியமாகக் கண்டறியும் சோதனைக் கருவியைக் கண்டுபிடித்தால் அது அனைத்து மக்களுக்கும் போய் சேரும் வகையில் இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
ஐஐடி-யினர்

புனேவிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (National institute of virology), கருவியில் மருத்துவ மாதிரிகள் (clinical samples) மூலம் சோதனை செயல்பாட்டை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

தேசிய வைராலஜி நிறுவனம்
தேசிய வைராலஜி நிறுவனம்

``கம்பேரட்டிவ் சீக்வன்ஸ் அனாலிசிஸ் (Comparative sequence analysis) முறையில், கோவிட் - 19ல் புதிய பகுதிகளைக் கண்டுபிடித்துள்ளோம். இந்தத் தனித்துவமான பகுதிகள் மனித உடலில் இருக்கும் கோவிட்-19 உடன் ஒத்துப்போகாததே கொரோனா வைரஸைக் கண்டறியும் வாய்ப்பைத் தந்தது. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி சரிபார்த்ததும், மக்களுக்குத் தேவைப்படும் எண்ணிக்கையில் விரைவில் இது அதிகம் தயாரிக்கப்படும்' என்றிருக்கிறார் ஐஐடி பேராசிரியர் விவேகானந்தன் பெருமாள்.

NABL (National Accreditation Board for Testing and Calibration Laboratories) ஆல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் ஆய்வகங்களும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வழங்கிய வழிகாட்டுதல்களின்படி கோவிட்-19க்கான சோதனையை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அனுமதித்துள்ளது. தனியார் ஆய்வகங்களில் கோவிட்-19க்கான சோதனைக் கட்டணம் அதிகபட்சம் ரூ. 4,500ஐ தாண்டக் கூடாது என்பதைக் கடந்த சனிக்கிழமை மத்திய அரசு வலியுறுத்தியது.

கொரோனா
கொரோனா
உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தக் கொரோனா சோதனைக் கருவி, எளிய மக்களுக்குப் பலனளிப்பதாக அமையட்டும்!
அடுத்த கட்டுரைக்கு