Published:Updated:

கொலைக் குற்றத்தை விடவும் கடுமையான தண்டனை இதற்குத்தான்! - நான் அடிமை இல்லை - 18

ஒருவர் போதைப்பொருள் விவகாரத்தில் NDPS சட்டத்தின்படி, தகுந்த ஆதாரத்தோடு கைது செய்யப்பட்டால், அன்றைய தினத்திலிருந்தே அவர்களுக்கு தண்டனை தொடங்கிவிடும். அந்த வழக்கு 5 வருடங்கள், 10 வருடங்கள் கழித்து நிரூபிக்கப்பட்டால்கூட அவர்களால் அதுவரை சிறையிலிருந்து வெளியே வர முடியாது.

போதைப்பொருள் வைத்திருப்போர் மற்றும் அதை வைத்து பிசினஸில் ஈடுபடுவோருக்கு சட்டம் எப்படிப்பட்ட தண்டனைகளை விதிக்கிறது என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அதில் பிரத்யேகமான NDPS (Narcotics Drugs and Psychotropic Substances Act, 1985) சட்டம் பற்றி விரிவாகப் பேசுகிறார் ஐ.ஆர்.எஸ் அதிகாரியும் போதைப்பொருள் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருபவருமான வெங்கடேஷ் பாபு:

Drugs (Representational Image)
Drugs (Representational Image)
Photo by MART PRODUCTION from Pexels

``NDPS சட்டத்தின்படி, போதைப் பொருள்களைப் பயிரிடுதல், உற்பத்தி செய்தல், வைத்திருத்தல், விற்பனை செய்தல், வாங்குதல், நுகர்வு, பயன்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதில் எந்தச் செயலைச் செய்தாலும் ஒரே தண்டனைதான். விற்பவருக்கு ஒரு தண்டனை, பயன்படுத்துபவருக்கு வேறு தண்டனை என்பது கிடையாது.

ஆனால் ஒருவரிடம் கைப்பற்றப்படும் போதைப்பொருளின் அளவைப் பொறுத்து தண்டனை மாறுபடும். இதனை Graded Punishment என்பார்கள். ஒவ்வொரு போதைப்பொருளுக்கும் குறிப்பிட்ட குறைந்தபட்ச அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அப்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச அளவு போதைப்பொருள் ஒருவரிடம் இருந்தால் மட்டுமே அவர்களால் ஜாமினில் வெளிவர முடியும். குறைந்தபட்ச அளவுக்கு மேல் இருக்கும்பட்சத்தில் ஜாமினில் வெளிவருவதற்கு சட்டத்தில் இடமில்லை.

Drugs (Representational Image)
Drugs (Representational Image)
Photo by MART PRODUCTION from Pexels
பிட்காயின் மூலமும் போதைப்பொருள் விற்பனை; அதிகாரி சொல்லும் அதிர்ச்சி தகவல்! - நான் அடிமை இல்லை - 16

உதாரணத்துக்கு கோகைன் போதைப்பொருளின் தனிநபர் பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச அளவு 5 கிராம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றால், அதை வைத்திருக்கும் நபரிடமிருந்து கைப்பற்றி, அதை ஆய்வுக்கு அனுப்பி அது கோகைன்தானா, அதன் தூய்மைத்தன்மை (Purity) எத்தகையது ஆகியவற்றைக் கண்டறிவதற்கே 4 அல்லது 5 கிராம் தேவைப்படும். அந்தப் பரிசோதனையைச் செய்து அது உறுதிசெய்யப்பட்ட பிறகுதான் நீதிமன்றத்தில் நடைமுறைகளைச் செய்ய முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வர்த்தக பயன்பாடுக்கான அளவு என்று ஒன்று உள்ளது. அதை தனிநபர் பயன்பாடு என்ற வகையில் கொண்டு வர முடியாது. வர்த்தக பயன்பாட்டுக்கும் குறைந்தபட்ச அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தகப் பயன்பாடு என்று வரையறுக்கப்பட்டுள்ளதற்கு மேல் அதிக அளவு இருந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

