Published:Updated:

"கொரோனா அச்சம்; மருத்துவர்களின் ஆன்லைன் பரிந்துரைகள்!"- டெலிமெடிசின் சாதகமும் பாதகமும் #FightCovid19

Corona Virus

நேரடியாக மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதில் ஆன்லைனிலேயே மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை பெறுவதற்கான ஒரு மாற்று வழிதான் டெலிமெடிசின். டெலிமெடிசின் என்பது ஆன்லைனில் நமக்குத் தேவையான மருந்துகளை ஆர்டர் செய்து வாங்கும் முறை அல்ல.

"கொரோனா அச்சம்; மருத்துவர்களின் ஆன்லைன் பரிந்துரைகள்!"- டெலிமெடிசின் சாதகமும் பாதகமும் #FightCovid19

நேரடியாக மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதில் ஆன்லைனிலேயே மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை பெறுவதற்கான ஒரு மாற்று வழிதான் டெலிமெடிசின். டெலிமெடிசின் என்பது ஆன்லைனில் நமக்குத் தேவையான மருந்துகளை ஆர்டர் செய்து வாங்கும் முறை அல்ல.

Published:Updated:
Corona Virus

`கோவிட்-19' கொரோனா வைரஸ், கடந்த சில மாதங்களாக எந்தப் பக்கம் திருப்பினாலும் எதிரொலிக்கும் பெயர்! உலகம் முழுவதும் லட்சக்கணக்காணக்கான மக்களைத் தாண்டி பரவிக்கொண்டு வரும் இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட மருத்துவச் சிகிச்சை முறைகளோ, மருந்துகளோ இதுவரையில் இல்லை.

corona
corona

இந்நிலையில் இந்த வைரஸிலிருந்து காத்துக்கொள்ள ஒவ்வொரு நாடும் தற்காப்பு நடவடிக்கைகளை மட்டுமே வலியுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவும் என்பதால் மக்கள், கூட்டமாக இருப்பதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மால்கள், ஜிம்கள், உணவகங்கள் போன்றவற்றை எல்லாம் திறக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல கார்ப்பரேட் கம்பெனிகள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கச் சொல்லியுள்ளன. பெரும்பாலும், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதும், சுய சுத்தமும் மட்டுமே தங்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்றும் என்பதை மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டார்கள்.

coronavirus
coronavirus

ஆனால் இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளோ, வேறு ஏதாவது உடல்நல பிரச்னைகளோ ஏற்பட்டால் அனைவரும் மருத்துவமனையையே நாடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கொரோனா தொற்று பரவிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நாம் சாதாரண காய்ச்சலுடன் மருத்துவமனைக்குச் சென்றால்கூட அங்கு யாராவது கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர் இருந்தால் அவரிடமிருந்து நமக்கு நோய்த் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே, இந்நிலையில் தேவையில்லாமல் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று மருத்துவர்களே அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், பலருக்கு நீரிழிவு நோய், சிறுநீரகப் பாதிப்பு போன்ற மற்ற உடல்நலப் பிரச்னைகள் இருக்கலாம். அவர்கள் மருத்துவமனைக்குச் செல்வது அத்தியாவசியமாக இருக்கும்.

Narendra Modi
Narendra Modi

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா குறித்து நேரலையில் பேசியபோதுகூட இந்தப் பிரச்னையைக் குறிப்பிட்டு "கொரோனா குறித்த வதந்திகளைப் பரப்பாதீர்கள். முடிந்தவரை மற்றவர்களுக்கு தொலைபேசி மூலமாக விழிப்புணர்வு செய்யுங்கள். சிறு மருத்துவக் குறைபாடுகளுக்காக மக்கள் மருத்துவமனையில் குவிய வேண்டாம். தள்ளிப்போடக்கூடிய அறுவை சிகிச்சை என்றால் அதைத் தள்ளிப்போடுவது சிறந்தது.

