Published:Updated:

உடலைத் தேற்றும்... மூலநோய் கட்டுப்படும்; தேற்றான்கொட்டையின் மருத்துவப்பயன்களை அறிவீர்களா?

Representational Image

நீரிழிவால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்களுக்கு தேற்றான்கொட்டை நல்ல மருந்து. தேற்றான்கொட்டைப் பொடியோடு ஆவார வேர், சீரகம், விலா மரத்து பிசின் ஆகியவற்றை அரைத்து, சேர்த்து சாப்பிட்டால் `பொங்கும் நீரிழிவும் குணமாகும்' எனத் தேரையர் சித்தர் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உடலைத் தேற்றும்... மூலநோய் கட்டுப்படும்; தேற்றான்கொட்டையின் மருத்துவப்பயன்களை அறிவீர்களா?

நீரிழிவால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்களுக்கு தேற்றான்கொட்டை நல்ல மருந்து. தேற்றான்கொட்டைப் பொடியோடு ஆவார வேர், சீரகம், விலா மரத்து பிசின் ஆகியவற்றை அரைத்து, சேர்த்து சாப்பிட்டால் `பொங்கும் நீரிழிவும் குணமாகும்' எனத் தேரையர் சித்தர் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Published:Updated:
Representational Image

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் கண், நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளுக்குத் தேற்றான் கொட்டை பொடியை இளநீரில் கலந்து ஊற வைத்துக் குடிக்கலாம்.

தேற்றான் கொட்டையில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிக அளவில் இருப்பதால் வாரத்துக்கு ஒருமுறை தேற்றான் கொட்டை கஷாயம் குடித்து வரும்போது மேற்கண்ட பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசுவிடம் கேட்டோம்...

மைக்கேல் ஜெயராஜ்
மைக்கேல் ஜெயராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``தேற்றான் மரத்தில் இருந்து கிடைப்பதே தேற்றான் கொட்டை. தேத்தாங்கொட்டை என பேச்சு வழக்கில் சொல்வார்கள். பெயருக்கு ஏற்றாற்போல் இக்கொட்டை, உடலைத் தேற்றக்கூடிய தன்மை உடையது. சித்த மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

நீரிழிவால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து போனவர்களுக்கு தேற்றான் கொட்டை நல்ல மருந்தாக இருக்கும். தேற்றான் கொட்டையைப் பொடியாக்குவது சிரமம். கடினமாக இருப்பதால் அதை ஊறவைத்து அந்த ஈரப்பதத்திலேயே நசித்து காயவைத்த பின்புதான் பொடியாக்க முடியும்.

சித்த மருத்துவத்தில் எந்தப் பொருளையும் தனியாகப் பயன்படுத்துவது கிடையாது. தேற்றான் கொட்டைப் பொடியை மட்டும் தனியாகச் சாப்பிட்டால் வயிறு உப்பிக்கொள்ளும். அதிக புரதச்சத்து இருப்பதால் எளிதில் செரிமானமாகாது, ஆகவே தேற்றான் கொட்டைப் பொடியோடு ஆவார வேர், சீரகம், விலாமரத்துப் பிசின் ஆகியவற்றை அரைத்துச் சேர்த்து சாப்பிட்டால், `பொங்கும் நீரிழிவும் குணமாகும்' எனத் தேரையர் சித்தர் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இளநீரில் ஊற வைத்து கஷாயமாகக் குடிப்பது பற்றி சித்த மருத்துவத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. அந்த வீடியோவில் சொல்லப்பட்டிருப்பது பொய் என்றும் மறுக்க முடியாது. அதே நேரம் உண்மையானது என்றும் சொல்ல முடியாது. மருத்துவ பூர்வமாக நிரூபித்தால் மட்டும்தான் அதை ஏற்றுக்கொள்ள முடியும்.

நான் குறிப்பிட்டதே, நீரிழிவுக்கான நேரடி மருந்து கிடையாது. நீரிழின் விளைவுகளில் ஒன்றான உடல் மெலிந்து போனவர்களுக்கு மட்டும்தான் தேற்றான் கொட்டை பொடி கொடுக்கப்படும். தேற்றான் கொட்டை லேகியம் மூலம், பவுத்திரம் பிரச்னை உள்ள நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும்.

தேற்றான் கொட்டை
தேற்றான் கொட்டை

லேகியத்தில் நெய் சேர்க்கப்பட்டிருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு லேகியம் கொடுக்கக் கூடாது. தேற்றான் கொட்டை பொடிதான் கொடுக்க முடியும். தேற்றான் கொட்டைக்கு தண்ணீரைத் தெளிய வைக்கும் பண்பு இருக்கிறது. ராமநாதபுரம், விருதுநகர் போன்ற வறட்சியான மாவட்டங்களில் ஊருணியில் இருந்து எடுத்துவரும் தண்ணீர் கலங்கலாக இருக்கும். அதனுள் தேற்றான் கொட்டையைப் போட்டால் தண்ணீர் தெளிந்துவிடும்.

இது போன்று தேற்றான் கொட்டை பல விதமான பயன்களைத் தரக்கூடியது. தேற்றான் மரம் பெரும்பாலும் அனைத்து மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது. தரைப்பகுதிகளிலும் வளர்க்கிறார்கள்" என்கிறார் மைக்கேல் ஜெயராசு.