Election bannerElection banner
Published:Updated:

கொரோனா `கான்டாக்ட் டிரேஸிங்' லாக்டெளன் தளர்வுக்குப் பிறகு சாத்தியமா? - மருத்துவர் விளக்கம்

கான்டாக்ட் டிரேஸிங்
கான்டாக்ட் டிரேஸிங்

கான்டாக்ட் டிரேஸிங் மூலம் கண்டறியப்படும் பலருக்குத் தொற்றுக்கான அறிகுறிகளே இல்லாத நிலையில் டெஸ்ட் செய்யப்படுகிறது.

கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப நாள்களில் அதன் பரவலைக் கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியில் தொடங்கி முழு ஊரடங்குவரை பல்வேறு நடவடிக்கைகளைப் பின்பற்றினோம். அதில் ஒன்றுதான் 'கான்டாக்ட் டிரேஸிங்'.

கான்டாக்ட் டிரேஸிங்
கான்டாக்ட் டிரேஸிங்

ஒருவருக்குக் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டால், அவர் எங்கெல்லாம் சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார், அவர் மூலம் யாருக்கெல்லாம் நோய் பரவியிருக்கலாம் என்பதை அவரின் மொபைலின் ஜி.பி.எஸ் மற்றும் ப்ளூடூத் உதவியுடன் கண்டறியும் முறையே கான்டாக்ட் டிரேஸிங்.

இதில் கண்டறியப்பட்ட, நோய் பரவியிருக்கலாம் என்ற சந்தேக வளையத்தின்கீழ் உள்ள அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்படும். டெஸ்ட்டில் பாசிட்டிவ் என்று வருவோர்க்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். நெகட்டிவ் என்று வருவோர் வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள். இந்த 'கான்டாக்ட் டிரேஸிங்' முறைக்காக 'ஆரோக்கிய சேது' என்ற பிரத்யேக செயலியும் கொண்டுவரப்பட்டது.

கான்டாக்ட் டிரேஸிங்
கான்டாக்ட் டிரேஸிங்

நம்மிடம் கொரோனா டெஸ்ட் செய்வதற்கான வசதிகளும் சாதனங்களும் குறைவாகவே உள்ளன. இந்தநிலையில் கான்டாக்ட் டிரேஸிங் மூலம் கண்டறியப்படும் பலருக்குத் தொற்றுக்கான அறிகுறிகளே இல்லாத நிலையில் டெஸ்ட் செய்கிறோம். ரிசல்ட் நெகட்டிவ் என்று வருகிறது. இதனால் உண்மையிலேயே டெஸ்ட் செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு டெஸ்ட் செய்வதற்கான வசதிகளும் சாதனங்களும் பற்றாக்குறையாகின்றன என்று ஒரு புகார் ஏற்கெனவே இருந்து வந்தது.

`கொரோனா இன்னும் உயிர்க்கொல்லி வைரஸ்தான்!’ - இத்தாலியின் கருத்தை மறுத்த WHO

தற்போது லாக்டெளன் வெகுவாகத் தளர்த்தப்பட்டுள்ளது. பேருந்துகளும் அலுவலகங்களும் இயங்க ஆரம்பித்துவிட்டன. பேருந்தில் அலுவலகம் செல்லும் ஒருவர் தினமும் பலரைச் சந்திக்க நேரிடலாம். இந்நிலையில் அவருக்குக் கொரோனா பாசிட்டிவ் என்று அறியப்பட்டால் அவரைச் சேர்ந்த அனைவரையும் 'கான்டாக்ட் டிரேஸிங்' முறையில் கண்டறிந்து கொரோனா டெஸ்ட் செய்வதென்பது எளிதானதல்ல. அவரைச் சேர்ந்த அனைவருக்கும் டெஸ்ட் செய்யும் அளவுக்குப் போதுமான டெஸ்ட் கிட்களும் நம்மிடம் இல்லை.

மருத்துவர் ஆனந்த்
மருத்துவர் ஆனந்த்

லாக்டெளன் தளர்வு அளிக்கப்பட்டு வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப முயலும் நமக்கு இனி 'கான்டாக்ட் டிரேஸிங் முறை' சாத்தியப்படுமா? என்பது குறித்து இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆனந்திடம் பேசினோம்.

"கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவரை கான்டாக்ட் டிரேஸிங்க்கு உட்படுத்தி அவரைச் சேர்ந்தவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கும் டெஸ்ட் செய்வதென்பது லாக்டெளன் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் சாத்தியமில்லை. கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவர் ஏறக்குறைய 240 பேருக்குத் தொற்றைப் பரப்ப வாய்ப்புள்ளதாகக் கொரோனா வைரஸ் குறித்து நடத்தப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது.

Corona virus
Corona virus

கொரோனா பாசிட்டிவ்வான ஒருவருடன் தொடர்புடைய 240 நபர்களைத் தேடி அவர்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுப்பதென்பது எளிதல்ல. அதற்கான வசதிகளும் நம்மிடம் இல்லை. அறிகுறிகளே இல்லாத ஒருவருக்கு டெஸ்ட் எடுக்கும்போது ஒருவிதத்தில் அது வீணானதுதான். இதனால் டெஸ்ட் தேவைப்படுவோருக்கு டெஸ்ட் கிட் இல்லாமல் போகலாம்.

`இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்!’ - திவாகரன், அமைச்சர் காமராஜ் சந்திப்பில் நடந்தது என்ன?

தற்போது ஒருவருக்குக் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்படும் வேளையில் 'கான்டாக்ட் டிரேஸிங்' மூலம் அவரைச் சேர்ந்தவர்களைக் கண்டறிவது பிரச்னையில்லை. ஆனால் அப்படிக் கண்டறியப்பட்டவர்களில் எல்லாருக்கும் டெஸ்ட் செய்யாமல் யாரெல்லாம் அறிகுறிகளுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே டெஸ்ட் செய்ய வேண்டும். மற்றவர்களைச் சிறிது காலம் வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கலாம்.

ஒருவேளை சில தினங்களில் அவர்களும் அறிகுறிகளை வெளிப்படுத்தும் வேளையில் அவர்களுக்கும் டெஸ்ட் செய்து சிகிச்சை அளிக்கலாம். இவ்வாறு செய்யும்போது நோய்ப் பரவலும் தடுக்கப்படும். டெஸ்ட் கிட் வீணாவதையும் தவிர்க்கலாம்.

 Test
Test

மற்றபடி கொரோனா தொற்று ஏற்பட்டவரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் டெஸ்ட் செய்வது தவறில்லை. வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்குத் திடீரென்று கொரோனா அறிகுறிகள் வெளிப்படும்பட்சத்தில் அவரின் குடும்பத்தில் உள்ளவர்களும் கொரோனா டெஸ்ட் செய்துகொள்ளலாம்" என்றார் மருத்துவர் ஆனந்த்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு