Published:Updated:

Covid Questions: தடுப்பூசிக்குப் பிறகு கொரோனா பாசிட்டிவ்; எனக்கும் சிகிச்சை தேவைப்படுமா?

Corona Vaccination

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid Questions: தடுப்பூசிக்குப் பிறகு கொரோனா பாசிட்டிவ்; எனக்கும் சிகிச்சை தேவைப்படுமா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Published:Updated:
Corona Vaccination

இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் ஸ்வாப் டெஸ்ட் எடுத்தால் பாசிட்டிவ் என்று வருமா? எத்தனை நாள்களுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம்?

- ஆனந்தன்

மருத்துவர் பூங்குழலி
மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பூங்குழலி.

``கோவிட் தொற்றுக்கு எதிரான எந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டாலும், இரண்டாவது டோஸ் போட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அந்தத் தடுப்பூசி அளிக்கும் முழுப் பாதுகாப்பு உங்களுக்குக் கிடைக்க ஆரம்பிக்கிறது. தடுப்பூசியால் நமக்கு 3 வகையான பாதுகாப்பு கிடைக்கிறது. அதாவது, அது நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. நோய்த்தொற்றின் தீவிரத்திலிருந்து பாதுகாக்கிறது, நோய்த்தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பிலிருந்து பாதுகாக்கிறது. இப்போது நமக்கு இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசிகளும் சரி, வெளிநாடுகளில் கிடைக்கும் mRNA வகை தடுப்பூசிகளும் சரி தொற்றின் தீவிரத்தை கிட்டத்தட்ட 100 சதவிகித அளவுக்குத் தடுக்கும். ஆனால் அவை தொற்றே ஏற்படாமல் 100 சதவிகிதம் தடுக்காது.

கோவிட் தொற்றே வராமல் தடுக்க 60 முதல் 70 சதவிகிதம் வரை மட்டுமே அவை உதவும். இரண்டாவது டோஸ் போட்ட பிறகும் உங்களுக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தொற்று பாதித்தால் ஸ்வாப் டெஸ்ட்டில் பாசிட்டிவ் காட்டவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி வந்தால் அதற்கு வழக்கமாகத் தரப்படும் சிகிச்சையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

A health worker takes a nasal swab sample to test for COVID-19
A health worker takes a nasal swab sample to test for COVID-19
AP Photo/Anupam Nath

இதுவரை வந்த ஆய்வுகளின் படி, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், ஏறக்குறைய 100 சதவிகிதம் பேருக்கு அது அறிகுறிகளற்ற தொற்றுபோல வந்து விலகியிருக்கிறதே தவிர, தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை".

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!