Published:Updated:

`தனிமை,மன அழுத்தம்; ஊரடங்கால் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள்!’ இங்கிலாந்து ஆய்வில் அதிர்ச்சி

Stress
Stress ( pixabay.com )

மனநலப் பிரச்னைகளுக்கு உள்ளாகி இருக்கும் நபர்களின் எண்ணிக்கை 7 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கால் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை உலக அளவில் அதிகரித்துள்ளதாகப் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடுமையான வேலைப்பளு மற்றும் இக்கட்டான குடும்பச் சூழலால் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளதாக இங்கிலாந்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

lockdown
lockdown

எசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார வல்லுநர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், பெருந்தொற்று சூழலில் மக்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் மனநலப் பிரச்னைக்கு உள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

மனநலப் பிரச்னைகளுக்கு உள்ளாகி இருக்கும் நபர்களின் எண்ணிக்கை 7 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

Stress
Stress

குறிப்பாக, மனநலப் பிரச்னைக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கையானது 11 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கணவர், குழந்தைகள் இருவரையும் பராமரித்துக்கொள்வதோடு வீட்டு வேலைகள் உட்பட அனைத்துக் கடமைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதால் பெண்களுக்கு மனநலப் பிரச்னைகள் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

``லாக்டௌனில் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகள்... பெண்களின் கவனத்துக்கு!'' - மகப்பேறு மருத்துவர்

வேலைப்பளு ஒருபுறமிருக்க, கடுமையான விதிமுறைகளுடன் கூடிய ஊரடங்கால் 34 சதவிகிதம் பெண்கள் தனிமையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, பெண்களைவிட ஆண்கள் குறைந்த அளவிலேயே மன நலப் பிரச்னைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஆய்வுக்கு உள்ளான ஆண்களில் 23 சதவிகிதம் என்ற அளவிலேயே மனநலப் பிரச்னைகளுக்கு உள்ளாகி இருப்பதோடு, 6 சதவிகிதம் பேர் அடிக்கடி தனிமையை உணர்ந்துள்ளனர்.

Stress
Stress
Pixabay

இணைய நேர்காணல்களை அடிப்படையாகக்கொண்டு நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கு முன்னதாக, பல ஆய்வுகள் இதே தலைப்பில் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வானது, உலக அளவில் படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், அலுவலகப் பொறுப்போடு வீட்டு வேலைகளின் ஈடுபாடும் குறையவில்லை என்பதையும், குடும்ப உறுப்பினர்களையும் மிக அக்கறையுடன் கவனித்து வருவதையும் காட்டுகிறது.

அடுத்த கட்டுரைக்கு