Published:Updated:

நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தைக்கு நிறக்குருடு பாதிப்பு ஏற்படலாம்! கண்கள் பத்திரம் - 17

கண்கள் பத்திரம்

ஜீன் தெரபியின் மூலம் குணப்படுத்த முடியும். எந்த மரபணுவில் பிரச்னை உள்ளதோ, அதை அடினோவைரஸின் வெக்டாரின் உள்ளே நுழைத்து, அது விழித்திரையின் அடியில் ஊசியாகச் செலுத்தப்படும்.

நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தைக்கு நிறக்குருடு பாதிப்பு ஏற்படலாம்! கண்கள் பத்திரம் - 17

ஜீன் தெரபியின் மூலம் குணப்படுத்த முடியும். எந்த மரபணுவில் பிரச்னை உள்ளதோ, அதை அடினோவைரஸின் வெக்டாரின் உள்ளே நுழைத்து, அது விழித்திரையின் அடியில் ஊசியாகச் செலுத்தப்படும்.

Published:Updated:
கண்கள் பத்திரம்

`மரபணுக் கோளாறுகள் என்பவை மனிதனின் தலை முதல் பாதம் வரை பாதிக்கக்கூடியவை. அவை விழித்திரைகளையும் விட்டுவைப்பதில்லை'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை மருத்துவர் வசுமதி வேதாந்தம். மரபணுக் கோளாறுகளால் பார்வையில் ஏற்படும் பாதிப்புகள், அவற்றின் தீவிரம், தீர்வுகள் குறித்து விளக்கமாகப் பேசுகிறார் அவர்.

``மரபணுக் கோளாறுகளால் விழித்திரையும் பாதிக்கப்படலாம். அந்த பாதிப்புகளில் `ரெட்டினைட்டிஸ் பிக்மென்ட்டோசா' (Retinitis pigmentosa), `லீபர் கன்ஜீனிட்டல் அமரோசிஸ்' (Leber congenital amaurosis) என நிறைய உண்டு. இருட்டானால் பார்வை தெரியாமல் போகிற மாலைக்கண் நோயும் இதில் ஒன்றுதான். மாலைக்கண் நோய் குறித்த தகவல்களை முந்தைய அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்திருக்கிறோம். இவை தவிர குழந்தைக்கு 'கோன் டிஸ்ட்ரோபி' (Cone dystrophy) எனப்படும் பாதிப்பும் வரலாம்.

கண் அறுவை சிகிச்சை
கண் அறுவை சிகிச்சை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தப் பிரச்னையை இப்படிச் சொன்னால் புரியும்... நிறக்குருடு. இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு நிறங்களைப் பிரித்தறியத் தெரியாது, கண்கள் கூசும். வெளிச்சத்தைப் பார்த்தால் கண்களில் கூச்சம் அதிகமாகி, கண்களை மூடிக்கொள்வார்கள். தொப்பி அணியாமல் வெளியே செல்ல மாட்டார்கள். விழித்திரையை பாதிக்கும் மரபணு பாதிப்புகள் இப்படி நிறைய உள்ளன. நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வது இதற்கான பிரதான காரணம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம் விழித்திரையில் `கோன்’ எனச் சொல்லப்படுகிற அணுக்கள் இருக்கும். அவைதான் நாம் படிப்பதற்கும் எழுதுவதற்கும் நிறங்களை அடையாளம் காண்பதற்கும் பொறுப்பு. அந்த கோன்களில் பிரச்னை வரும்போது, நிறக்குருடு பாதிப்பு ஏற்படலாம். இது பெரும்பாலும் உறவுகளுக்குள் திருமணம் முடிப்பவர்களுக்கு அதிகம் வரும்.

சிறப்பு மருத்துவர் வசுமதி
சிறப்பு மருத்துவர் வசுமதி

இது தவிர, ருமட்டாயிடு ஆர்த்ரைடிஸ் என சொல்லக்கூடிய மூட்டுவலி பிரச்னைக்காகவும், காச நோய்க்காகவும் சில மருந்துகளை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்பவர்களையும் அபூர்வமாக இந்த நிறக்குருடு பிரச்னை பாதிக்கக்கூடும்.

பிறந்த குழந்தைக்கு, 3 வயதுக்குப் பிறகு நிறங்களை வித்தியாசப்படுத்திப் பார்க்கத் தெரியவில்லை என சந்தேகப்பட்டால், உடனே கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். சோதனைகளின் மூலம், குழந்தைக்கு நிறக்குருடு பாதிப்பு உள்ளதா என்பதைக் கண் மருத்துவர் உறுதிப்படுத்துவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விழித்திரையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். RPE65 எனப்படும் மரபணுவில் பிறழ்வு இருப்பது கண்டறியப்பட்டால் `லக்ஸ்டர்னா' ( Luxturna) எனப்படும் ஜீன் தெரபியின் மூலம் குணப்படுத்த முடியும். எந்த மரபணுவில் பிரச்னை உள்ளதோ, அதை அடினோவைரஸின் வெக்டாரின் உள்ளே நுழைத்து, அது விழித்திரையின் அடியில் ஊசியாகச் செலுத்தப்படும்.

இதன் மூலம், கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ள இருக்கும் செல்களுக்கு இது உயிரூட்டி, அவற்றைப் புத்துணர்வு பெற வைக்கும். இதுதான் இந்தச் சிகிச்சையின் அடிப்படை. ஆனால், இந்த ஊசியின் விலை கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய். இந்தியாவில் இந்த ஊசி கிடைப்பதுமில்லை. அமெரிக்காவில் சிலருக்கு கொடுத்து ஓரளவு முன்னேற்றத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

கண்கள்...
கண்கள்...

இது தவிர, ரெட்டினல் இம்ப்ளான்ட் சிகிச்சையின் மூலம் பார்வையைத் திரும்பப் பெறச் செய்ய முடியும் என்கிறார்கள். ஆனால், இதுவும் ஆய்வு நிலையில்தான் இருக்கிறது. கண்களுக்கும் மூளைக்குமான தொடர்பான ஆக்ஸிபிட்டல் கார்டெக்ஸ் வழியாகத்தான் நாம் படிக்கிறோம். அதில் எலக்ட்ரோடு வைத்து தூண்டச் செய்து, வெளிச்சத்துக்கும், பொருள்களைக் கண்டுபிடிக்கவும் பரிசோதனைகளை விலங்குகளிடம் நிகழத்தியிருக்கிறார்கள். இதுவும் ஆய்வுநிலையில்தான் இருக்கிறது.

ரெட்டினல் ட்ரான்ஸ்ப்ளான்ட்டேஷன் என இன்னொரு தீர்வும் இருக்கிறது. கல்லீரல் மாற்று, இதய மாற்று மாதிரி விழித்திரை மாற்று சிகிச்சை. இப்படி எல்லா சிகிச்சைகளும் எட்டா உயரத்தில் இருக்கும் நிலையில், நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்... விழித்திரையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதும், நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வதைத் தவிர்ப்பதும்தான்.


- பார்ப்போம்

- ராஜலட்சுமி

பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism