Published:Updated:

``லாக்டெளனால் மனஉளைச்சலா? மீம்ஸ், ஜோக்ஸ் பாருங்கள்!'' - மனநல மருத்துவர் #GoodReadAtVikatan

Keep Smiling
News
Keep Smiling ( Pixabay )

ஒரு நல்ல நகைச்சுவை என்பது மற்றவர்களின் மனதைக் காயப்படுத்தாத விதத்தில் இருக்க வேண்டும். நாம் சொல்லும் ஜோக்குகள், மீம்ஸ் நம்மைச் சுற்றி உள்ள அனைவரின் முகங்களிலும் சிரிப்பை உண்டு பண்ணும் விதத்தில் இருக்க வேண்டும்.

கடந்த சில வாரங்களாக `கொரோனா' என்ற பெயர் நம் காதுகளைத் தாண்டி கனவிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது! தினந்தோறும் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகரிக்கையில் நம் மனதில் நெகட்டிவ் எண்ணங்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

Corona
Corona

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வொர்க் ஃப்ரம் ஹோம் தரும் அழுத்தம், இஎம்ஐ பிரச்னை, வேலை நிரந்தரமின்மை பயம், குடும்பப் பிரச்னைகள் என்று நீண்டுகொண்டிருக்கும் லாக்டெளனில் நாம் அதிகப்படியான மன உளைச்சலையும் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதே நிலை நீடித்தால் நமக்கு மனநலம் சார்ந்த பிரச்னைகளும், விரக்தி மனப்பான்மையும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற மனஅழுத்தத்திலிருந்து விடுபட மீம்ஸ், ஜோக்ஸ் உள்ளிட்ட நகைச்சுவைக் காட்சிகளைப் பார்ப்பது சிறந்த தீர்வாக இருக்கும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இதுகுறித்து மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம்.

மனநல மருத்துவர் அசோகன்
மனநல மருத்துவர் அசோகன்

"ஒருவர் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தாலும் அவரின் எண்ணத்தை மாற்றி, வாழ்வதற்கான ஓர் உந்துதலை ஏற்படுத்தும் சக்தி நாம் டிவியில் பார்க்கும் நகைச்சுவைக் காட்சிகளுக்கும், புத்தங்களில் படிக்கும் ஜோக்குகளுக்கும் உள்ளது. இது கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும் மனநலம் குறித்த பல ஆய்வுகள் இதை நிரூபித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக நமக்குப் பிரச்னை என்று வரும்போது நம் மனநிலை இரண்டு வகையான சிந்தித்தலை மேற்கொள்ளும். ஒன்று `கன்வெர்ஜ்ன்ட் திங்கிங்' (Convergent thinking); மற்றொன்று `டைவெர்ஜென்ட் திங்கிங்' (Divergent thinking). `கன்வெர்ஜ்ன்ட் திங்கிங்' என்பது நமக்கு இருக்கும் பிரச்னைகளை பற்றியே யோசித்துக்கொண்டிருப்பது.

Thinking
Thinking

உதாரணமாக, ஒருவர் இந்த லாக்டௌன் நாள்களில் `எனக்குக் கொரோனா வந்துடுமா? கொரோனாவால என் குடும்பத்துல யாராவது பாதிக்கப்பட்டுடுவாங்களா' என்றெல்லாம் நாள் முழுக்க இதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பது. இப்படி யோசிக்கும்போது கொரோனா வருகிறதோ இல்லையோ, அவருக்கு மன அழுத்தமும் மனஉளைச்சலும் வருவது உறுதி.

இதுவே டைவெர்ஜ்ன்ட் திங்கிங் என்றால், பிரச்னைக்குரிய விஷயங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல் அதற்கான தீர்வையோ அல்லது வேறு ஏதாவது விஷயங்களையோ பற்றி சிந்திப்பது. இந்த டைவெர்ஜென்ட் திங்கிங் நமக்குத் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

Stress
Stress

கன்வெர்ஜ்ன்ட் திங்கிங்கில் இருக்கும் நாம், டைவெர்ஜென்ட் திங்கிங்க்கு மாற புத்தகம், செல்லப்பிராணிகள், குழந்தைகள் போன்ற ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. அப்படி நம் எண்ணங்களை திசைதிருப்பி லேசாக உணரவைக்கும் வேலையைச் செய்வதில் நாம் பார்க்கும், படிக்கும் நகைச்சுவைக் காட்சிகளுக்கும், நகைச்சுவை துணுக்குகளுக்கும் முக்கிய இடம் உண்டு.

ஒருவரின் இறுக்கமான மனநிலையை மாற்றுவதில் நகைச்சுவைக்கு எவ்வளவு பங்கு உண்டு என்பது குறித்து 2007-ல் ஒரு மனநல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுக்கு 74 பேர் தேர்வு செய்யப்பட்டு மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இந்த மூன்று குழுக்களுக்கும் முதலில் ஒரு கடினமான வேலை கொடுக்கப்பட்டது. அதாவது இரண்டு பக்கங்களும் ஆங்கில எழுத்துகள் உள்ள ஒரு காகிதத்தை அவர்களிடம் கொடுத்து அதில் 'e' என்ற எழுத்துக்களை மட்டும் கண்டுபிடிக்கச் சொன்னார்கள். குழுவில் இருக்கும் நபர்களின் வெவ்வேறு மனநிலையை எல்லோருக்கும் ஒன்றுபோல் சமன் செய்யவே இந்த முறை கையாளப்பட்டது.

Mr.Bean
Mr.Bean

இந்தச் சோதனை முடிந்த பிறகு அவர்கள் மற்றொரு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதில் முதல் குழுவினருக்கு சில மணிநேரம் `மிஸ்டர் பீன்' நகைச்சுவை காட்சிகள் போட்டுக் காட்டப்பட்டன. இரண்டாவது குழுவுக்கு ஒரு டால்பின் கடலில் நீந்துவது போன்ற காட்சி காட்டப்பட்டது. மூன்றாவது குழுவுக்கு ஒரு தன்னம்பிக்கை பேச்சாளரின் சொற்பொழிவு காட்டப்பட்டது.

பிறகு, இவர்களின் மனநிலை எந்த நிலையில் இருக்கிறது என்று உளவியல் நிபுணர்களால் கணக்கிடப்பட்டது. பின்னர் மூன்று குழுவினருக்கும் கணினியில் கேள்விகள் மற்றும் படங்களைப் பார்த்து புதிர் கண்டுபிடிக்க வேண்டிய ஒரு கடினமான வேலை கொடுக்கப்பட்டது. வேலையைச் செய்யச் சிறிது நேரம் முயன்று பார்த்த இரண்டாம் மற்றும் மூன்றாம் குழுவினர் தங்களுக்கு அந்த வேலை கடினமாக இருப்பதாகக் கூறி விலகிக்கொண்டனர்.

laughing
laughing

ஆனால், வேலை செய்வதற்கு முன்பு நகைச்சுவை காட்சியைப் பார்த்த குழுவினர் மட்டும் அலுப்பில்லாமல் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தனர். அவர்களின் மனநிலையும் சீராகவே இருந்தது.  

இறுதியில், மனிதனின் மனநிலையை நகைச்சுவையான விஷயங்கள் எப்படி நல்ல விதத்தில் மாற்றுகின்றன என்பதைத் தெளிவாக விளக்கியது இந்த ஆய்வின் முடிவு. 

மனஉளைச்சலுடன் இருக்கும் ஒருவர் டிவியிலோ, மொபைல் போனிலோ நல்ல நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து ரசிக்கும்போது அவருக்கு ஏற்கெனவே இருந்த மனஉளைச்சல் குறைவதுடன் மீண்டும் மனஉளைச்சல் வராமல் தடுக்கப்படுகிறது.

laughing
laughing

இதனால் ஒருவர் அதீத மன உளைச்சலில் இருக்கும் நேரத்தில், அவருக்குப் பிடித்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்துச் சிரிக்கும்போது அவரின் இறுக்கமான மனநிலை லேசாகும். பிரச்னைகளை மட்டுமே யோசித்துக்கொண்டிருக்கும் நமக்கு அதற்கான தீர்வைப் பற்றியும் யோசிக்கும் ஒரு மனநிலையை இந்த நகைச்சுவை ஏற்படுத்தித் தருகிறது.

இதில் கவனிக்கவேண்டிய விஷயம், ஒரு நல்ல நகைச்சுவை என்பது மற்றவர்களின் மனதைக் காயப்படுத்தாத விதத்தில் இருக்க வேண்டும். நாம் சொல்லும் ஜோக்குகள், மீம்ஸ் நம்மைச் சுற்றி உள்ள அனைவரின் முகங்களிலும் சிரிப்பை உண்டு பண்ணும் விதத்தில் இருக்க வேண்டும். மற்றவர்களின் உருவத்தையோ, அவர்கள் மனம் புண்படும்படியான அம்சங்களையோ கேலி செய்து சிரிப்பதெல்லாம் ஆரோக்கியமானது அன்று, கண்டனத்துக்கு உரியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comedy scenes
Comedy scenes

இந்த லாக்டெளனால் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட ஒரு விரக்தி மனநிலையில்தான் இருக்கிறோம். இதிலிருந்து ஓரளவேனும் வெளியில் வர நல்ல நகைச்சுவைக் காட்சிகள் உதவும்.

நீங்கள் மன அழுத்தமாக உணரும் வேளைகளில் உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகரின் படங்களையோ, மீம்ஸ் போன்றவற்றையோ சிறிது நேரம் பார்த்துச் சிரித்துவிட்டு அடுத்தாக உங்கள் வேலையைச் செய்யத் தொடங்குங்கள். நிச்சயம் மனஅழுத்தம் குறைந்து ஓர் உற்சாகம் ஏற்படும்" என்றார் மனநல மருத்துவர் அசோகன்.

இடுக்கண் வருங்கால் நகுக
இடுக்கண் வருங்கால் நகுக

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்பது இல்.

துன்பம் வரும் வேளையில் சிரிக்க மட்டும் சொல்லவில்லை வள்ளுவர். `அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப்போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை' என்றும் சொல்கிறார் அந்த சீனியர் மோஸ்ட் சைக்கியாட்ரிஸ்ட்.

ஆக, இடுக்கண் வருங்கால் நகுக! #Verified