பிரீமியம் ஸ்டோரி

அதிகாலையில் எழுதல்!

ராணுவ வீரனின் பொழுது அதிகாலையில் விடியும். அதிகாலையில் கண்விழிப்பவர்கள், `உடற்பயிற்சி செய்ய நேரமில்லை’ என்று சாக்கு சொல்ல மாட்டார்கள்.

சீரான உணவு!

கார்போஹைட்ரேட் இல்லாத உணவுப்பழக்கம் ஆரம்பத்தில் எடையைக் குறைக்க உதவுவதுபோல உணரவைக்கும். ஆனால், ஆரோக்கியமாக வைத்திருக்குமா என்பது சந்தேகமே. எனவே கார்போஹைட்ரேட், புரதம், நல்ல கொழுப்பு என எல்லாம் சேர்ந்த சரிவிகித உணவுகளையே சாப்பிட வேண்டும். உங்கள் மெனுவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பால்... என எல்லாம் இடம்பெற வேண்டும்.

உடற்பயிற்சி... நடைப்பயிற்சி!

உணவு, உறக்கம்போல உடற்பயிற்சியும் உங்கள் தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக மாற வேண்டும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது ஆகச் சிறந்தது. உடற்பயிற்சி செய்யவென நேரம் ஒதுக்க முடியாதவர்கள், வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு நடந்து செல்லலாம். கடைகள், அருகிலுள்ள இடங்களுக்கெல்லாம் நடந்தே சென்று வருவதை வழக்கப்படுத்திக்கொள்ளலாம்.

மிலிட்டரி ஃபிட்னெஸ் - உங்களுக்கும் சாத்தியம்!

சரியான நேரத்துக்குத் தூங்கி எழுவது, வேளைக்குச் சாப்பிடுவது, உடற்பயிற்சிகள் செய்வது... என எல்லாவற்றிலும் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர்கள் ராணுவ வீரர்கள். கண்ட நேரத்துக்குத் தூங்கி எழுவது, கண்டதையும் சாப்பிடுவது, உடலுழைப்பே இல்லாத வாழ்க்கை போன்ற பழக்கங்களை விட்டொழிப்பதன் மூலம் எல்லோரும் ராணுவ ஒழுக்கத்துக்குத் திரும்பலாம். ராணுவ வீரர்களுக்கு நிகரான ஆரோக்கியத்தைப் பெற சில ஆலோசனைகள்...

அலுக்காத உடற்பயிற்சி!

உங்கள் உடற்பயிற்சி நடைமுறைகளை மாற்றி அமைக்கவும். ஒரு நாள் உடற்பயிற்சி, ஒரு நாள் நடைப்பயிற்சி, அடுத்த நாள் நீச்சல் என மாற்றி மாற்றிச் செய்தால், உடற்பயிற்சி போரடிக்காது.

மதுப்பழக்கம்!

உங்கள் தினசரிகால அட்டவணையில் மதுப்பழக்கம் இருந்தால், உடனடியாக அதிலிருந்து வெளியேறவும். மது அருந்துவோரால் காலையில் சரியான நேரத்துக்குக் கண்விழிக்க முடியாது. இதனால் அன்றைய தினத்தின் அத்தனை வேலைகளுமே பாதிக்கப்படும்.

தூக்கம்!

ஆரோக்கியமான உடலுக்கு எட்டு மணி நேரத் தூக்கம் மிகவும் அவசியம். நேரத்துக்குத் தூங்குவது நல்லது. தூங்கச் செல்வதற்கு முன்னர் வெதுவெதுப்பான பால் அல்லது சாமந்தி கலந்த டீ அருந்தினால் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விளையாட்டு!

உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடலாம். அது உடற்பயிற்சியாகவும் அமையும். உங்கள் மனதையும் உற்சாகப்படுத்தும்.

காலை உணவு தவிர்க்காதீர்!

காலை உணவு மிகவும் முக்கியமானது. காலை உணவு சாப்பிடுவதால், அன்றைய நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெற முடியும்.

நேரத்துக்குச் சாப்பாடு!

சரியான இடைவேளைகளில் உணவு உண்ண வேண்டும். அதுதான் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சீராகவைத்திருக்கும். நேரம் தவறிய உணவுப்பழக்கம் உடல் பருமனுக்குக் காரணமாகும்.

தினசரி கால அட்டவணை!

அதிகாலையில் எழுவதில் தொடங்கி உணவு உண்ண, வேலை செய்ய, உடற்பயிற்சி செய்ய, தூங்குவதற்கு என ஒவ்வொரு செயலுக்கும் நேரம் ஒதுக்கி, அதைச் சரியாகப் பின்பற்றுங்கள். இவை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.

தண்ணீர்!

தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். ஒரே நேரத்தில் இவ்வளவு குடிப்பது என்றில்லாமல், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தண்ணீர் அருந்துவது உடலை வறட்சியின்றி வைத்திருக்கும். உடலிலுள்ள நச்சுகள் வெளியேறும்.

எண்ணங்கள்!

நேர்மறையான எண்ணம்கொண்ட, ஆரோக்கியத்தில் அக்கறைகொண்ட நபர்கள் சூழ இருப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அவர்களின் பாசிட்டிவிட்டி உங்களையும் பற்றிக்கொள்ளும்.

நம்பிக்கை!

முதல்நாளே உங்களால் 10 கி.மீ தூரம் நடக்கவோ, ஓடவோ முடியாது. அதற்காக நீங்கள் அதற்குத் தகுதியில்லாதவர் என்கிற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். பொறுமையும் விடாமுயற்சியும் உங்களை இலக்கை எட்டவைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு