Published:Updated:

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி... முதல்கட்ட பரிசோதனைக்கு அனுமதி!

Dengue

இந்தத் தடுப்பூசி அறிமுகமாகும்பட்சத்தில், டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் டெங்கு இறப்புகள் குறையும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி... முதல்கட்ட பரிசோதனைக்கு அனுமதி!

இந்தத் தடுப்பூசி அறிமுகமாகும்பட்சத்தில், டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் டெங்கு இறப்புகள் குறையும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
Dengue

`யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ எனக் கேள்விப்பட்டிருப்போம். இதற்கேற்றாற்போல `மழைக்காலம் வரும் முன்னே, டெங்கு வரும் பின்னே’ எனச் சொல்லுமளவுக்கு மழைக்காலம் வந்தவுடன் தொற்றிக்கொண்டே வந்துவிடுகிறது டெங்கு காய்ச்சல். டெங்கு பரவாமல் இருக்க, ஒருபுறம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும், மற்றொரு புறம் தடுப்பூசிக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Vaccine
Vaccine
Photo by Kristine Wook on Unsplash

இந்நிலையில் நாட்டின் முன்னணி தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனமான, `இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட்' டெங்கு தடுப்பூசிக்கான முதல்கட்ட பரிசோதனைக்கு அனுமதி பெற்றுள்ளது. இந்தத் தடுப்பூசியானது அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து உருவாக்கப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்னும் இரண்டு வருடங்களில் இந்தத் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசி அறிமுகப்படும் பட்சத்தில், டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் டெங்கு இறப்புகள் குறையும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

டெங்கு
டெங்கு

டெங்கு வைரஸ் ஏடிஸ் வகை பெண் கொசுக்களால் மனிதர்களுக்குப் பரப்பப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பருவமழையின்போது தேங்கிய நீர் மற்றும் சுகாதாரமற்ற பகுதிகளால் பாதிப்பின் தீவிரம் அதிகரிக்கிறது.