Law (Representational Image)
Law (Representational Image)
Photo: Unsplash
பிள்ளைகளை அச்சுறுத்தும் போதை வலை: பெற்றோராக உங்கள் கடமை என்ன? - நான் அடிமை இல்லை - 15

தனிப்பட்ட நபரின் குறைந்தபட்ச அளவு பயன்பாட்டுக்கு, வர்த்தக பயன்பாட்டுக்கு எனத் தனித்தனி தண்டனைகள் உள்ளன. குறைந்தபட்ச அளவுக்கும் வர்த்தக பயன்பாட்டுக்கான அளவுக்கும் இடைப்பட்ட அளவு வைத்திருந்தால் குறைந்தது ஓராண்டு முதல் 10 ஆண்டுகள்வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படும். தண்டனைக் காலத்தை, வழக்கை விசாரிக்கும் நீதிபதி முடிவு செய்வார். குறைந்தபட்ச அளவுக்கும் குறைவாக வைத்திருக்கும் பட்சத்தில் ஜாமினில் வெளிவரக்கூடிய குற்றமாகக் கருதப்படும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்திய குற்றவியல் சட்டம் உள்ளிட்ட பெரும்பாலான சட்டங்களிலும் ஜாமினில் வெளிவருவதற்கான வாய்ப்புள்ளது. ஜாமின் வழங்கப்படாத சட்டங்கள் என்பவை அரிதானவை. சந்தன மரம், செம்மரம் கடத்துதல் போன்ற தடைசெய்யப்பட்ட பொருள்கள் பயன்பாடுதான் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வரும். ஆனால் போதைப்பொருள் சட்டம் மிகவும் கடுமையானது. ஜாமினில் வெளிவருவதற்கான வாய்ப்பு குறைந்தபட்ச அளவைக் காட்டிலும் குறைவாக வைத்திருப்பவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

IRS officer Venkatesh Babu
IRS officer Venkatesh Babu

ஒருவர் போதைப்பொருள் விவகாரத்தில் NDPS சட்டத்தின்படி, தகுந்த ஆதாரத்தோடு கைது செய்யப்பட்டால், கைது செய்யப்பட்ட தினத்திலிருந்தே அவர்களுக்கு தண்டனை தொடங்கிவிடும். அந்த வழக்கு 5 வருடங்கள், 10 வருடங்கள் கழித்து நிரூபிக்கப்பட்டால்கூட அவர்களால் அதுவரை சிறையிலிருந்து வெளியே வர முடியாது. குற்றவாளி என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பாகவே தண்டனையை அனுபவிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

மரண தண்டனை

ஒருவர் ஒருமுறை குற்றம் செய்துவிட்டு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி வெளியே வந்துவிட்டு, மீண்டும் அதே குற்றத்தைச் செய்தார் என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனைதான் கொடுக்க முடியும். மரண தண்டனையைத் தவிர வேறு எந்தத் தண்டனையும் கொடுக்க இந்தச் சட்டத்தில் இடமில்லை. அண்மையில்கூட மேற்கு வங்கத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Imprisonment
Imprisonment
போதை வலைக்கு இலக்காகும் பெரிய இடத்துப் பிள்ளைகள்; பின்னணி இதுதான் - நான் அடிமை இல்லை - 13

கொலைக் குற்றத்துக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை என வெவ்வேறு தண்டனைகளைக் கொடுப்பதற்கு சட்டத்தில் இடமுள்ளது. ஒரு கொலைக் குற்றவாளிக்கு என்ன தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்பதை அந்த நீதிபதிதான் முடிவு செய்வார். ஆனால் போதைப்பொருள் வழக்கில் நீதிபதிகளுக்கு அந்தச் சலுகை கிடையாது. மரண தண்டனை மட்டுமே வழங்க முடியும்" என்றார்.

குழந்தைகள் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபட்டால் அவர்களை என்ன செய்யும் இந்தச் சட்டம்.... அது அடுத்த அத்தியாயத்தில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு