Published:Updated:

̀`அதிக செலவு!' - ஒமிக்ரான் பரிசோதனைகளைக் குறைக்கிறதா தமிழக அரசு?

A health worker takes a nasal swab sample
News
A health worker takes a nasal swab sample ( Mahesh Kumar A )

``வைரஸ் வேகமாகப் பரவுவதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு ரேண்டமாகத்தான் பரிசோதனை செய்யப்படும். இது வைரஸின் பரவல்தன்மையை மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் தெரிந்துகொள்வதற்காகச் செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனை என்பது ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படும்."

ஒமிக்ரான் பரவல் தொடங்கி சில தினங்களிலேயே தமிழகத்தில் 3-ம் அலை தொடங்கிவிட்டது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். இந்நிலையில் இரண்டாம் அலையில் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வேரியன்டும் இன்னும் மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. புதிய வேரியன்டான ஒமிக்ரானும் பரவத் தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் பாதிப்புள்ள அனைவருக்கும் செய்யப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

A health worker takes a nasal swab to test for COVID-19
A health worker takes a nasal swab to test for COVID-19
Manish Swarup

அதாவது, RTPCR பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வரும் அனைவருக்கும் ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படுவதில்லை. தோராயமாகவே (Random) ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படுகிறது. உதாரணத்துக்கு, பத்து கோவிட் பாசிட்டிவ் மாதிரிகளில் ரேண்டமாக ஒன்றிரண்டு மாதிரிகளை மட்டுமே ஒமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்புவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஒமிக்ரான் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவோ மாறவோ செய்யலாம் என்று கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதுபற்றி பெயர் குறிப்பிட விரும்பாத பொது சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், ``வைரஸ் வேகமாகப் பரவுவதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு ரேண்டமாகத்தான் பரிசோதனை செய்யப்படும். இது வைரஸின் பரவல்தன்மையை மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் தெரிந்துகொள்வதற்காகச் செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனை என்பது ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படும். இது பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம் இல்லை.

COVID-19 screening in Mumbai
COVID-19 screening in Mumbai
AP Photo/Rajanish kakade

சர்வேதச விமானங்கள் மூலம் தமிழகத்துக்கு வருகிறவர்களில் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பைக் கண்டறியும் பரிசோதனை செய்யப்படும். அதுதவிர, கும்பல் கும்பலாக (கல்லூரி போன்ற இடங்களில்) தொற்று ஏற்படுகிறவர்களுக்கும் ஒமிக்ரான் பரிசோதனையைச் செய்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

RTPCR பரிசோதனையிலேயே இரண்டு ஜீன், மூன்று ஜீன் கண்டுபிடிக்கும் கிட் உள்ளது. அதில் S எனும் ஜீன் இல்லை என்றால் (S gene drop) அது ஒமிக்ரானாக இருக்கலாம் என்ற பரவலான நம்பிக்கை இருக்கிறது. S ஜீன் இல்லாத மாதிரிகளை WGS (Whole Genome Sequencing) எனப்படும் மரபணு வரிசையைக் கண்டறியும் பரிசோதனைக்கு அனுப்புவோம்.

அதில் ஒமிக்ரானா என்பது உறுதிசெய்யப்படும். ஆனால் தற்போது RTPCR பரிசோதனையிலேயே ஒமிக்ரான் வைரஸையும் சேர்த்துக் கண்டறியும் தொழில்நுட்பத்தை பெங்களூரு NIMHANS மருத்துவமனை கண்டறிந்துள்ளது. அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

Health workers conduct COVID-19 antigen tests in New Delhi
Health workers conduct COVID-19 antigen tests in New Delhi
AP Photo / Manish Swarup

இந்தியாவில் WGS பரிசோதனையைச் செய்ய மொத்தம் ஏழு மத்திய அரசு ஆய்வகங்கள்தான் இருக்கின்றன. இந்தப் பரிசோதனையைச் செய்ய ஒரு மாதிரிக்கு ரூ.4,000 செலவாகும். தனியார் ஆய்வகங்களில் வெறும் RTPCR பரிசோதனை செய்வதற்கு மட்டுமே வசதி உள்ளது. WGS செய்யும் வசதி இல்லை.

புதுவகை நோய்கள் பரவும்போது அதற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள, சர்வதேச அளவில் உலக சுகாதார நிறுவனம், இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) இரண்டும்தான் என்ன பரிசோதனைகளைச் செய்ய வேண்டும், யாருக்கெல்லாம் செய்ய வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவார்கள். அதைத்தான் நாங்கள் பின்பற்றுவோம்" என்றார் அவர்.

இதுபற்றி பொது சுகாதாரத் துறை அதிகாரி செல்வவிநாயகத்திடம் பேசினோம். ``பொதுமக்களுக்கு கோவிட் பாசிட்டிவ்வா, நெகட்டிவ்வா என்ற தகவல் மட்டுமே தேவைப்படும். ஒமிக்ரான் வைரஸ் பாதித்துள்ளதா என்பது போன்ற விவரங்கள் அவர்களுக்கு உதவாது.

பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம்
பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம்

காரணம், எந்த வேரியன்ட் பரவியிருந்தாலும் அறிகுறிகளின் அடிப்படையில் ஒரே சிகிச்சைதான் வழங்கப்படும். எனவே, ஆராய்ச்சிக்கு மட்டுமே இந்த விவரங்கள் தேவைப்படும். ஒமிக்ரான் போன்று எத்தனை வேரியன்ட் வந்தாலும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கும்" என்றார்.