Published:Updated:

கொரோனா வதந்தி பரப்பிய மூன்று பேர் கைது... கேரள சுகாதாரத்துறை அதிரடி!

கொரோனா அலர்ட்
கொரோனா அலர்ட்

கொரோனா குறித்து வதந்தி பரப்பிய மூவர் கைது!

தற்போதைய நிலவரப்படி, உலகளவில் 17,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 362 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இப்படியாகக் கடந்த மூன்று வாரங்களாக, உலக நாடுகள் அனைத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸானது, இந்தியாவில் இதுவரை முன்று பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மூவருமே, கொரோனா பயத்தால் சீனாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய கேரள மாநிலத்தவர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மூன்றாவது நபர் உறுதிசெய்யப்பட்டிருப்பதால், முன்பிருந்ததைவிட கூடுதல் பயமும் பதற்றமும் தற்போது இந்தியாவைத் தொற்றிக்கொண்டுள்ளது. அரசு சார்பில் கொரோனாவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டிருந்தாலும், வீண் வதந்திகள் எதுவும் நின்றபாடில்லை. குறிப்பாக, சமூக வலைதளங்களில்.

`48 மணிநேரத்தில் சீரானது !’- கொரோனா நோயாளியைக் குணமாக்கியதாக அறிவித்த தாய்லாந்து மருத்துவர்கள்

`இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுவிட்டது' ரீதியிலான செய்திகள், மணிக்கொருமுறை வந்து கொண்டிருக்கின்றன. தமிழகம் உட்பட எல்லா மாநிலங்களிலுமே இப்படியான வதந்திகள் பரவி வந்தாலும், கொரோனா பாதிப்பு உறுதியான கேரள மாநிலத்தில், இப்படியான போலித் தகவல்கள் மிகத் தீவிரமாகப் பரவிவருகின்றன.

அமைச்சர் சைலஜா
அமைச்சர் சைலஜா

இதைத் தொடர்ந்து, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவின் ஆணையின் கீழ் சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் கண்டறியப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை இப்படியாக மூன்று பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர். போலியான தகவல்களைப் பரப்பியதற்காக, கூடுதலாக ஆறு பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் அவர்.

10 பயணிகள்
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலும் இப்படியான வதந்திகள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு சீனாவிலிருந்து வருகை தந்திருந்த 10 பயணிகள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனியாக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் முழுநேரத் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார் அம்மருத்துவமனையின் டீன் ஜெயந்தி.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி.

இவர்களில் யாருக்குமே இதுவரை கொரோனாவுக்கான எந்தவோர் அறிகுறியும் தெரியவரவில்லை என்பதால், யாரும் பயப்பட வேண்டாம் எனக் கூறுகிறார் டீன் ஜெயந்தி.

அடுத்த கட்டுரைக்கு