Published:Updated:

கொரோனா பாதிப்பு ஆண்மைக் குறைவை ஏற்படுத்துமா? - பாலியல் மருத்துவரின் விளக்கம்

கொரோனா

கை, கால் போன்ற ஏதேனும் உடல் உறுப்பில் ரத்த உறைவு ஏற்படும்போது அந்த உறுப்பின் செல்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாகச் செல்கள் இறக்கத் தொடங்கும்.

கொரோனா பாதிப்பு ஆண்மைக் குறைவை ஏற்படுத்துமா? - பாலியல் மருத்துவரின் விளக்கம்

கை, கால் போன்ற ஏதேனும் உடல் உறுப்பில் ரத்த உறைவு ஏற்படும்போது அந்த உறுப்பின் செல்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாகச் செல்கள் இறக்கத் தொடங்கும்.

Published:Updated:
கொரோனா

டோனி விருதுக்குப் (Tony Award) பரிந்துரைக்கப்பட்ட நடிகர் நிக் கோர்டரோ கனடாவைச் சேர்ந்தவர். இவர் கடந்த மாதம் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானார். அவரின் மனைவி அமண்டா க்ளுட்ஸ் தன் கணவரின் உடல்நிலை குறித்த தகவல்களை ரசிகர்களுக்குத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார்.

நடிகர் நிக் கோர்டரோ
நடிகர் நிக் கோர்டரோ

சமீபத்தில் அவர் அளித்துள்ள தகவலின்படி கொரோனா வைரஸுடன் போராடிக்கொண்டிருக்கும் கோர்டரோ வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது வலது காலில் ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததால் கோர்டரோவின் வலது கால் அறுவைசிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருந்தால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். ஒருவேளை கை, கால் போன்ற ஏதேனும் ஒரு பாகத்துக்கு ரத்தம் செல்வது தடைப்பட்டால் அந்த உறுப்பு முழுவதும் செயலிழந்துபோக நிறையவே வாய்ப்புள்ளது.
ரத்த மாற்று சிகிச்சை நிபுணர் செல்வராஜன்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா தாக்குதலுக்கு உள்ளான நடிகர் நிக் கோர்டரோவுக்கு வலதுகாலை இழக்க நேரிட்டதுபோல், கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் ரத்தம் உறைதல் பிரச்னையை ஏற்படுத்தி தீவிர இதய பிரச்னை, பக்கவாதம், கைகால் போன்ற உறுப்புகள் செயலிழப்பு போன்ற நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கொரோனா வைரஸ் குறித்து நடத்தப்பட்டுவரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Blood vessels
Blood vessels

இது குறித்து ரத்த மாற்று சிகிச்சை நிபுணர் செல்வராஜனிடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"கொரோனா வைரஸின் தாக்கம் ஒருவரின் உடலில் அதிகமாகும்போது ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படுகிறது. இது டிஸ்சிமினேடட் இன்ட்ராவாஸ்குலார் கோயாகுலேஷன் (Disseminated intravascular coagulation) எனப்படும். அதாவது, பரவலான ஊடுருவும் ரத்த உறைதல். இவ்வகை ரத்த உறைதலில் மெல்லிய ரத்தக் குழல்களினுள் ரத்த செல்கள் சிறு சிறு கட்டிகளாக உறைந்து உடலினுள் ரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது.

ரத்த மாற்று சிகிச்சை நிபுணர் செல்வராஜன்
ரத்த மாற்று சிகிச்சை நிபுணர் செல்வராஜன்

கோவிட்-19 கொரோனா வைரஸில் காணப்படும் முள்கள் போன்ற பகுதிக்கு ஸ்பைக்ஸ் (spikes) என்று பெயர். கொரோனா வைரஸில் இரண்டு வகையான ஸ்பைக்ஸ் இருக்கின்றன. அவை 'ஹீம்அக்லுடினின்' (Hemagglutinin) மற்றும் 'நியூராமினிடேஸ்' (Neuraminidase). இவற்றில் ஹீம்அக்லுடினின் நம் உடலின் செல்களைத் தாக்கி ரத்தம் உறைதலை ஏற்படுத்துகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது ஒரு யூகமாகச் சொல்லப்படுகிறதே தவிர ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்

நியூராமினிடேஸ் வைரஸ் நம் உடலில் அதன் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்ளப் புரத உற்பத்தியைச் செய்கிறது. ஹீம்அக்லுடினின் காரணமாக ரத்தக் குழல்களில் சிறுசிறு கட்டிகளாக ரத்தம் உறைந்து அடைத்துக்கொள்கிறது. இதனால் மூளை மற்றும் இதயத்துக்குச் செல்லும் ரத்தமும் ஆக்ஸிஜனும் தடைப்படுவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படலாம்.

Blood
Blood

உடல் முழுவதும் ரத்தம் ஓட்டம் சீராக இருந்தால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். ஒருவேளை கைகால் போன்ற ஏதேனும் ஒரு பாகத்திற்கு ரத்தம் செல்வது தடைப்பட்டால் அந்த உறுப்பு முழுவதும் செயலிழந்துபோக நிறையவே வாய்ப்புள்ளது.

கைகால் போன்ற உடல் உறுப்பில் ரத்த உறைவு ஏற்படும்போது அந்த உறுப்பின் செல்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாகச் செல்கள் இறக்கத் தொடங்கும். அந்த உறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக அழுக ஆரம்பிக்கும். உடனே அறுவை சிகிச்சை மூலம் அந்த பாகத்தை நீக்கி விட வேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்" என்றார் ரத்த மாற்று சிகிச்சை நிபுணர் செல்வராஜன்.

பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்
பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்

கொரோனா வைரஸ் ஆண்களின் விந்து செல்களைப் பாதித்து அவர்களை ஆண்மை இழக்கச் செய்வதாக இந்த வைரஸ் குறித்து நடத்தப்பட்டுவரும் முதல்கட்ட ஆய்வுகள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மையா என்று பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரனிடம் கேட்டோம்.

"கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது ஒரு யூகமாகச் சொல்லப்படுகிறதே தவிர நிரூபிக்கப்படவில்லை. ரத்தம், சிறுநீர் போன்ற மனித உடல் திரவங்களில் கொரோனா வைரஸ் இருந்ததுபோல் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்து திரவத்தில் வைரஸ் இருப்பது டெஸ்டில் கண்டறியப்பட்டுள்ளது.

sperm
sperm

இதனால் வைரஸ் விந்து செல்களைப் பாதித்து ஆண்மைக் குறைவை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த ஆய்வுகளில் நாம் ஆரம்பநிலையில்தான் இருக்கிறோம். அதனால் ஆண்களின் இனப்பெருக்கத்திறன் கொரோனாவால் பாதிக்கப்படுமா என்பதை உறுதியாகக் கூற முடியாது" என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism