Published:Updated:

வருடத்துக்கு 4 சதவிகிதம் அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோயாளிகள்... ஐந்தாம் இடத்தில் தமிழகம்!

Breast Cancer
Breast Cancer ( Pixabay )

`ஒவ்வோர் ஆண்டும், தமிழகத்தில் மார்பகப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன!' - மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலொன்றை சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதில், மார்பகப் புற்றுநோயாளிகள் அதிகமுள்ள மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல், `தேசிய புற்றுநோய் பதிவு திட்டம்' என்ற தளத்தில் இடம் பெற்றுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

தனது செய்தியில், 2018-ம் ஆண்டு தமிழகத்திலிருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 10,269 எனக் குறிப்பிடப்பட்டிருந்தார் அமைச்சர். இதற்கு முந்தைய ஆண்டுகளுக்கான தகவல்களோடு ஒப்பிடும்போது, தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 4 சதவிகிதம் புற்றுநோயாளிகள் அதிகரிப்பதை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

மார்பகப் புற்றுநோயைத் துல்லியமாகக் கண்டறியலாம்... வருகிறது செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பம்!

2018 - ம் ஆண்டு கணக்குப்படி, மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மூன்று மாநிலங்களாக உத்தரப்பிரதேசம் (24,181 நோயாளிகள்), மகாராஷ்ட்ரா (16,358 நோயாளிகள்), மேற்கு வங்காளம் (12,234 நோயாளிகள்) ஆகியவை உள்ளன.

மார்பகப்  புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய்

சென்னையைச் சேர்ந்த புற்றுநோயியல் மருத்துவர்கள் சிலர் இதுகுறித்து பேசும்போது, ``மார்பகப் புற்றுநோய்க்கான முக்கியமான காரணம், ஹார்மோன் மாற்றங்கள்தாம். ஹார்மோன் சார்ந்த சிக்கல்கள் நம் பெண்கள் அதிகம் எதிர்கொள்கின்றனர் என்பதையும் இதன் மூலம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

10,269
2018 - ம் ஆண்டு கணக்குப்படி, தமிழகத்தில் இருந்த மார்பகப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை.

எந்தப் பிரச்னையையும் முதல்நிலையிலேயே சரிசெய்தால், பல பயங்கர விளைவுகளை நாம் தடுக்கலாம். புற்றுநோயைத் தடுக்க, முதல்நிலையிலேயே ஹார்மோன் பிரச்னைகளைக் கண்டறிந்து, அவற்றை சரிசெய்ய வேண்டும். மாதவிடாய் சிக்கல்களும் ஹார்மோன் பிரச்னைகளுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்பதால், பிரச்னை உள்ளவர்கள், உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளனர்.

ஹார்மோன் பிரச்னை
ஹார்மோன் பிரச்னை

``நம் ஊரைப் பொறுத்தவரையில், ஒவ்வோர் ஆண்டும் முப்பதுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆகவே 30 ப்ளஸ்ஸில் இருக்கும் பெண்கள் அனைவருமே, மார்பக சுய பரிசோதனை குறித்து அறிந்துவைத்திருப்பது அவசியம்" எனக் கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு