Published:Updated:

கோவிட்-19 காலம்: குழந்தைக்குத் திட்டமிடுவதை யாரெல்லாம் தவிர்க்கக் கூடாது?

கர்ப்பிணி
கர்ப்பிணி

கோவிட்-19 காலத்தில் குழந்தைக்குத் திட்டமிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான மருத்துவ காரணங்கள் எதுவும் இல்லை

சென்னையிலுள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் இதுவரை கோவிட்-19 பாதிக்கப்பட்ட 3,000 கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளது. அவர்களில் 200 குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே தாயிடமிருந்து தொற்று பரவியது. தொற்று பரவிய குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் லேசான பாதிப்பு அல்லது அறிகுறிகளற்ற பாதிப்பே இருந்தது. அனைத்து அம்மாக்களும் குழந்தைகளும் பத்திரமாக வீடு திரும்பியிருக்கின்றனர்.

``தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவும் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால் இந்த நேரத்தில் குழந்தையைத் திட்டமிடுவதற்கு யோசிக்கவே வேண்டாம்; தாராளமாகத் திட்டமிடலாம்" என்பதே மருத்துவரின் ஆலோசனை.

தாமதிக்காதீர்கள்!

கோவிட்-19 காலத்தில் குழந்தைக்குத் திட்டமிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான மருத்துவ காரணங்கள் எதுவும் இல்லை. பொருளாதார சிக்கல், போக்குவரத்தில் பிரச்னை, வேலையிழப்பு போன்ற காரணங்கள் இருக்கும்பட்சத்தில், 34 வயதுக்குட்பட்ட பெண், 40 வயதுக்குட்பட்ட ஆண் என்றால் ஆறு மாத காலம் திட்டமிடுவதைத் தள்ளிப்போடலாம். இந்த வயதைக் கடந்தவர்கள், பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற வாழ்வியல் சார்ந்த நோய்கள் இருப்பவர்கள் தள்ளிப்போடக் கூடாது.

``டாக்டர் எங்களுக்கு இந்தக் குழந்தை வேண்டாம். கலைச்சிடுங்க!"

நீண்ட நாள்களாகக் குழந்தையில்லாமல் தவித்த தம்பதியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு மருத்துவரே அதிர்ந்துவிட்டார். திருமணமாகி பல ஆண்டுகளாகக் குழந்தைக்காகக் காத்திருந்து, தற்போது அது சாத்தியமாகியுள்ள நிலையில், வேண்டாம் என்று கூறுவது ஏன்...

``இந்த நேரத்துல குழந்தை பிறந்து அதுக்கு கொரோனா வந்திருச்சுன்னா என்ன பண்றது... கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிச்சதும் குழந்தை பெத்துக்கிறோம்" என்ற பதிலைக் கேட்டு மருத்துவர் அதிர்ந்தார்.

குழந்தை திட்டமிடல் சரியா?
குழந்தை திட்டமிடல் சரியா?

பல தம்பதியரின் மனநிலையும் இன்று இப்படித்தான் மாறியிருக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலில் இந்தியா நாளுக்கு நாள் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நோய்ப் பரவலில் இந்தியா உச்சநிலையை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது என்பது நிபுணர்களின் கணிப்பு. அப்படியென்றால் நோயின் தாக்கம் இன்னும் சில மாதங்களோ பல மாதங்களோ நீடிக்கலாம். இந்தச் சூழலில் தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தைத் தள்ளிப்போடுவது சரியானதுதானா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து விரிவாக அலசி வழிகாட்டும் கட்டுரையை அவள் விகடன் இதழில் வாசிக்க > கோவிட் -19 காலத்தில் குழந்தைக்குத் திட்டமிடலாமா? https://bit.ly/32IqFrz

கோவிட் -19 காலத்தில் குழந்தைக்குத் திட்டமிடலாமா? https://bit.ly/32IqFrz

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
அடுத்த கட்டுரைக்கு