மருத்துவர்களிடம் ஏதேனும் ஆலோசனை பெற வேண்டும் என்றால் அதையும் தொலைபேசியிலேயே பெறுவது சிறந்தது" என்று கூறியிருந்தார். பிரதமர் கூறியதுபோல் "வீட்டிலிருந்தே சிகிச்சைக்காக மருத்துவர்களை அணுகும் டெலிமெடிசின் முறை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துமா?"

டெலிமெடிசின்
டெலிமெடிசின்

டெலிமெடிசின் என்றால் என்ன?

நேரடியாக மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதில் ஆன்லைனிலேயே மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை பெறுவதற்கான ஒரு மாற்று வழிதான் டெலிமெடிசின். டெலிமெடிசின் என்பது ஆன்லைனில் நமக்குத் தேவையான மருந்துகளை ஆர்டர் செய்து வாங்கும் முறை அல்ல. டெலிமெடிசின் முறைக்காகவே சில செயலிகள் இணையத்தில் இருக்கின்றன. பிராக்டோ (Practo), ஜஸ்ட் டாக் (Just Doc), லைவ் ஹெல்த் (Live health), ஆஸ்க் அப்போலோ (Ask Apollo), மெடி மெட்ரி (Medimetry) போன்றவை இந்தியாவில் டாப்-10 வரிசையில் உள்ள சில டெலிமெடிசின் செயலிகள். இவற்றில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் இணைந்திருப்பார்கள்.

இந்தச் செயலியை நம் மொபைல் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்தோம் என்றால் அதற்குள் சென்று நமக்குத் தேவையான பிரிவைச் சேர்ந்த மருத்துவரைத் தேடி அவரை ஆன்லைன் வீடியோவில் சந்தித்து, பரிசோதனை பெற அப்பாயின்ட்மென்ட் வாங்க முடியும். நாம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிய நேரத்தில் நாம் தேர்வுசெய்த மருத்துவர் நம்முடன் வீடியோவில் லைவ்வாக உரையாடுவார்.

அப்போது நமக்கு இருக்கும் அறிகுறிகளையும், உடல்நலப் பிரச்னைகளையும் அவரிடம் சொல்லிப் பரிந்துரைகளைப் பெறலாம். அவர் நமக்கு அனுப்பும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய பரிந்துரைகளின் லிஸ்ட் நம் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்றால் அந்தத் தகவலும் நமக்கு அறிவிக்கப்படும். ஆக, நாம் மருத்துவரைத் தேடி வெளியில் செல்ல வேண்டிய நிலை இதில் ஏற்படுவதில்லை.

டெலிமெடிசின்
டெலிமெடிசின்

மேலும், இந்த டெலிமெடிசின் முறையைப் பற்றி டெலிமெடிசின் செயலிகளில் ஒன்றான பிராக்டோ நிறுவனத்தின் தலைமை ஆரோக்கிய பராமரிப்பு செயல்திட்ட அலுவலரும் மருத்துவருமான அலெக்ஸாண்டர் குருவில்லாவிடம் பேசினோம்.

"தற்போது கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் மக்கள் மருத்துவமனையில் கூடுவதைத் தவிர்க்க உதவும் ஒரு முறைதான் டெலிமெடிசின். இதற்கென உள்ள செயலிகளில் இணைந்திருக்கும் மருத்துவர்கள் அரசிடம் அங்கீகாரம் பெற்றவர்கள்.

அலெக்ஸாண்டர் குருவில்லா
அலெக்ஸாண்டர் குருவில்லா

மேலும், இந்த முறையில் சிகிச்சை பெறுவோர்களின் தகவல்கள் மருத்துவமனைகளில் பாதுகாக்கப்படுவதுபோலவே பாதுகாக்கப்படும். இது ஆன்லைன் மருத்துவமுறை என்பதால் மருத்துவர்களை 24 மணி நேரமும் தொடர்புகொள்ள முடியும். மருத்துவமனை செல்ல விரும்பாமல் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற விரும்புவோர்களுக்கு டெலிமெடிசின் சிறந்த தீர்வாக இருக்கும்.

டெலிமெடிசினுக்கான செயலியை மக்கள் பயன்படுத்துவதற்குப் பெரிதாக விதிமுறைகள் எதுவும் இல்லை. ஒருமுறை இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்த பிறகு, உங்களின் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அதிலிருந்து உங்களைப் பற்றிய தகவல்கள் பெறப்படும். உங்கள் பெயரைப் பதிவு செய்த பிறகு, எப்போது வேண்டுமானாலும் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம். உங்களுக்குக் காய்ச்சல் ஏற்படுகிறதென்றால் அது சாதாரண காய்ச்சலா அல்லது வேறு ஏதவாது தொற்றா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படும்போது டெலிமெடிசின் வழியாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் மருத்துவருடன் வீடியோ, ஆடியோவில் பேசி உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

டெலிமெடிசின்
டெலிமெடிசின்

உங்களுக்கு ஏற்பட்டுள்ளது சாதாரண காய்ச்சல் என்றால் அதற்கு நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஒருவேளை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை என்றால் அதனையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். உங்கள் உடல்நல பிரச்னைகளுக்கு அறுவைசிகிச்சை தீர்வு என்றால் அதற்கான பரிந்துரைகளை மட்டும் இதில் பெற முடியும் . மற்றபடி நீங்கள் ஆலோசனை பெறும் மருத்துவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு அவரை நேரடியாகச் சந்திக்கும் வசதியும் டெலிமெடிசினில் இருக்கிறது.

பொதுவாக நமக்கு ஏதாவது உடல்நலக் குறைபாடு ஏற்படும்போது நேரடியாகச் சென்று மருத்துவர்களைச் சந்திப்போம். தற்போது வெளியில் செல்ல முடியாத நிலையில் மருத்துவர்களைச் சந்திக்க இந்த டெலிமெடிசின் ஒரு பாலமாக இருக்கிறது.

டெலிமெடிசின்
டெலிமெடிசின்

உங்களுக்கு ஏற்படும் அடிப்படை உடல்நலப் பிரச்னைகளுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் இதில் தீர்வு கிடைக்கும். ஆனால், அறுவைசிகிச்சை, மருத்துவரை நேரடியாகச் சந்தித்தே ஆக வேண்டிய பிரச்னைகளுக்கு ஆலோசனைகளை மட்டுமே இதில் பெறமுடியும். நீங்கள் டெலிமெடிசின் வழியாகச் சிகிச்சை பெற விரும்பும் மருத்துவரின் கல்வித்தகுதி, அவரின் கிளினிக் உள்ள இடம் போன்ற அனைத்து தகவல்களையும் இதில் பெற முடியும்.

சிலர் இந்த கொரோனா அச்சம் நிறைந்த நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல அச்சப்பட்டுக்கொண்டு வீட்டிலேயே ஏதாவது சுயமருத்துவம் செய்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் எந்த மருத்துவமுறைகளை மேற்கொள்வதற்கு முன்பும் டெலிமெடிசின் முறையில் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது. டெலிமெடிசினுக்காக உள்ள செயலிகளில் மருத்துவர்களுடன் வாய்ஸ் கால், வீடியோ கால் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் கலந்துரையாட வசதிகள் உள்ளன.

டெலிமெடிசின்
டெலிமெடிசின்

எனவே வாய்ப்புள்ளவர்கள் டெலிமெடிசின் முறையைப் பயன்படுத்தலாம். மருத்துவமனைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க உதவும் இந்த மருத்துவமுறை அசுர வேகத்தில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும். சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் பெரும்பாலான மக்கள் டெலிமெடிசின் முறை மூலம் சிகிச்சை பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது" என்றார் அலெக்ஸாண்டர் குருவில்லா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism