Published:Updated:

Doctor Vikatan: குளிர்காலத்தில் ஹார்ட் அட்டாக் பாதிப்பு அதிகரிக்குமா?

Heart attack (Representational Image) ( Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: குளிர்காலத்தில் ஹார்ட் அட்டாக் பாதிப்பு அதிகரிக்குமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Heart attack (Representational Image) ( Pixabay )

குளிர்காலத்தில் ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்புகள் அதிகம் என்பது எந்த அளவுக்கு உண்மை? குளிருக்கும் மாரடைப்புக்கும் என்ன தொடர்பு? இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க வழிகள் உண்டா?

- ரகுவரன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

``இந்தத் தகவல் உண்மை என்பது அதிர்ச்சியளித்தாலும் இது பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளுக்கே பொருந்தும், இந்தியாவுக்கு அந்த ஆபத்து இல்லை என்பது ஆறுதலாக இருக்கும். குளிர்ச்சியான வானிலையானது ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து, உயர் ரத்த அழுத்தத்துக்கு காரணமாகி, அதன் விளைவாகப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயங்களை அதிகரிக்கும். குளிர்காலத்தில் இதயத்தின் ரத்த தமனிகள் சுருங்கும்போது ஏற்படும் நெஞ்சுவலியும் சற்று மோசமாகவே இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பனி அதிகமுள்ள வெளிநாடுகளைப் பொறுத்தவரை மக்கள் தங்கள் உறைவிடங்களையே மறைத்தபடி உறைந்திருக்கும் பனிக்கட்டிகளைத் தகர்த்துதான் வீட்டைவிட்டு வெளியே நகரும் சூழல் இருக்கும். அந்த மாதிரியான செயல்களும், உடலியக்கமே இல்லாத வாழ்க்கைமுறையும்கூட மாரடைப்புக்கு காரணமாகலாம்.

Heart Care (Representatinal Image)
Heart Care (Representatinal Image)
Photo by Karolina Grabowska from Pexels

இந்தியாவில் அந்த அளவுக்கு பனிப்பொழிவு இருப்பதில்லை என்பதால் பயப்பட வேண்டாம். ஆனாலும் உடற்பயிற்சிகள் செய்வது, ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது என இதயநலனுக்கான விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?