Published:Updated:

Doctor Vikatan: மைக்ரேன் தலைவலிக்கு என்ன தீர்வு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Head ache (Representational Image)
Head ache (Representational Image) ( Photo by Towfiqu barbhuiya on Unsplash )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? அதற்குத் தீர்வு என்ன?

- மதுமிதா சதீஷ்குமார் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் விவேக் ஐயர்
மருத்துவர் விவேக் ஐயர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் விவேக் ஐயர்.

``மைக்ரேன் என்பது ஒற்றைத் தலைவலி. மிகவும் பரவலாகக் காணப்படுகிற தலைவலி இது. இந்த பாதிப்புள்ள நபர்களுக்கு, ஒற்றைத் தலைவலி ஆரம்பிப்பதற்கு முன் சில அறிகுறிகள் தோன்றும். அதை வைத்தே அவர்கள் தலைவலி வரப்போவதை உணர்வார்கள். வாந்தி உணர்வு, கண்கள் மறைப்பது போன்ற உணர்வு, கண்களில் பூச்சி பறப்பது போன்ற உணர்வு இருக்கலாம்.

இடதுபக்கம் அல்லது வலதுபக்கம் வலிக்கும். அது மெள்ள மெள்ள அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் தலையில் யாரோ இடிப்பது போன்ற தீவிரமான வலியாக மாறும். வெளிச்சத்தைப் பார்க்க முடியாது. சத்தத்தைக் கேட்க முடியாது. இருட்டான அறையில் இருந்தால் நன்றாக இருக்குமே என யோசிப்பார்கள்.

Doctor Vikatan: அதிகரிக்கும் சூழல் மாசு; இனி சாதாரண மாஸ்க் பலனளிக்காதா?

மைக்ரேன் தலைவலியானது 4 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கலாம். தலைக்குக் குளிப்பது, வெயிலில் அலைவது, நீண்டதூரப் பயணம், அதிக வாசனையுள்ள பெர்ஃபியூம், மல்லிகைப்பூ வாசனை போன்றவைகூட வலியை அதிகப்படுத்தலாம்.

மூளையில் கெமிக்கல் தொடர்பான செயல்பாடுகளால் ரத்தக்குழாய்கள் விரிவடைந்தால் இப்படிப்பட்ட தலைவலி வரலாம். மைக்ரேன் தலைவலிக்கான சிகிச்சைகள் `ப்ரிவென்ட்டிவ் மைக்ரேன் ட்ரீட்மென்ட்ஸ்' (Preventive Migraine treatments), `அபார்ட்டிவ் மைக்ரேன் ட்ரீட்மென்ட்ஸ்'
(Abortive migraine treatments) என்று இரண்டு வகைப்படும்.

'ப்ரிவென்ட்டிவ் மைக்ரேன் ட்ரீட்மென்ட்ஸ்' என்பது அடிக்கடி தலைவலி வராமல் காக்கும் தடுப்புச் சிகிச்சை. அதற்கான மருந்துகளை 3 முதல் 6 மாதங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்வியல் மாற்றங்களும் அவசியம்.

Head ache (Representational Image)
Head ache (Representational Image)
Pixabay
Doctor Vikatan: குளிர்காலத்தில் ஹார்ட் அட்டாக் பாதிப்பு அதிகரிக்குமா?

தலைவலியைத் தூண்டும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உதாரணத்துக்கு குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிட்டால் வலி தீவிரமாகிறது என்றால் அவற்றைத் தவிர்ப்பது, வெயிலில் அலைவதைத் தவிர்ப்பது, அதிக வாசனையுள்ள பெர்ஃபியூம் உபயோகத்தைத் தவிர்ப்பது, நேரம் தவறாமல் சாப்பிடுவது, தூங்குவது போன்றவை அவசியம்.

`அபார்ட்டிவ் மைக்ரேன் ட்ரீட்மென்ட்ஸ்' என்பது ஒருமுறை தலைவலி வந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கான தீர்வளிக்கும். வலி வந்த 30 முதல் 45 நிமிடங்களுக்குள் பாராசிட்டமால் மாதிரியான மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலே பலன் தெரியும். மூளையில் கெமிக்கல் தொடர்பான செயல்பாடுகளால் ரத்தக்குழாய்கள் விரிவடைந்துவிட்டால், என்ன மாத்திரை எடுத்துக்கொண்டாலும் வலி குறையாது. அந்த நபருக்கு வழக்கமாக எத்தனை மணி நேரம் வலி நீடிக்குமோ, அத்தனை மணி நேரம் முடிந்த பிறகுதான் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு