Published:Updated:

கொழுப்புள்ள உணவுகளைக் குறைத்தால் சர்க்கரை நோயைத் தடுக்கலாம்!- ஆய்வில் தகவல்

ஜெ.நிவேதா

`லோ-ஃபேட் டயட்', நீண்ட நாள்களுக்கான பலனைத் தரும்.

Low Fat Diet
Low Fat Diet
கொழுப்பு குறைவான உணவுகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிரெட் ஹட்சின்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கொழுப்புச் சத்து குறைவான உணவு முறையைப் பின்பற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டது. இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் மெனோபாஸ் நிலையிலுள்ள 49,000 பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

Women Health
Women Health

அவர்களில் 40 சதவிகிதம் பேருக்குக் கொழுப்புச்சத்து குறைவான உணவு முறையும் (லோ-ஃபேட் டயட்) மீதமுள்ளவர்கள் விருப்பப்பட்ட உணவு முறையையும் பின்பற்றியுள்ளனர். ஆய்வின் முடிவில், இந்த உணவு முறையைப் பின்பற்றியவர்களுக்குச் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 13-25 சதவிகிதம் தடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முதுமை காரணமாக ஏற்படும் இதயப் பிரச்னைகளுக்கான வாய்ப்பும் 15-30 சதவிகிதம் குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாகப் பேசிய ஆய்வாளர் கேர்நட் ஆண்டர்சன், `ஒவ்வோர் உணவுமுறைக்கும் ஒவ்வொருவித நன்மை இருக்கும். அவற்றில் பெரும்பாலானவை குறுகிய காலத்துக்கான நன்மையாக மட்டுமே இருக்கும். ஆனால், இந்த `லோ-ஃபேட் டயட்' அப்படியல்ல. நீண்ட நாள்களுக்கான பலனைத் தரும்.

அனைத்துப் பெண்களும் உணவுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது
ஆய்வாளர்கள்
இதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது? - ஆய்வு சொல்லும் தீர்வு

உதாரணமாக, நாங்கள் ஆய்வுக்குட்படுத்திய 40 சதவிகிதப் பெண்களில் யாருக்குமே ஒப்பீட்டளவில் மற்றவர்களைவிட பெரிய மாற்றங்களை முதல் ஒன்பது வருடங்களில் கண்டறிய முடியவில்லை.

தொடர் கண்காணிப்புக்குப் பிறகு, அதாவது இருபது ஆண்டுகளின் முடிவில் பலன்கள் முழுமையாகத் தெரியவந்தன. கொழுப்புச்சத்து குறைவான காய்கறிகள், பழங்கள், தானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் இதுபோன்ற நன்மைகள் பெண்களுக்கு சாத்தியப்படும். அனைத்துப் பெண்களும் உணவுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள இப்பொழுதே முயற்சியைத் தொடங்குவது நல்லது' எனக் கூறியுள்ளார்.

Low fat Diet
Low fat Diet

இந்த ஆய்வு முடிவுகள் `ஜர்னல் ஆஃப் நியூட்ரீஷன்' என்ற இதழில் இம்மாதம் வெளியிடப்பட்டிருக்கிறது.