Election bannerElection banner
Published:Updated:

கடந்த வருடம் பரபரப்பாகப் பேசப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை... தற்போதும் வழங்கப்படுகிறதா?

பிளாஸ்மா தெரபி
பிளாஸ்மா தெரபி

தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துவிட்ட நிலையில் `பிளாஸ்மா தெரபி' இந்தியாவில் எந்த நிலையில் இருக்கிறது?

கொரோனா முதல் அலையின்போது, கோவிட் தொற்று வந்தவர்களைக் காப்பாற்றுவதற்கு கபசுர குடிநீரில் ஆரம்பித்து பிளாஸ்மா தெரபி வரை முயற்சி செய்தார்கள் மருத்துவர்கள். இதில் `பிளாஸ்மா தெரபி'யை உயிர் காக்கும் சிகிச்சை முறையாகக் கையாண்டனர் மருத்துவர்கள். `பிளாஸ்மா தெரபி' என்றால் என்ன என்பவர்களுக்கு, அதுபற்றிய சின்ன நினைவூட்டல்.

ரத்தமாற்று சிகிச்சை நிபுணர் செல்வராஜன்
ரத்தமாற்று சிகிச்சை நிபுணர் செல்வராஜன்

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு, பூரணமாகக் குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் (நோய் எதிர்ப்பு அணுக்கள்) இருக்கும். அவற்றைப் பிரித்தெடுத்து, நோய் பாதித்துள்ளவர்களின் உடலில் செலுத்தும்போது, அந்த ஆன்டிபாடிகள் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி மேற்கொண்டு வைரஸை பெருகவிடாமல் கட்டுப்படுத்தும். இதுதான் பிளாஸ்மா தெரபி. இந்த ஆன்டிபாடியால் குணமடைந்த ஒருவர், மற்றவர்க்கு தன்னுடைய பிளாஸ்மாவை தானமாகத் தரலாம். அந்த வகையில் இதுவொரு தொடர் சிகிச்சை முறை. சென்ற வருடம் அமெரிக்கா, சீனா போன்ற பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த பிளாஸ்மா தெரபி அதன் பிறகு, இந்தியாவிலும் மேற்கொள்ளப் பட்டது. தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துவிட்ட நிலையில் `பிளாஸ்மா தெரபி' இந்தியாவில் எந்த நிலையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ரத்த மாற்று சிகிச்சை நிபுணர் செல்வராஜனிடம் பேசினோம்.

``பிளாஸ்மா தெரபி தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் 105 வயது கொரோனா நோயாளி ஒருவருக்கு பிளாஸ்மா தெரபி செய்து காப்பாற்றியிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. மருத்துவர்கள் பலர் பிளாஸ்மா தெரபி பயனுள்ளதாக இருப்பதாகச் சொல்கிறார்கள். பயன்பாட்டு முறையில் வந்த ரிப்போர்ட்டை நான் உங்களுக்குச் சொல்கிறேன். அதே நேரம், இந்தச் சிகிச்சை முறை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அரசாங்கமும் இதுதொடர்பான தெளிவான அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. அமெரிக்காவில் தற்போது இந்தச் சிகிச்சை முறையைத் தொடரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Blood
Blood
‘’கொரோனா பரவல்… மோடி அரசு இந்திய மக்களைக் கைவிட்டுவிட்டது” - விமர்சிக்கும் சர்வதேச ஊடகங்கள்!

சென்ற வருடம் பிளாஸ்மா தெரபி தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. தற்போது, பிளாஸ்மா தெரபி வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிற மையங்களில் இருந்து ஃபீட்பேக் கேட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படலாம். இந்த நேரத்தில் இன்னொரு சிக்கலும் வந்திருக்கிறது. மே 1-ம் தேதிக்குப் பிறகு 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருமே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்பதால், இரண்டு பூஸ்டருக்கும் சேர்த்து 56 நாள்கள் கழித்துதான் ரத்தம் கொடுக்க முடியும். இதனால், ரத்த தானம், பிளாஸ்மா தானம் இரண்டிலும் பற்றாக்குறை வரலாம்'' என்கிறார் அவர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு