Published:Updated:

ZyCov-D: இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஊசியில்லா தடுப்பு மருந்து; என்ன ஸ்பெஷல்?

ZyCov-D
ZyCov-D ( photo://zyduscadila.com )

இதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை அறிந்துகொள்ள, 28,000 பேரை உள்ளடக்கிய மூன்றுகட்ட பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. இவர்களில் சுமார் ஆயிரம் பேர் 12 - 18 வயதுக்குட்பட்டவர்கள்.

கோவிட் தடுப்பூசிக்குப் பயப்படுவோருக்கெல்லாம் ஒரு நற்செய்தி. ஊசி இல்லாமல் செலுத்தும் புதிய தடுப்பு மருந்து ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

India Covid Outbreak
India Covid Outbreak
AP Photo / Channi Anand
கோவிட் 19 தடுப்பூசியால் உயிரிழந்த இந்தியாவின் முதல் நபர்; அதிகாரபூர்வமாக அறிவித்த அரசு!

கோவிட்-19 தொற்றுக்கு இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியைக் கண்டறிந்து, அது நாடு முழுவதும் செலுத்தப்பட்டும் வருகிறது. இந்நிலையில் ஊசியில்லாத, வலியில்லாத புதிய கோவிட் தடுப்பு மருந்து ஒன்றை அகமதாபாத்தைத் தலைமையகமாகக் கொண்ட Zydus Cadila என்ற மருந்து உற்பத்தி நிறுவனம் கண்டறிந்துள்ளது. ZyCov-D என்ற இந்தத் தடுப்பூசிக்கும் `அவசர கால பயன்பாடு' என்ற அடிப்படையில் அனுமதியளிக்க வேண்டும் என மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO), தேசிய மருந்து ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவற்றுக்கு இந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

மத்திய அரசின் உயிரிதொழில்நுட்பத் துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை அறிந்துகொள்ள, 28,000 பேரை உள்ளடக்கிய மூன்றுகட்ட பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. இவர்களில் சுமார் ஆயிரம் பேர் 12 - 18 வயதுக்குட்பட்டவர்கள்.

Covid 19 Outbreak
Covid 19 Outbreak

எப்படிச் செயல்படும்?

இந்த மருந்துக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் கோவிட்-19 தொற்றுக்கு DNA தொழில்நுட்பத்தில் உருவான முதல் தடுப்பு மருந்து இதுவாக இருக்கும். இந்தத் தடுப்பு மருந்திலிருக்கும் மரபுப்பொருளில் (Plasmid) கொரோனா வைரஸின் வெளிப்புறத்திலுள்ள முள்போன்ற அமைப்புள்ள ஸ்பைக் புரோட்டீன் கோடிங் செய்யப்பட்டிருக்கும். அதனை ஒருவரின் உடலில் செலுத்தும்போது உடலில் அந்த முள்போன்ற அமைப்பை உருவாக்கும். இதனை நோய் எதிர்ப்பு மண்டலம் அடையாளம் கண்டு, அதற்கெதிராக ஆன்டிபாடியை உற்பத்தி செய்யும்.

ஊசி இல்லாமல்... வலியில்லாமல்..!

28 நாள்கள் இடைவெளியில் மூன்று டோஸாக இதனை எடுத்துக்கொள்ள வேண்டும். வழக்கமாகச் செலுத்தப்படும் ஊசிக்குப் பதில், ஸ்பிரிங் மூலம் இயங்கும் ஒரு கருவியைக் கொண்டு இந்தத் தடுப்பு மருந்து நேரடியாக சருமத்தைத் துளைத்துச் செலுத்தப்படும். இதனால் ஊசி போடுவது போன்ற வலி தெரியாது என்று தெரிவிக்கின்றனர்.

ZyCov-D
ZyCov-D
photo://zyduscadila.com
Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்?

செயல்திறன்!

மூன்று கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இந்தத் தடுப்பு மருந்து, அறிகுறிகளுடன் நோய்த்தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடும்போது இந்தத் தடுப்பு மருந்து போட்டுக்கொண்டவர்களில் 67% பேருக்கு தொற்று ஏற்படவில்லை. மேலும் பரிசோதனைகள் இரண்டாம் அலை தீவிரமாக இருக்கும்போது செய்யப்பட்டன.

அந்தச் சமயத்தில் செய்யப்பட்ட ஆன்டிபாடி உருவாகியிருக்கும் பரிசோதனையில் (sero surveillance) 99 சதவிகிதம் உருமாறிய டெல்டா வைரஸ்தான் காணப்பட்டது. ``எங்களுடைய ஆய்வும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் செய்யப்பட்டது என்பதால் இந்தத் தடுப்பு மருந்து டெல்டா வகை வைரஸுக்கு எதிராகவும் செயல்படும்" என மருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷர்வில் பட்டீல் தெரிவித்துள்ளார். உருமாறும் வைரஸ்கள் தீவிரமாகும் பட்சத்தில் தடுப்பு மருந்தை அப்டேட் செய்யவும் முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு