Published:Updated:

சிங்கிள் டோஸ், 66% செயல்திறன்... கேம் சேஞ்சர் ஆகுமா ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி?

தடுப்பூசி
தடுப்பூசி ( AP Photo/Pavel Golovkin )

ஆபத்தானவர்கள் பட்டியலில் இருப்பவர்களுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்துவதால் மருத்துவமனையில் அனுமதி, இறப்பு குறையும்.

கோவிட்-19 தடுப்பூசிகளின் அணிவகுப்பில் புதிதாக இணையவுள்ளது அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி. அவசர பயன்பாடு என்ற அடிப்படையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையிடம் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவில் ஃபைசர், மார்டனா நிறுவனங்களுக்கும் இதே அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

COVID-19 Vaccines
COVID-19 Vaccines
AP Illustration/Peter Hamlin

பெல்ஜியத்தில் அமைந்துள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி பிரிவும் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள பெர் இஸ்ரேல் டியாகோனெஸ் மருத்துவ மையமும் இணைந்து இந்தத் தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. இந்தியா உட்பட பிற நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ள பிற கோவிட் தடுப்பூசிகளை இரண்டு தவணைகளாகச் செலுத்த வேண்டும். ஆனால், இது ஒரே முறை செலுத்தினால் போதுமானது.

அமெரிக்க ஃபைசர், மார்டனா நிறுவன தடுப்பூசிகள் இரண்டு தவணை செலுத்தப்பட்ட பிறகு, அவற்றின் செயல்திறன் முறையே 95, 94.1 சதவிகிதம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி இவை இரண்டைக் காட்டிலும் செயல்திறன் குறைவானது என்றாலும் அதை மருத்துவ வல்லுநர்கள் 'கேம் சேஞ்சர்' என்றே குறிப்பிடுகின்றனர்.

Pfizer world headquarters in New York
Pfizer world headquarters in New York
AP Photo/Bebeto Matthews

செயல்திறன் எவ்வளவு?

செயல்திறனானது அமெரிக்காவில் 72 சதவிகிதமாகவும் தென்ஆப்பிரிக்காவில் குறைந்தும் காணப்படுகிறது. அந்தப் பகுதிகளில் தன்மை மாறிய வைரஸ் பரவி வருவதால் வெறும் 57 சதவிகிதம் மட்டும் செயல்திறன் உள்ளது. ஒட்டுமொத்தமாக உலகளவில் இந்தத் தடுப்பூசியின் சராசரி செயல்திறன் 66 சதவிகிதம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

`வாக்குக்கு பணம் வேண்டாம்’ , `தடுப்பூசி விழிப்புணர்வு’ - கரூர் இளைஞரின் 'ஒரு நாள் முதல்வர்' சேலஞ்ச்

இதுபற்றி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் அந்தோணி ஃபௌசி, "கோவிட்-19 தொற்று பாதிப்பால் ஏற்படும் தீவிர நோய்களையும் தடுப்பதில் இந்தத் தடுப்பூசி முக்கியப் பங்காற்றும்.

அந்த வகையில் இதன் செயல்திறன் 85 சதவிகிதம். அதிக ஆபத்தானவர்கள் பட்டியலில் இருப்பவர்களுக்கு இந்த தடுப்பூசியைச் செலுத்துவதால் மருத்துவமனையில் அனுமதி மற்றும் இறப்பு விகிதம் வெகுவாகக் குறையும்" என்று தெரிவித்துள்ளனர்.

An example of the Pfizer COVID-19 vaccine vial
An example of the Pfizer COVID-19 vaccine vial
AP Photo/Andrew Harnik, Pool

இதுபற்றிப் பேசியுள்ள பிற மருத்துவ வல்லுநர்களும், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி செயலுத்திய பிறகு, உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் முதிர்ச்சியடையும். அதன் காரணமாகத் தடுப்பூசியின் செயல்திறன் சில மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், பிற நிறுவன தடுப்பூசிகளின் செயல்திறன் 90 சதவிகிதத்துக்கும் மேல் என்பதாலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியின் ஒட்டுமொத்த செயல்திறன் 66 சதவிகிதம் மட்டுமே என்பதாலும் மக்கள் அதைப் புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.

அடுத்த கட்டுரைக்கு