Published:Updated:

பாரம்பர்யம் மற்றும் மருத்துவ சுற்றுலாக் கண்காட்சி - சென்னையில் நாளை தொடங்குகிறது!

தமிழகத்தின் பாரம்பர்யம் மற்றும் உணவு முறைகளை அறிந்துகொள்ளும் வகையில் சேர, சோழ, பாண்டியர் மற்றும் பல்லவ மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தமிழகத்தைப் பார்வையிடும் வகையில் சுற்றுலா பேக்கேஜ்கள் வழங்கப்பட உள்ளன.

agriculture
agriculture

இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (CII) மற்றும் மத்திய சுற்றலாத் துறையின் ஆதரவில் இயங்கும் தமிழ்நாடு டிராவல் மார்ட் ஆகியவை இணைந்து நடத்தும் கண்காட்சி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில், சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலாத்துறை சார்ந்த வர்த்தக வாய்ப்புகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. கண்காட்சியில், 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. சர்வதேச மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tradition
Tradition

இந்தக் கண்காட்சியைப் பார்வையிடும் பார்வையாளர்கள், தமிழகத்தின் பாரம்பர்ய மற்றும் உணவு முறைகளை அறிந்துகொள்ளும் வகையில் சேர, சோழ, பாண்டியர் மற்றும் பல்லவ மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தமிழகத்தைப் பார்வையிடும் வகையில் சுற்றுலா பேக்கேஜ்கள் வழங்கப்பட உள்ளன.

நெய்தல், மரச்சிற்பம், தஞ்சாவூர் ஓவியங்கள், வீணை தயாரிப்பு, மண்பாண்டத் தயாரிப்பு, பாரம்பர்ய விவசாயம், மீன்பிடித்தல் போன்றவையும் கண்காட்சியில் நேரடி செயல்முறையாகக் காட்சிப்படுத்தப்படும்.

Arts
Arts

மருத்துவத்துறை சார்பில், தனியார் மருத்துவமனைகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவ சுற்றுலா புரொமோட்டர்கள், மத்திய மற்றும் மாநில அரசின் சுகாதாரத்துறை அரங்குகள் அமைக்க உள்ளன.

நிகழ்ச்சி தொடர்பாகப் பேசிய, சிஐஐ-யின் தலைவர் எஸ் சந்திரமோகன், "கடந்த ஆண்டு மட்டும் வெளிநாட்டிலிருந்து 34.4 கோடி சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்களில் 47.2 லட்சம் பேர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலாத் தலங்களில் தமிழகம், கடந்த மூன்று ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. அதேபோன்று, மருத்துவ சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களில் 45 சதவிகிதம் பேர், தமிழகத்தையே தேர்ந்தெடுக்கின்றனர்.

hospital ward
hospital ward
pixabay

இந்தக் கண்காட்சியின்மூலம் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும். அதோடு, சுற்றுலா சார்ந்த வர்த்தகத்தையும் அதிகரிக்க முடியும்" என்றார். கண்காட்சி, செப்டம்பர் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. கண்காட்சியின் தொடக்க விழா செப்டம்பர் 19-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.