Published:Updated:

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னும் கொரோனா வருமா... தடுப்பூசி அறிவியல் சொல்வது என்ன?

Pfizer-BioNTech COVID-19 vaccine
Pfizer-BioNTech COVID-19 vaccine ( AP Photo/Frank Augstein, Pool )

தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதும்; அதன்பின் மாஸ்க், சமூக இடைவெளி எல்லாம் தேவையில்லை என நினைக்கிறீர்களா? அது தவறு. தடுப்பூசி அறிவியல் என்ன சொல்கிறது என்பதை விரிவாக இந்தக் கட்டுரையில் படியுங்கள்.

கொரோனா தொற்றின் பாதிப்பு உச்சத்தை அடைந்த நாள் முதல் நம்மில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு, கோவிட்19 நோயைத் தடுக்கும் தடுப்பூசி எப்போது கிட்டும், நோய் வராத நாம், நோய்த் தொற்றில் இருந்து எப்படி நம்மைக் காத்துக்கொள்வது என்பதுதான். சுமார் 33 மருத்துவ ஆய்வு நிறுவனங்களுடைய அதி தீவிர அறிவியல் தேடலில் சுமார் 7 ஆய்வகங்களில், கொரோனா நோய் தொற்றான SARS-CoV-2 வைரஸைத் தடுத்திடும் தடுப்பூசி கண்டுபிடிப்பு பணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளன.

A nurse prepares a shot of the Pfizer-BioNTech COVID-19 vaccine at Guy's Hospital in London
A nurse prepares a shot of the Pfizer-BioNTech COVID-19 vaccine at Guy's Hospital in London
AP Photo/Frank Augstein, Pool

இந்த 7 தடுப்பூசிகளில், அமெரிக்காவின் மாடர்னா (Moderna) தடுப்பூசி, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனிக்கா (AstraZeneca) தடுப்பூசி, ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி மற்றும் நம் இந்திய நாட்டின் Bharat Biotech ஆய்வகத்தின் கோவாக்ஸின் (Covaxin) தடுப்பூசிகள் முன்னிலை வகிக்கின்றன.

இதில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இங்கிலாந்தின் ராணி எலிசபெத்திடமிருந்து ஆரம்பித்து அந்த மாகாணம் முழுவதும் கொடுக்கப்பட உள்ளதாகச் செய்திகள் சொல்கின்றன. மேற்கூறிய ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமாக அவர்களுடைய தடுப்பூசியின் பாதுகாப்பு பற்றி ஆய்வறிக்கை சமர்ப்பித்திருக்கின்றன.

சிலர் 100% பாதுகாப்பு, சிலர் 97% பாதுகாப்பு என விகிதாசார முறையில் அறிவிக்கின்றனர். இதற்கிடையில் நம் நாட்டில் நடக்கும் மூன்றாம் கட்ட மனித தடுப்பூசி பரிசோதனையில், பங்குகொண்ட அமைச்சருக்கு கொரோனா வந்ததாகவும் முதலில் கூறப்பட்டது. பின்னர் இதுகுறித்து விரிவான விளக்கமும் தரப்பட்டது. அதுகுறித்து கீழே உள்ள கட்டுரையில் படிக்கலாம்.

தடுப்பூசி போட்டும் அமைச்சருக்கு கொரோனா... சிக்கலை விளக்கும் பாரத் பயோடெக்!
Boxes containing the Pfizer-BioNTech COVID-19 vaccine
Boxes containing the Pfizer-BioNTech COVID-19 vaccine
AP Photo/Morry Gash, Pool

ஒரு பெருந்தொற்று அல்லது ஒரு மிக மோசமான தொற்றுநோய் மனிதர்களைத் தாக்கி, அவர்களுக்கு அடுத்தடுத்து மிகப்பெரிய உடல்நல பாதிப்புகளை உருவாக்கி, ஏதேனும் ஓர் உறுப்பு சேதமோ, உயிர் பாதிப்போ நிகழ்ந்தால், அந்தக் கிருமியையும் அதன் நோய் தரும் நீட்சியையும் தடுக்கவே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளால்தான் இன்றளவில் நம்மால் மிகப்பெரிய நோய் அச்சுறுத்தல்களான பெரியம்மை, கக்குவான் இருமல், போலியோ, காலரா, ரோட்டா வைரஸ் தொற்று ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சில நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் மிக பயங்கரமான நோயாக இருந்த டைஃபாய்டு கூட தற்போது மிகச்சாதாரணமாக இரு தவணை ஊசிகளால் தடுக்கப்பட மிக முக்கிய காரணம் தடுப்பூசி அறிவியல்தான். தற்சமயம் 40 வயதைத் தாண்டி வாழும் பலருக்கும் அவர்தம் பள்ளி நாள்களில் யாரேனும் ஒரு நபர் போலியோவால் முடமாக்கப்பட்டு ஊன்றுகோலுடனோ தவழ்ந்தோ பள்ளிக்கு வந்தது நினைவு இருக்கலாம். ஆனால், இன்று நம் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் அத்தகைய கொடுமை இல்லை. காரணம் போலியோ தடுப்பு மருந்து.

