Published:Updated:

`புகைபிடிக்காத பணியாளர்களுக்கு புதுச் சலுகை!' - ஜப்பான் நிறுவனத்தின் பாசிடிவ் முயற்சி

புகைப்பழக்கம்
புகைப்பழக்கம் ( pixabay )

புகைபிடிக்கும் பழக்கம் உள்ள பணியாளர் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக 20 நிமிடங்களை செலவிடுவதாகத் தெரியவந்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சினிமாவில், கனவு போன்ற பாடல் காட்சிகளை புகைமண்டலம் போல் சித்திரித்திருப்பார்கள். அதேபோன்றதொரு புகைமண்டலத்தை, தினம் தினம் தெருக்கோடிப் பெட்டிக்கடையைக் கடக்கும்போது அனுபவிக்கலாம். ஆனால், விரல்களைமட்டும் மூக்கின் மேல் வைத்துக்கொண்டால் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்காமல் இருக்கும்.

புகைப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.
புகைப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.
pixabay

அனைத்து அலுவலகங்களிலும், பணியாளர்களுக்கு உணவு மற்றும் தேநீர் இடைவேளைக்கென நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மட்டும் அடிக்கடி இடைவேளைக்குச் சென்றுவிடுவார்கள். சகபணியாளர்களைப் பாதிக்காத வகையில் பல அலுவலகங்களில் `ஸ்மோக்கிங் ஏரியா' என ஓர் இடத்தையே ஒதுக்கி இருக்கிறார்கள்.

`ஹாலோ சிக்ஸ்' (Halo Cigs) எனும் `இ சிகரெட்' பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பில், புகைப்பழக்கம் உள்ள பணியாளர் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக 20 நிமிடங்களை புகைபிடிக்கச் செலவிடுகிறார் என்றும், அதிலும் கல்வி, சுகாதாரத் துறை, கலை மற்றும் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்தவர்கள் நாள் ஒன்றுக்கு ஒருமணி நேரம் புகைபிடிக்கச் செலவிடுகிறார்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Takao Asuka CEO of Piala Inc
Takao Asuka CEO of Piala Inc
facebook.com/takao.asuka

ஜப்பானில் இயங்கிக்கொண்டிருக்கும் `பயால' (Piala Inc) எனும் நிறுவனத்தில் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத ஒரு பணியாளர், `புகைபிடிப்பதற்கு எடுக்கும் இடைவேளை நேரம் பல பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கிறது' என ஒரு சீட்டில் எழுதி, கருத்துகளை தெரிவிக்கும் அந்நிறுவனத்தின் பெட்டியில் போட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்நிறுவனத்தின் சி.இ.ஓ இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டதோடு, புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத பணியாளர்களுக்கு ஏற்கெனவே அறிவித்துள்ள விடுமுறை நாள்களைக் காட்டிலும் கூடுதலாக 6 நாள்கள் சம்பளத்துடன்கூடிய விடுமுறையை அறிவித்துள்ளார். தன்னுடைய இந்த அறிவிப்பினால் புகைப் பழக்கம் உள்ள பணியாளர்கள் அந்தப் பழக்கத்தை நிறுத்தக்கூடும் என நம்புகிறார்.

புகைபிடிப்பது உடல் நலத்துக்கு கேடு
புகைபிடிப்பது உடல் நலத்துக்கு கேடு
freepik

இங்கு பணிபுரியும் பணியாளர்களில் புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், புகைப்பழக்கத்தை நிறுத்தவும் முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம். அறிவிப்பு தந்த மனஉளைச்சலால் மேலும் இரண்டு `தம்'மை இழுக்காமல் இருந்தால் சரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு