Published:Updated:

Doctor Vikatan: 4 வயதுக் குழந்தைக்கு வற்றாத கண் வீக்கம்; என்னவாக இருக்கும்?

Eyes (Representational Image) ( Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: 4 வயதுக் குழந்தைக்கு வற்றாத கண் வீக்கம்; என்னவாக இருக்கும்?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Eyes (Representational Image) ( Pixabay )

என் 4 வயது மகனுக்கு மூன்று வாரங்களாகக் கண் சிவந்து வீங்கி உள்ளது. குழந்தை மருத்துவர் மற்றும் கண் மருத்துவரையும் பார்த்தோம், பார்வையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றார்கள். ஆனாலும் வீக்கம் சரியாகவில்லை. இதற்குத் தீர்வு என்ன?

- ஈஸ்வரி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்
மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி.

``நான்கு வயதுக் குழந்தைக்கு இந்தப் பிரச்னை வர மூன்று காரணங்கள் இருக்கலாம். குழந்தையின் கண்ணில் அடிபட்டிருக்கலாம் அல்லது குழந்தைக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம். மூன்றாவதாக, குழந்தை விளையாடும்போது சக குழந்தைகள் யாராவது கண்ணில் குத்திக் காயமாகியிருக்கலாம். மூன்று வாரங்களாக இந்தப் பிரச்னை தொடர்வதென்பது சரியானதல்ல. உடனடியாக அதற்கு என்ன காரணம் எனக் கண்டறிய வேண்டும். ஐஸ்வாட்டரில் நனைத்த சுத்தமான துணியால் கண்ணின்மேல் ஒத்தடம் கொடுக்கலாம். கல் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரால் கண்ணைக் கழுவலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதை மருத்துவரின் ஆலோசனை பெற்று அவர் சொல்லும் முறைப்படி பாதுகாப்பாகச் செய்ய வேண்டும். பொதுவாக இதை 6 மணி நேரத்துக்கொரு முறை செய்யச் சொல்வார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருவேளை கண்ணிலிருந்து அழுக்கோ, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் கசிவோ இருந்தால் கண் மருத்துவரை மீண்டும் அணுகி, ஆன்டிபயாடிக் தேவைப்படுமா என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.

Child (Representational Image)
Child (Representational Image)
Pixabay

ஒருவேளை இன்னொரு கண்ணும் இதே மாதிரி சிவந்து, வீங்கினாலோ, கண்ணைச் சுற்றி வீங்கினாலோ வேறு பாதிப்புகள் இருக்கலாம் என்ற சந்தேகப்பட வேண்டும். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டியது அவசியம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism