Published:Updated:

`கோவிட்-19 தொற்றுடன் தொடர்புடையதா?!' -அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு குழந்தைகளை தாக்கும் மர்ம நோய்

குழந்தை - கொள்ளை நோய்
குழந்தை - கொள்ளை நோய்

குழந்தைகளுக்கு பரவிவரும் புதிய மர்ம நோய்....!!! கொரோனா வைரஸுடன் தொடர்புடையதா என அஞ்சும் மருத்துவர்கள்....!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளுக்குப் பரவிவரும் மர்ம நோய் குறித்து மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நோய் கோவிட்-19 தொற்றுடன் தொடர்புடையதா என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், இது குறித்து வல்லுநர்கள் பல கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

குழந்தை - கொள்ளை நோய்
குழந்தை - கொள்ளை நோய்

மருத்துவ வல்லுநர்களால் `குழந்தை பல்லுறுப்பு பாதிப்பு நோய் (Pediatric multi system inflammatory syndrome) என அழைக்கப்படும் இந்த நோய், குழந்தைகளுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. நோய்வாய்ப்பட்ட சில குழந்தைகளுக்கு இதயத்தில் வீக்கமும், கல்லீரல் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பும் ஏற்படுகிறது. இந்த அறிகுறிகள் ஏறத்தாழ `கவாசகி (Kawasaki)' நோய் அறிகுறிகளுடன் ஒத்துப் போகின்றன.

குழந்தைகளுக்கு ஏன் கொரோனா, கோவிட் என்று பெயர்? | Corona Updates

`கவாசகி' என்பது ரத்த நாளங்களைப் பாதிக்கும் ஒரு அழற்சி நிலை. பொதுவாகக் கவாசகி நோய் 2 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மட்டுமே பாதிக்கும். ஆனால், தற்போது கண்டறியப்பட்டுள்ள நோய் 15 வயதுக் குழந்தைகளைக்கூட பாதித்துள்ளது. புதிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு, கோவிட்-19 பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்துள்ளது; அல்லது அந்தக் குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவருக்குக் கோவிட்-19 பாதிப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை - கொள்ளை நோய்
குழந்தை - கொள்ளை நோய்

கவாசகி மற்றும் கோவிட்-19 தொற்றுடன், இந்தப் புதிய நோய்க்கு உள்ள தொடர்பால், மருத்துவ உலகம் குழம்பி நிற்கிறது. இந்த இரண்டு நோய்களுமே மருத்துவர்களுக்கு இன்னும் பாடம் கற்பித்துக்கொண்டிருக்கும் நோய்களே என்பதால், இவற்றைப் பற்றி மருத்துவர்களே இன்னும் முழுமையாக அறிந்திடவில்லை. இந்த நிலையில், புதிய நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் திணறுகின்றனர் மருத்துவர்கள்.

ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் முதன்முதலில் பிரிட்டன், இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள மருத்துவர்கள், இந்த மர்ம நோயைக் கண்டறிந்து தெரிவித்தனர். மருத்துவ நிபுணர்கள் இப்போது, `வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, சிவந்த கண்கள், உதடு, பாதம் மற்றும் உள்ளங்கையில் வெடிப்புகள், கைகள் மற்றும் கால்களில் வீக்கம், சுவாசித்தலில் சிரமம் என இந்த அறிகுறிகளுடன் இருக்கும் குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வாருங்கள்.

குழந்தை - கொள்ளை நோய்
குழந்தை - கொள்ளை நோய்

ஆரம்பக்கட்டத்திலேயே நோயைக் கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது எளிது என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு