Published:Updated:

இறுக்கமான ஜீன்ஸ், நீண்டநேரப் பயணம், காலில் ரத்த உறைவு! -இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

இறுக்கமான ஜீன்ஸ்
இறுக்கமான ஜீன்ஸ்

நான் அதைப் பொருட்படுத்தவில்லை. இரண்டு நாள்களுக்குப் பிறகு, கால்கள் வீங்கிய நிலையில் அலுவலகத்தை அடைந்த பிறகு, அதிகப்படியான வியர்வை மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இறுக்கமான உடையணிந்து நீண்ட தூரம் பயணம் செய்ததில், நுரையீரல் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் வட இந்தியாவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர்.

Pulmonary embolism
Pulmonary embolism

தொழிலதிபரான சவ்ரப் ஷர்மா, நீண்ட தூரப் பயணமாக காரில் சென்றுள்ளார். அதிகப்படியான கால் வலியுடன் வீடு திரும்பியவர், இரண்டு நாள்களுக்குப் பிறகு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது Pulmonary embolism, அதாவது அவரது நுரையீரலிலுள்ள ஆர்ட்டரி ஒன்றில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. காரணம்... அவர் அணிந்திருந்த ஜீன்ஸ்!

நீண்ட பயணத்துக்குப் பின் அலுவலகம் சென்ற ஷர்மா, அங்கு திடீரென மயக்கமடைந்திருக்கிறார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த பின் மீண்டும் மயக்கமடைந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷர்மாவுக்கு ரத்த அழுத்தம் குறைந்துகொண்டே வருவதைக் கண்டறிந்தனர் மருத்துவர்கள்.

Tight Jeans
Tight Jeans

ஷர்மாவை பரிசோதித்த மருத்துவர்கள், ``நீண்ட காலமாக ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததால், அவருடைய சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை. அவருக்கு 24 மணி நேர டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. நீண்ட தூரம் வாகனம் ஒட்டிய காரணத்தால், அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகே கண்டறிந்தோம். மேலும், அவர் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸ், காலின் ரத்த உறைவுக்குக் காரணமாக இருக்கலாம்" என்று கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபற்றி ஷர்மா, ``நான் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து ரிஷிகேஷுக்குச் சென்றுகொண்டிருந்தேன். என்னுடைய கார் ஆட்டோமேட்டிக் என்பதால், பயணம் முழுவதும் இடது கால் அசையாமல் இருந்தது. சிறிது நேரத்தில் காலின் பின்பகுதி மற்றும் முழங்கால்கள் வலிக்கத் தொடங்கின.

தடுக்கவோ குணப்படுத்தவோ முடியாது ஆனால்,..? - குழந்தைகளைத் தாக்கும் டைப்-1 சர்க்கரைநோய்
Automatic Car
Automatic Car

ஆனால், நான் அதைப் பொருட்படுத்தவில்லை. இரண்டு நாள்களுக்குப் பிறகு, கால்கள் வீங்கிய நிலையில் அலுவலகத்தை அடைந்த பிறகு, அதிகப்படியான வியர்வை மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனை சென்று பரிசோதித்துப் பார்த்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இறுக்கமான ஆடையணிந்து, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வது இதுபோன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்... கவனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு