Published:Updated:

ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிகளின் காலாவதி தேதி நீட்டிப்பு; இது சரிதானா?

Covaxin
News
Covaxin ( AP Photo | Anupam Nath )

கோவாக்சின் தடுப்பூசியின் காலாவதி தேதி உற்பத்தி செய்ததிலிருந்து 6 மாத காலம் என முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி கோவாக்சினை உபயோகப்படுத்துவதற்கான காலத்தை ஒன்பது மாதங்கள் முதல் 12 மாதங்களாக அதிகரிப்பதற்கு அனுமதியளித்துள்ளதாகத் தெரிகிறது.

தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு‌ நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மத்திய அரசு‌ 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்ததைத் தொடர்ந்து ஜனவரி 3-ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமானது. ஏற்கெனவே சுமார் 6 லட்சம் பேர் மத்திய அரசின் கோவின் (cowin) செயலியில் தடுப்பூசி செலுத்துவதற்காகப் பதிவுசெய்து காத்திருக்கின்றனர்.

Covid vaccine registration
Covid vaccine registration

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பள்ளி மாணவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளதால், இந்தத் தடுப்பூசிக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோவாக்சினைத் தயார்செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்கெனவே உற்பத்திசெய்து உபயோகப்படுத்தாத கோவாக்சின் தடுப்பூசியின் காலாவதி தேதியை மாற்றப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, மருந்துகளின் குப்பியில் அச்சிடப்பட்டிருந்த காலாவதி தேதி முடிந்த நிலையில், அவற்றை அகற்றிவிட்டு புதிய காலாவதி தேதியை அச்சிடப்போவதாகத் தெரிகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கோவாக்சின் தடுப்பூசியைப் பொறுத்தவரையில் அதற்கான காலாவதி தேதி உற்பத்தி செய்ததிலிருந்து 6 மாத காலம் என முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பொதுவாக, ஒவ்வொரு தடுப்பூசிக்கான காலாவதி தேதியை வெவ்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நிர்ணயம் செய்கிறார்கள். அதாவது, தடுப்பூசி எல்லா சூழலிலும்‌ காலநிலையிலும் எத்தனை நாள்கள் வரை அதன்‌ தன்மை, செயல்திறன் மாறாமல் நன்றாக உள்ளது என்பதை வைத்து நிர்ணயிக்கிறார்கள்.

Bharat Biotech
Bharat Biotech
AP Photo/Mahesh Kumar A

தற்போது இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி (Drugs controller General of India) கோவாக்சினை உபயோகப்படுத்துவதற்கான காலத்தை ஒன்பது மாதங்கள் முதல் 12 மாதங்களாக அதிகரிப்பதற்கு அனுமதியளித்துள்ளதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து ‌பாரத் பயோடெக் நிறுவனம்‌ உபயோகப்படுத்தப்படாத தடுப்பூசிகளில் காலாவதி தேதியை மாற்றி அச்சடிக்கும்‌ வேலையைத் தொடங்கி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் இதுபோன்ற தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டபோது, ``பொதுவாகவே தடுப்பூசிகளுக்கெல்லாம் அவற்றை உருவாக்கும்போது ஒரு குறிப்பிட்ட கால அளவுவரை அதை உபயோகிக்கலாம் என காலாவதி தேதி நிர்ணயிக்கப்படும். சாதாரணமாக நாம் உபயோகிக்கும் மருந்து மாத்திரைகளைப் போலவே அதற்கும் காலாவதி தேதி உண்டு.

தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன்
தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன்

ஒவ்வொரு தடுப்பூசிக்கும் இந்தக் கால அளவு மாறுபடும். கோவிட்-19 தடுப்பூசிகளான கோவாக்சின்,கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் அவசர பயன்பாட்டுக்காக, மிகவும் அவசரமாக உருவாக்கப்பட்டவை. எனவே அவற்றை உருவாக்கியபோது அவற்றின் காலாவதி தேதி குறைந்தபட்சமாக ஆறு மாதங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அவை பயன்பாட்டுக்கு வந்தே பல மாதங்கள் ஆகிவிட்டன.

தற்போது பதப்படுத்தி வைக்கப்பட்ட கோவாக்சின் டோஸ்களை சோதித்துவிட்டு அதன் தன்மையும் செயல்திறனும் மாறாமல் இருப்பதால்தான் காலாவதி காலம் ஒரு வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் 12 மாதங்கள் என்பது இன்னும் அதிகரிக்கப்படக்கூட வாய்ப்புள்ளது. செயல்திறன் பாதிக்கப்படாத பட்சத்தில் இருப்பு வைத்துள்ள தடுப்பூசிகளை உபயோகிப்பதால் உடலுக்கு எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாது.

COVAXIN | கோவேக்சின்
COVAXIN | கோவேக்சின்

உரிய ஆய்வுகளுக்குப் பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்பட‌ வாய்ப்பில்லை. தற்போது சிறுவர்களுக்கும் தடுப்பூசி போட ஆரம்பித்திருப்பதாலும்,ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும் என்பதாலும் தடுப்பூசிகள் அதிகம் தேவைப்படும். இந்தத் தடுப்பூசிகளின் காலாவதி காலம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தடுப்பூசித் தட்டுப்பாடு ஏற்படாமலும் தடுக்க முடியும்"என்கிறார்.