Published:Updated:

Doctor Vikatan: உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததும் குறைந்த மூட்டுவலி; உடற்பயிற்சியை நிறுத்திவிடலாமா?

Joint Pain (Representational Image) ( Image by Angelo Esslinger from Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததும் குறைந்த மூட்டுவலி; உடற்பயிற்சியை நிறுத்திவிடலாமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Joint Pain (Representational Image) ( Image by Angelo Esslinger from Pixabay )

எனக்கு கடந்த மாதம் மூட்டுவலி வந்தது. மருத்துவரை அணுகியபோது க்வாட்ரிசெப்ஸ் (Quadriceps) எக்சர்சைஸ் செய்யச் சொன்னார். இப்போது எனக்கு வலி இல்லை. நான் எத்தனை நாள்களுக்கு இந்தப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்? மூட்டுகளுக்கு இடையிலான சைனோவியல் திரவத்தை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

- கண்மணி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ராதாகிருஷ்ணன்
மருத்துவர் ராதாகிருஷ்ணன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மூட்டு, எலும்பு சிகிச்சை மருத்துவர் ராதாகிருஷ்ணன்.

``உங்கள் மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைத்த க்வாட்ரிசெப்ஸ் (Quadriceps) பயிற்சிகளை ஆயுள் முழுவதும் செய்வதன் மூலம் மீண்டும் உங்களுக்கு மூட்டுவலி வராமல் தவிர்க்கலாம். வலிதான் குறைந்துவிட்டதே, மறுபடி வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என நினைப்பதோ, வலி வரும்போது மட்டும் அந்தப் பயிற்சிகளைச் செய்வதோ தவறு. உடற்பயிற்சிகளின் மூலம்தான் மூட்டு இணைப்புகளில் சைனோவியல் திரவத்தைச் சுரக்கச் செய்ய முடியும். அந்தப் பயிற்சிகளின் மூலம் மூட்டு இணைப்புகளும் அப்பகுதியிலுள்ள திசுக்களும் பலம்பெறும். அதையும் தாண்டி சைனோவியல் திரவச் சுரப்பை அதிகரிக்கச் செய்ய மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்ளலாம். அந்த சப்ளிமென்ட்டுகளில் ஹைலரானிக் அமிலம் (Hyaluronic acid) இருக்கும்படி மருத்துவர் பரிந்துரைப்பார். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியதும் அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது தவிர கொலாஜன் அதிகமுள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும். உதாரணத்துக்கு ஆட்டுக்கால் சூப் போன்ற உணவுகள். கொலாஜன் அதிகமுள்ள உணவுகளும் சைனோவியல் திரவ சுரப்பை அதிகப்படுத்தும். இந்த கொலாஜனும் சப்ளிமென்ட் வடிவில் இன்று கிடைக்கிறது. ஆனாலும் அதை சப்ளிமென்ட்டாக எடுப்பதைவிடவும் உணவுகளின் மூலம் இயற்கையாகச் சேர்த்துக்கொள்வதுதான் சிறந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் கொலாஜன் சத்தானது அசைவ உணவுகளில் மட்டுமே கிடைப்பதால் சைவ உணவுக்காரர்களுக்கு அதற்கான மாற்று இருப்பதில்லை. அசைவ உணவாகச் சாப்பிட முடியாதவர்கள் சப்ளிமென்ட்டாக முயற்சி செய்யலாம். ஆனால் அந்த சப்ளிமென்ட்டுமே அசைவப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுபதுதான். மருந்தாக நினைத்துச் சாப்பிடுவதில் பிரச்னை இல்லை என நினைப்பவர்கள் சப்ளிமென்ட்டை முயற்சி செய்யலாம்.

கதவுகள் உராயாமலிருக்க எண்ணெய் போடுவதுபோலதான் சைனோவியல் திரவமானது மூட்டு எலும்புகள் உராய்வைத் தடுக்கப் பயன்படுகிறது. அந்த உராய்வைத் தடுக்கும் வழிகளில் கவனம் செலுத்த வேண்டும். முழங்கால் மூட்டுதான் உடலிலேயே மிகப் பெரிய மூட்டு இணைப்பு. அந்த இணைப்பிலுள்ள சைனோவியல் திரவத்தின் அளவு 2-3 மில்லிதான் இருக்கும். ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பில் சிலநேரம் இந்த திரவத்தின் உற்பத்தி அதிகமாக இருப்பதுண்டு.

ஆட்டுக்கால் சூப்
ஆட்டுக்கால் சூப்

மூட்டுத் தேய்மானம் அதிகரிப்பதன் காரணமாக சைனோவியல் திரவம் அதிகரிக்கும். சைனோவியல் திரவம் அதிகமிருப்பதால் அது நம்மை ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றிவிடும் என நினைக்கக்கூடாது. எனவே சைனோவியல் திரவத்தை அதிகரிக்கச் செய்வதைவிடவும், மூட்டு இணைப்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதுதான் முக்கியம். அதாவது அந்த மூட்டுகளுக்கு கொடுக்கக்கூடிய அழுத்தத்தைக் குறைத்தாலே போதும். உதாரணத்துக்கு பருமனானவர்கள் எடையைக் குறைக்க வேண்டும். முறையாக உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இதுதான் சிறந்த வழி."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?