Published:Updated:

``ஒரு மாசம் சுயநினைவில்லாம இருந்து கண்முழிச்சேன்!" - கொரோனாவிலிருந்து மீண்ட ம.பொ.சி மகள்

ம.பொ.சி மகள் மாதவி

தனியார் ஆஸ்பத்திரியில ஒரு மாசம் சுயநினைவில்லாம இருந்திருக்கேன். வென்டிலேட்டர் உதவியோடு எனக்குச் சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கு. ரொம்பவே சிக்கலான கட்டத்தைத் தாண்டிதான் மீண்டு வந்திருக்கேன்.

``ஒரு மாசம் சுயநினைவில்லாம இருந்து கண்முழிச்சேன்!" - கொரோனாவிலிருந்து மீண்ட ம.பொ.சி மகள்

தனியார் ஆஸ்பத்திரியில ஒரு மாசம் சுயநினைவில்லாம இருந்திருக்கேன். வென்டிலேட்டர் உதவியோடு எனக்குச் சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கு. ரொம்பவே சிக்கலான கட்டத்தைத் தாண்டிதான் மீண்டு வந்திருக்கேன்.

Published:Updated:
ம.பொ.சி மகள் மாதவி

'சிலம்புச் செல்வர்' ம.பொ.சிவஞானம், தமிழகத்தின் முன்னோடி தமிழறிஞர். சுதந்திரத்துக்குப் பிறகு, ஒன்றுபட்ட சென்னை மாகாணம் பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்போது, ஆந்திராவுக்குச் செல்லாமல் தடுத்து, தமிழகத்தின் தலைநகர் சென்னையை நமக்கு மீட்டுக்கொடுத்தவர் இவர். ம.பொ.சி-யின் மகள் மாதவி பாஸ்கரன், இலக்கியம் மற்றும் அரசியலில் பங்களிப்பு செய்துவருகிறார். `குல்லியன் பாரே' எனப்படும் மிக அரிதான நோய் எதிர்ப்பாற்றல் எதிர்வினை பாதிப்பு கொண்டிருந்தவருக்கு, உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியே அவரது உடல் உறுப்புகளுக்கு எதிராகச் செயல்பட்டு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ம.பொ.சி மகள் மாதவி
ம.பொ.சி மகள் மாதவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், மாதவிக்கு கொரோனாவின் மூன்றாவது அலையில் கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சையின்போது மாதவியின் நுரையீரலில் நிமோனியா தொற்று ஏற்பட்டு, மிகவும் அபாயகட்டத்துக்குச் சென்று குணமாகியுள்ளார். சமீபத்தில் வீடு திரும்பியிருப்பவரிடம் உடல்நிலை குறித்து விசாரித்துப் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``எனக்கு 65 வயசாகுது. கோவிட் முதல் மற்றும் ரெண்டாவது அலையின்போது எனக்கு எந்தச் சிக்கலும் ஏற்படலை. ரெண்டு தவணை தடுப்பூசியும் போட்டுக்கிட்டேன். கொரோனா மூணாவது அலை ஏற்பட்டபோதும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிச்சேன். அவசியத் தேவைக்கு மட்டும்தான் வெளியே போனேன். எப்படி எனக்கு பாதிப்பு ஏற்பட்டுச்சுனு தெரியலை. ஆனா, காய்ச்சல், இருமல்னு லேசான அறிகுறிகளுடன் கடந்த பிப்ரவரியில எனக்கு கோவிட் ஏற்பட்டுச்சு. உடல்நிலை பலவீனமானதோடு, மூச்சுவிடவும் ரொம்ப சிரமப்பட்டேன்.

ம.பொ.சிவஞானம்
ம.பொ.சிவஞானம்

சுயநினைவில்லாம இருந்த என்னை என் குடும்பத்தினர் சரியான நேரத்துல ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. சென்னையிலிருக்கிற தனியார் ஆஸ்பத்திரி ஒண்ணுல ஒரு மாசம் சுயநினைவில்லாம இருந்திருக்கேன். வென்டிலேட்டர் உதவியோடு எனக்குச் சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கு. ரொம்பவே சிக்கலான கட்டத்தைத் தாண்டிதான் மீண்டு வந்திருக்கேன். என்னைக் குணப்படுத்த மருத்துவர்கள் ரொம்பவே மெனக்கெட்டாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்குப் பிறகுதான் கண்முழிச்சேன். அப்புறமா ஒரு மாசம் மருத்துவர்களின் கண்காணிப்புல இருந்தேன். சமீபத்துலதான் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினேன்" என்றவர், தந்தையின் நினைவாக ஓர் அறக்கட்டளையை நடத்திவருவதுடன், அதன்மூலம் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்களிப்பு செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கெளரவிக்கிறார்.

ம.பொ.சி மகள் மாதவி
ம.பொ.சி மகள் மாதவி

தொடர்ந்து பேசிய மாதவி, ``இப்போ இயல்புநிலைக்குத் திரும்பிட்டேன். வழக்கமான வேலைகளைச் செய்யுறேன். இருந்தாலும், அடுத்த சில மாதங்களுக்கு வீட்டுல பாதுகாப்பா இருக்கிறது நல்லதுனு டாக்டர்கள் சொல்லியிருக்கிறாங்க. கோவிட் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டிருந்தாலும், மாஸ்க் அணியுறது, வெளியில போயிட்டு வந்ததும் கைகளைச் சுத்தமா கழுறதுனு சுயப்பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது நல்லது" என்று வலியுறுத்தி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism