Published:Updated:

`புதிய வகை சானிடைசர் தயாரிப்பு' - இலவசமாக வழங்கும் ரூர்க்கி ஐ.ஐ.டி மாணவர்கள்!

ரூர்க்கி ஐஐடி மாணவர்கள்
ரூர்க்கி ஐஐடி மாணவர்கள் ( TOI )

ஐ. ஐ.டி-யைச் சேர்ந்த, இரண்டு மாணவர்கள் கைகழுவும் சானிடைசர் தயாரித்து அசத்தியுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றான சானிடசைரை, ரூர்க்கி ஐ.ஐ.டி மாணவர்கள் தயாரித்து இலவசமாக வழங்கி வருகின்றனர்.

கொரோனா
கொரோனா

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சர்வதேச அளவிலான எமர்ஜென்சியை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகள் இந்நோய்த் தடுப்பு நடவடிக்கையாக, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி லாக்டவுன் செய்துகொண்டுள்ளன. இந்த நோய் தாக்கம், இந்தியாவிலும் வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்நோய் பாதிப்பிற்கு, இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 500 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து தங்களைத் தாங்களே, சுய பாதுகாப்பு செய்துகொள்ளும்படி மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதில், முக்கியமானதாக கை கழுவும் (கை சுத்திகரிப்பு) முறையை உறுதியாகப் பின்பற்ற அறிவுறுத்துகின்றன.

கை சுத்திகரிப்பு
கை சுத்திகரிப்பு

இதனால், கை கழுவும் சானிடைசர்கள் விற்பனை அதிகரிகத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, இதன் விலையும். இப்படியான நிலையில், உத்தரகாண்டில் உள்ள ரூர்க்கி ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த, இரண்டு மாணவர்கள் சானிடைசர் தயாரித்து அசத்தியுள்ளனர். இந்த சானிடைசர்களை அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் கொடுத்து இலவசமாகப் பொதுமக்களுக்கு வழங்கும்படிக் கேட்டுள்ளனர்.

அதேநேரத்தில் இந்த சானிடைசர், ரூர்க்கி ஐ.ஐ.டி வளாகத்திலும், இலவசமாக மக்களுக்கு வழங்கப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்படி தயாரிக்கப்பட்ட, இந்த சானிடைசர்களில், 80 சதவிகித ஐசோபுரபனோல், எத்தனால் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை, காளான் உள்ளிட்ட எதிர்ப்பு மூலிகைகளால் தயாரிக்கப்பட்டுள்ளன.

`WHO ஃபார்முலா; மலிவு விலை’ - உள்ளூரிலேயே சானிடைஸர் தயாரித்து அசத்திய திருப்பூர் கலெக்டர் #Corona

இதுகுறித்து, ரூர்க்கி ஐ.ஐ.டி நானோ தொழில்நுட்ப மையத்தின் ஆய்வாளர் சித்தார்த் ஷர்மா, "கொரோனோ தாக்கத்தைத் தடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட இந்த மாதிரி சானிடைசர்களை மேலும் அதிகமாக விநியோகிக்க புதிய தயாரிப்பு ஒன்று மையம் அமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று, டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி-யின் வேதியியல் துறை மாணவர்களும் புதிய வகையான சானிடைசர்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு