Published:Updated:

கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை பலன் அளிக்குமா?

சித்த மருத்துவம் (Representational Image)
News
சித்த மருத்துவம் (Representational Image)

சித்த மருத்துவத்தில் கொரோனா அறிகுறிகளுக்கு 50 மருந்துகள் உள்ளன.

தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஏறுமுகத்திலேயே தொடர்ந்து நீடிக்கிறது. பாதிப்பும் தீவிரமும் அதிகரித்துள்ளதால், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிப்போர் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்துவரும் நிலை இருக்கிறது. இதுபோன்ற இறுக்கம் நீடித்துவரும் வேளையில் சற்று ஆறுதலை அளிக்கிறது, சித்த மருத்துவத்தின் பாசிட்டிவ் பக்கங்கள்.

National Institute of Siddha, Tambaram
National Institute of Siddha, Tambaram

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் சார்பில் சிகிச்சையளிக்கப்பட்ட 150 நோயாளிகள் மற்றும் சென்னை புழல் சிறையில் சிகிச்சையளிக்கப்பட்ட 23 நோயாளிகள், கொரோனாவிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர். அதுவும் வெறும் 5 நாள்களிலேயே சிகிச்சை பெற்றவர்களுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதையடுத்து, சென்னையிலுள்ள கோவிட்-19 பராமரிப்பு மையங்களில் சித்த மருத்துவ சிகிச்சையளிக்கும்படி தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.மீனாகுமாரியிடம் பேசினோம்:

``மார்ச் மாதத்திலிருந்தே கபசுரக் குடிநீரை கொரோனா தடுப்பு மருந்தாக வழங்கிவருகிறோம். தாம்பரத்தில் எங்கள் நிறுவனத்தின் அருகில் நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்கள், முன்னிலைப் பணியாளர்கள், போலீஸார், மாணவர்கள் என சுமார் 20,000 பேருக்கு தடுப்பு மருந்துகளைக் கொடுத்துவந்தோம்.

அதனைத் தொடர்ந்து எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து இரண்டு ஆய்வுகளைச் செயல்படுத்தினோம். அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினோம். ஐந்து நாள்களில் 13 நெகட்டிவ் என்று முடிவு வந்தது. அதனைத் தொடர்ந்து 34 பேருக்கு கொடுத்தோம். அவர்களில் 27 பேர் ஐந்து நாள்களில் குணமடைந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

99 சதவிகித குணம்!

தற்போது வரை 150 பேருக்கு சிகிச்சையளித்திருக்கிறோம். அவர்களில் 92 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 58 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஆய்வில் 22 முதல் 63 வயதுவரையுள்ள ஆண், பெண் இருவரையும் ஈடுபடுத்தினோம். வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் இடம்பெற்றிருந்தனர். எங்கள் ஆய்வின்படி, 99 சதவிகிதம் வெற்றி விகிதம் கிடைத்துள்ளது.

National Institute of Siddha Director Meenakumari
National Institute of Siddha Director Meenakumari

லேசான மற்றும் மிதமான கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவருகிறோம். அதேபோன்று கபசுரக் குடிநீரால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றனவா என்பதையும் ஆராய்ந்துவருகிறோம்.

சீனாவில் 5, சித்தாவில் 50

கபசுரக் குடிநீர் கொடுத்த மூன்று நாள்களிலேயே நல்ல மாற்றம் தெரிகிறது. அதன் காரணமாக, சீக்கிரமாக நோயைக் குணப்படுத்தும் வகையில் அதனுடன் மருந்து மற்றும் அழகுப் பொருள்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறு சித்தா மருந்துகளையும் கொடுத்துவருகிறோம்.

சில மருந்துகள் இணைந்த மூன்று வகையான கூட்டு மருந்துகளைத் தடுப்பு நடவடிக்கைக்காகவும் சிகிச்சைக்காகவும் தயார்நிலையில் வைத்திருக்கிறோம். சித்த மருந்துகள் நுரையீரல் தொற்று ஏற்பட்டவர்களுக்கும் நல்ல பலனைக் கொடுக்கும்.

Siddha treatment (Representational Image)
Siddha treatment (Representational Image)

கொரோனா முதன்முதலில் தோன்றிய சீனாவின் சிகிச்சையில் பாரம்பர்ய மருத்துவத்துக்கும் பெரும்பங்கு இருந்தது. சீனா, நான்கைந்து பாரம்பர்ய மருந்துகளைக் கொடுத்துதான் சிகிச்சையளித்தது. ஆனால், தமிழர்களின் பாரம்பர்ய மருத்துவத்தில் கொரோனா அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க 50 மருந்துகள் உள்ளன.

அவற்றைக் கொண்டு புதிய புதிய கூட்டு மருந்துகளைக் கண்டறிந்தால், இன்னும் சிறப்பாக கொரோனா நோயைக் கையாள முடியும். சென்னையில் அதிகரித்துவரும் நோயின் தாக்கத்தை எளிதில் குறைக்க முடியும்.

siddha (Representational Image)
siddha (Representational Image)

பராமரிப்பு மையங்களில் சித்த மருத்துவம்

தற்போது சென்னையில் செயல்பட்டுவரும் கோவிட்-19 பராமரிப்பு மையங்களில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், அரும்பாக்கம் அறிஞர் அண்ணா சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆகியவற்றிலுள்ள சித்த மருத்துவர்களைப் பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் தெரிவித்துள்ளோம். ஒரு மையத்தில் நான்கு சித்த மருத்துவர்களைப் பணியமர்த்தினால், வெகு விரைவாக நோயாளிகளைக் குணப்படுத்த முடியும்" என்றார்.

நிதியின்றி தடுமாற்றம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையில் முனைப்புடன் செயல்படும் மத்திய அரசின் நிறுவனம் போதிய நிதியின்றி தடுமாறிவருகிறது. அங்கு, சுமார் 500 மருத்துவர்கள் பணியாற்றிவருகின்றனர். கோவிட்-19 சிகிச்சைக்குச் செல்லும்போது அணியும் கவச உடைகள், மாஸ்க், சானிட்டைஸர் போன்ற அனைத்துக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. தட்டுப்பாடு இருப்பதால், அனைத்துப் பணியாளர்களுக்கும் கவச உடைகள் வழங்க முடியவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

Corona
Corona

சானிட்டைஸர் வாங்குவதற்கு மட்டும் நிறுவனத்தின் சொந்த நிதியிலிருந்து இதுவரை ரூ.10 லட்சம் செலவழித்துள்ளனர். மருந்துக்கான மூலப்பொருள்கள் கிடைப்பதிலும் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று அங்கு பணியாற்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மத்திய ஆயுஷ் அமைச்சகம், தமிழக அரசு இருவரும் நிதியுதவி அளித்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பது அங்கு பணியாற்றும் மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.