Published:Updated:

33,000 பவுடர் டப்பாக்களைத் திரும்பப் பெற்றது ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம்! - என்ன காரணம்

130 ஆண்டுகள் பழைமையான பிராண்டு மீது, ஏற்கெனவே ஆயிரக்கணக்கான புகார்கள் நிலுவையில் உள்ளன. சர்வதேச அளவில் முன்னணி பிராண்டான ஜான்சன் அண்டு ஜான்சன், அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்குவது நுகர்வோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Baby powder
Baby powder

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பன்னாட்டு நிறுவனம் ஜான்சன் அண்டு ஜான்சன். இந்நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரில், புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் இருப்பதாகக் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் தடை செய்யப்பட்டது.

Baby
Baby
pixabay

இந்நிலையில், அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஜான்சன் அண்டு ஜான்சன் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரியில், ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதில், 2018-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தொகுப்பில் ஆஸ்பெஸ்டாஸ் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

Baby
Baby
pixabay

அதனால், கிட்டத்தட்ட 33,000 பவுடர் டப்பாக்களை ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. குறிப்பிட்ட இந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட ஜான்சன் அண்டு ஜான்சன் பவுடரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.

130 ஆண்டுகள் பழைமையான பிராண்டு மீது, ஏற்கெனவே ஆயிரக்கணக்கான புகார்கள் நிலுவையில் உள்ளன.

baby
baby
pixabay

சர்வதேச அளவில் முன்னணி பிராண்டான ஜான்சன் அண்டு ஜான்சன், அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்குவது நுகர்வோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இச்சம்பவத்தால் அந்நிறுவனத்தின் பங்குகள் 6% குறைந்துள்ளது.