இந்தியாவில் கொரோனா தொற்று பரவலாகக் காணப்பட்டாலும், கொரோனா தொற்று உறுதியாகும் விகிதம் (Positivity Rate) குறைந்து வருகிறது.
தினசரி மூன்று லட்சத்திற்கும் அதிகமான கோவிட் தொற்று எண்ணிக்கை பதிவாகிற நிலையில், இன்று இந்தியாவில் மட்டும் 2,55,874 புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதனடிப்படியில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது என மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தியாவில் பதிவாகியுள்ள கோவிட் தொற்று எண்ணிக்கை 5.62 சதவிகிதம் ஆகும். அதே நேரத்தில் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 93.15 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தற்போது, கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 22,36,842 ஆக உள்ளது.
அதேசமயம் கொரோனா தொற்று உறுதியாகும் விகிதம் (Positivity Rate) நேற்று 20.75 சதவிகிதம் என்றிருந்த நிலையில் இன்று 15.52 சதவிகிதமாகக் குறைந்துள்ளது, இந்த வாரத்தின் தொற்று விகிதம் 17.17 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரை உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 614 புதிய கொரோனா இறப்புகள் பதிவுவாகியுள்ளன. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து கோவிட் தொடர்பான இறப்புகள் இதுவரையில் 4,90,462 என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 162.92 கோடி தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது. பெரியவர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவில் 72 சதவிகிதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர், அதேசமயம் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் குறைந்தது 52 சதவிகிதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

உலகம் முழுவதிலும் தினசரி இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகிறது. மேலும் அடுத்த பத்து நாள்களுக்குள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளனர்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களோடு ஒப்பிடும்போது சென்னையில் கொரோனா தொற்று உறுதியாகும் விகிதம் (Positivity Rate) குறைந்து, தற்போது 12 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.