An example of the Pfizer COVID-19 vaccine vial
An example of the Pfizer COVID-19 vaccine vial
AP Photo/Andrew Harnik, Pool

தடுப்பூசிகள் ஒவ்வொரு நோய்க்கும் வெவ்வேறு விதமான பாதுகாப்பை அளிக்கும். தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா எனும் MMR தடுப்பூசிகள் பல ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கு வழக்கமாகக் கொடுக்கப்படுகின்றன. இது குழந்தைகளைத் தாக்கும் மூன்று கொடுமையான நோய்க்கான தடுப்பூசி. இந்த ஊசியில் இருக்கும் MMR மூன்று நோய்களுக்கும் ஒரே அளவு பாதுகாவல் தராது என்கிறார்கள். ஒவ்வொன்றும் 95%, 78%, 85% என்ற அளவு பாதுகாவல்தான் அளிக்கும்.

இதென்ன தடுப்பூசி பாதுகாவல்?

ஒரு தொற்றுநோய் நம்மைத் தொற்றும் நேரத்தில், அது சாதாரண தொற்றாக சாதாரணமாகக் கடந்து போகலாம். இல்லை, அது மிகத்தீவிர நோயாக மாறி பாதிக்கப்பட்ட மனிதருடைய உடல் உறுப்பையும், அதன் செயல்பாட்டையும் வெகுவாகத் தாக்கிட வாய்ப்பு உண்டு. அப்படி நடக்கும் அதிதீவிர தாக்குதல்தான் அந்தத் தொற்றுநோயின் விளைவு.

global headquarters of AstraZeneca in London
global headquarters of AstraZeneca in London
AP Photo/Kirsty Wigglesworth, File

உதாரணமாக, மோசமாகப் பாதிக்கும் மூளை டி.பி (TB Meningitis), முதுகுத்தண்டு டி.பி (TB Spine), போலியோ தரும் உடல் ஊனம், மூளை முடக்குவாதம் (Paralytic Poliomyelitis), வெரிசெல்லா ஏற்படுத்தும் மூளைக் காய்ச்சல் (Varicella Encephalitis) என இவ்வகை தொற்றுகள் தரும் உயிரிழப்புகளைக் களைவதும், அதுவரை அந்தத் தொற்று, பயணம் செய்வதைத் தடுப்பதற்கும்தான் தடுப்பூசி!

நாம் வெளியில் இருந்து கொடுக்கும் வைரஸோ, செயலிழக்கப்பட்ட கிருமியோ, கொடுமையான அந்தத் தொற்று ஏற்படுத்தும் மிக மோசமான பாதிப்பைத் தவிர்க்கும் வகையில், நம் உடல் தடுப்பாற்றல் அணுக்களை இதே தொற்று மீண்டும் வந்தால் அதை மிக தீவிரமாக மாறாமல் Antigen Induced Antibody மூலம் மட்டுப்படுத்த முனையும்.

அதுதான் தடுப்பூசி பாதுகாவல். கொரோனாவைப் பொறுத்தவரை நுரையீரல் பாதிப்பு (COVID-19 Pneumonia) மற்றும் அடுத்தடுத்த நோய் நீட்சியை (Post COVID Syndrome) தடுத்திட குறிப்பிட்ட அளவு நம்மைப் பாதுகாக்கும். ஆனால், இப்போது ஆய்வில் இருக்கும் தடுப்பூசிகள், இரண்டு தவணைகளாக (Primary & Booster Dose) கொடுக்கப்பட்டால்தான் அந்தப் (Antigen Neutralising Antibody) பாதுகாவல் நமக்கு கிட்டும்.

Mask
Mask
AP Illustration/Peter Hamlin
ஃபைஸர் தடுப்பூசி... அனுமதி கொடுத்த பிரிட்டன்... முடிவுக்கு வருகிறதா கொரோனா?

முதல் தவணை தடுப்பூசிக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசிக்கும் இடையில்கூட நாம் முறையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காது போனால் நோய் நிச்சயமாகத் தொற்றும். இதுதான் ஹரியானா அமைச்சர் விவகாரத்திலும் நடந்தது.

அது தீவிரமும் அடையும். எனவே, நமக்குத் தடுப்பூசி கிடைத்தாலும் இரண்டு தவணைகளாக முழுமையான தடுப்பூசிகளைச் செலுத்தும்வரை மிக எச்சரிக்கையாகவும் தகுந்த நோய்த் தடுப்பு முறைகளோடும் இருக்க வேண்டும், தனிமனித விலகல், கை சுத்தம் பேணுதல் போன்றவைதான் நம்மைக் காக்கும்.

அடுத்த கட்டுரைக்கு