Published:Updated:

Doctor Vikatan: கொரோனா அலை ஓய்ந்துவிட்டதா; இனி நிம்மதியாக நடமாடலாமா?

People queue up for COVID-19 vaccine ( AP Photo / Rafiq Maqbool )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: கொரோனா அலை ஓய்ந்துவிட்டதா; இனி நிம்மதியாக நடமாடலாமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
People queue up for COVID-19 vaccine ( AP Photo / Rafiq Maqbool )

இந்தியாவில் ஜூன் மாதம் 22-ம் தேதி நான்காவது அலை தொடங்கும் என்று சொன்னார்கள். இப்போது இந்தியாவில் நான்காம் அலை ஏற்பட வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். தொற்று எண்ணிக்கையும் மரணங்களும் பெருமளவில் குறைந்திருப்பதும் அதையே உறுதிசெய்கிறது. கொரோனாவின் அலைகள் ஓய்ந்துவிட்டதாக நினைத்து இனியாவது நிம்மதியாக இருக்கலாமா?

- ஷியாமளா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் விஜயலட்சுமி
மருத்துவர் விஜயலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்

``ஜூன் 22-ம் தேதி கொரோனாவின் நான்காவது அலை வரும் என்று சொல்லப்பட்டதை எப்படி முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதைப் போலத்தான் இனி நான்காவது அலை வர வாய்ப்பே இல்லை என்று சொல்வதையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. எப்படியிருப்பினும் இதுபோன்ற கணிதரீதியிலான கணிப்புகளை மட்டுமே வைத்து எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது.

கொரோனாவின் அலைகள் வைரஸின் தன்மையையும் மனிதர்களின் நடவடிக்கைகளையும் பொறுத்தே அமைகின்றன. கொரோனா வைரஸின் அடுத்த உருமாற்றம் நிகழ்ந்து, அது வீரியமானதாக இருந்து, அதன் பரவும் தன்மையும் வேகமாக இருந்தால் அடுத்த அலை வரலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதர்களைப் பொறுத்தவரை அவர்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பது முக்கியம். மாஸ்க் அணிகிறார்களா, தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா போன்றவை முக்கியம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எந்த வைரஸும் உருமாறிக்கொண்டே இருக்கும் இயல்பு கொண்டதுதான். அவற்றில் சில வேகமாகப் பரவும் தன்மையோடு, அதிக வீரியமுள்ளதாகவும் இருக்கலாம். அப்படியிருந்தால் அது ஏற்படுத்தும் அலையும் மோசமான பாதிப்புகளைக் கொடுக்கலாம். உருமாறாதவரை அந்த வைரஸ் நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கும். தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும், மரண எண்ணிக்கை அதிகரிக்காது.

COVID-19 screening in Mumbai
COVID-19 screening in Mumbai
AP Photo/Rajanish kakade

எனவே, கொரோனாவின் அலை முற்றிலும் ஓய்ந்துவிட்டதாக நினைத்து மாஸ்க் அணிவதைத் தவிர்ப்பதோ, தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலிருப்பதோ கூடாது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism