Published:Updated:

Doctor Vikatan: 15 நிமிடங்களுக்கொரு முறை சிறுநீர் கழிக்கும் குழந்தை; பிரச்னையின் அறிகுறியா?

Child (Representational Image) ( Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: 15 நிமிடங்களுக்கொரு முறை சிறுநீர் கழிக்கும் குழந்தை; பிரச்னையின் அறிகுறியா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Child (Representational Image) ( Pixabay )

என் 7 வயதுக் குழந்தை, 15 - 20 நிமிடங்களுக்கொரு முறை சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்கிறான். இந்த ஒரு பிரச்னையைத் தவிர, அவன் ஆக்டிவ்வாகவும் நார்மலாகவும் இருக்கிறான். அடிக்கடி சிறுநீர் கழிப்பது பிரச்னைக்குரிய விஷயமா?
- ரூபினி (விகடன் இணையத்திலிருந்து

மருத்துவர் சஃபி சுலைமான்
மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி.

``உங்கள் 7 வயதுக் குழந்தைக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிற சிறுநீர் பிரச்னை சாதாரணமானது இல்லை. அவசியம் மருத்துவ ஆலோசனை தேவைப்படுகிற விஷயம் இது. குழந்தையின் ஆணுறுப்பின் முன்தோலில் ஏதேனும் சுருக்கம் இருக்கிறதா, சிறுநீர் துவாரம் சிறுநீரை வெளியேற்ற சிரமப்படுகிற அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் சிறிய அறுவைசிகிச்சையின் மூலம் ஆணுறுப்பு முன்தோலை எடுத்துவிட்டுச் சரி செய்யலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர்ப்பாதை தொற்று இருந்தாலும் இப்படி இருக்கலாம். அரிதாக நரம்பு பாதிப்பு ஏதேனும் இருந்தாலும் இந்தப் பிரச்னை இருக்கக்கூடும்.

Child (Representational Image)
Child (Representational Image)
Photo by Bianca from Pexels

முதல் வேலையாக மருத்துவரை அணுகி, முன்தோல் பாதிப்பை செக் செய்யுங்கள். பைமோசிஸ் (phimosis) எனப்படும் பிரச்னை இருக்கிறதா என்று பார்த்து அதை அறுவைசிகிச்சையின் மூலம் சரிசெய்வார்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?