Published:Updated:

`எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை!' - ஜாக்கி சான்

இன்ஸ்டாவில் போஸ்ட் செய்த ஜாக்கி சான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா வைரஸைப் போலவே, அதன் பாதிப்பு குறித்த வதந்திகளும் உலகில் அதிவேகமாகப் பரவிவருகின்றன. அந்த வகையில், சீனா, ஜப்பான், ஹாங்காங் என பாதிப்பு அதிகமுள்ள பகுதியைச் சேர்ந்த பிரபலங்கள் பலரின் உடல்நலனும் சமூக வலைதளத்தில் வதந்திகளாகப் பரவிவருகின்றன. 'இந்தப் பிரபலத்துக்கு கொரோனா பாதிப்பு' என்று பரவி வரும் வதந்திகளின் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பவர், நடிகரும் தற்காப்புக் கலைஞருமான ஜாக்கி சான்.

ஜாக்கி சான்
ஜாக்கி சான்

தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, `தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை' என தற்போது தன் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார் ஜாக்கி சான். தனது அந்தப் பதிவில், ஜாக்கி சான் கூறியுள்ளவை இங்கே.

கொரோனா இல்லை... ஆனால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது... ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும்!

``எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், அதனால் நான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிவருகின்றன என்று என் ஊழியர் ஒருவர் என்னிடம் சமீபத்தில் சொன்னார். அதற்கு வந்த என் ரசிகர்களின் பதில்களையும் அவர் எனக்குக் கூறினார். என் நண்பர்கள் சிலரும் இதுகுறித்து என்னிடம் விசாரித்தனர். இந்தச் செய்தியை உண்மையென நம்பி, பல ரசிகர்கள் எனக்கு முகக்கவசம் அனுப்பி வைத்திருந்தனர்.

உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
ஜாக்கி சான்

அப்படி எனக்கு கிடைக்கப்பெற்ற முகக்கவசங்களை, என் பணியாளர்களைக் கொண்டு, சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைத்துவிட்டேன். அவர்கள், முகக்கவசம் தேவைப்படுபவர்களுக்கு அவற்றைக் கொடுத்துவிடுவார்கள். உங்கள் அனைவரின் அன்புக்கும் மனமார்ந்த நன்றி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்மீது அன்புகொண்டு, எனக்காக வருந்திய அனைத்து நல விரும்பிகளுக்கும், இந்தக் கணத்தில் மீண்டுமொருமுறை நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் என்னை மெய்சிலிர்க்கவைக்கின்றன.

நான் மிகவும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறேன் என்பதால், என் உடல்நலன் குறித்து இனி யாரும் கவலைகொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். என்னைப்போல, உங்களின் உடல்நலனும் நலமோடு இருக்குமென எதிர்பார்க்கிறேன்."
கொரோனா
கொரோனா

தனக்கு கொரோனா இல்லையெனக் கூறியதோடு, வருங்காலத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு, அவர் தனி நபரோ நிறுவனமோ, அவர்களுக்கு ஒரு மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்) கொடுத்து நன்றி தெரிவிக்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஜாக்கி. மேலும், நவீன மருத்துவம் விரைவில் கொரோனாவுக்குத் தீர்வுகாணும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு