Published:Updated:

கொரோனா வார்டில் இயற்கை மருத்துவரின் ஒரு நாள்!

கொரோனா வார்டு
Listicle
கொரோனா வார்டு

''கொரோனா வார்டுக்குள் புதிதாக வந்திருக்கிற தொற்றாளர்களிடம் 'இயற்கை மருத்துவர்' என என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களை யோகா செய்ய அழைப்பேன்.''


இயற்கை மருத்துவர் யோ. தீபா

இந்தக் கொரோனா காலத்தில், உலகின் கொடிய நோய் ஒன்றுக்கு எதிராக நோயாளிகளுக்குச் சேவை செய்கிற மருத்துவர்கள், வியர்வை வழிய வழிய பிபிஇ அணிந்து வரும் தேவதைகள். இந்த மருத்துவ தேவதைகளின் ஒரு நாள் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்வதற்காக இயற்கை மருத்துவர் யோ.தீபாவிடம் பேசினோம்.


1
யோ.தீபா

முதலில் மூச்சுப்பயிற்சி!

காலையில் எழுந்து குளித்தவுடன் என்னுடைய நாள் பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, தியானம் ஆகிய மூன்றுடன்தான் ஆரம்பிக்கும்.


2
இயற்கை மருத்துவர்

பிரார்த்தனை நேரம்!

`எல்லாரும் நல்லா இருக்கணும்’ என்று கடவுளிடம் மனமுருக வேண்டுதல் செய்வேன். இதுவும் என்னுடைய தினசரி வழக்கம்தான்.


3
பிரேக்ஃபாஸ்ட்

சத்தான, அளவான காலை உணவு! 

ஏழரை மணிக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பதற்காக, காலை உணவை 7 மணிக்கெல்லாம் சாப்பிட்டு விடுவேன். இட்லி, சாம்பார் என்று மாவுச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்த உணவுகள்தான் என்னுடைய பிரேக் ஃபாஸ்ட்டில் இருக்கும்.


4
டிஸ்கஷன் நேரம்

தெரப்பிஸ்ட்களுடன் ஒரு டிஸ்கஷன்! 

மருத்துவமனை சென்றதும், அங்கிருக்கும் மற்ற தெரப்பிஸ்ட்களிடம் கொரோனா தொற்றாளர்களில் எத்தனை பேர் நோய் எதிர்ப்பு சக்தி பானம் குடித்தார்கள், கபசுரக் குடிநீர் குடித்தார்கள் எனக் கேட்டுத் தெரிந்துகொள்வேன். கொரோனா தொற்றாளர்களுக்கு தினமும் டெலி கவுன்சலிங் தருவது என் பணிகளில் ஒன்று. அதனால், அன்றைய டெலி கவுன்சலிங்க்கான தொலைபேசி எண்கள் வந்துவிட்டனவா என்பதையும் அவர்களுடன் டிஸ்கஸ் செய்வேன்.


5
கொரோனா வார்டு

தொற்றாளர்களின் எண்ணிக்கை அவசியம்!

கோவிட் வார்டு ஸ்டாஃப் நர்ஸிடம், அன்றைய தினம் மொத்தம் எத்தனை கொரோனா தொற்றாளார்கள் இருக்கிறார்கள், புதிதாக வந்திருக்கும் தொற்றாளர்கள் எண்ணிக்கை, மோசமான நிலையில் இருப்பவர்கள், நுரையீரல் பாதிப்புடன் இருப்பவர்கள், கொரோனா குறித்த அதீத பயத்தில் இருப்பவர்கள் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வேன்.


6
கொரோனா வார்டு

நோய் எதிர்ப்பு நேரம்!

இஞ்சி, அதிமதுரம், மஞ்சள், துளசி, மிளகு ஆகியவற்றை இடித்து நீரில் கொதிக்கவைத்த நோய் எதிர்ப்பு சக்தி பானத்தைக் குடித்துவிட்டு தெம்பாக கொரோனா வார்டு இருக்கிற மருத்துவமனைப் பகுதிக்குள் நுழைவேன். இந்தப் பானத்தை வீட்டிலேயே தயாரித்து எடுத்துச் சென்றுவிடுவேன்.


7
இயற்கை மருத்துவர் யோ. தீபா

இது பாதுகாப்பு நேரம்!

பிபிஇ அணிந்துகொள்வேன். இப்போது கொரோனா தொற்றாளர்களைச் சந்திக்க நான் ரெடி.


8
yoga

கொரோனா தொற்றாளர்களுக்கு யோகா!

கொரோனா வார்டுக்குள் நுழைந்தவுடன் புதிதாக வந்திருக்கிற தொற்றாளர்களிடம் 'இயற்கை மருத்துவர்' என என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களை யோகா செய்ய அழைப்பேன். அவர்களுக்கு தாடாசனம், உட்கட்டாசனம், கட்டி சக்ராசனம், அர்த்தக்கட்டி சக்ராசனம், அர்த்த சக்ராசனம், பிரணாயாமம், மூச்சுப்பயிற்சி, பிராண முத்திரை, வாயு முத்திரை, இருதய முத்திரை போன்றவற்றைச் சொல்லிக்கொடுப்பேன்.


9
facial Steam

கொரோனாவை விரட்ட சில தகவல்கள் பரிமாறுதல்!

வெந்நீர் குடிப்பது, கல் உப்பு போட்ட தண்ணீரில் வாய்கொப்பளிப்பது, சூரிய ஒளியில் நிற்பது, நோய் எதிர்ப்பு சக்திக்கான அக்குபிரஷர் பாயின்ட்களை தூண்டுவதற்குக் கற்றுத்தந்து செய்ய வைப்பது, முகத்துக்கு ஸ்டீம் எடுப்பது போன்ற கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு முறைகளைச் சொல்லிக் கொடுப்பேன்.


10
கவுன்சலிங்

இது கவுன்சலிங் நேரம்!

அடுத்தது கவுன்சலிங். கொரோனா வந்ததால் பயம் மற்றும் மன அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு டெலி கவுன்சலிங் மூலம் தைரியம் கொடுப்பேன். இப்படியே ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கிற மூன்று கொரோனா பிளாக்கிலும் வேலை முடிய, பகல் 2 மணி ஆகிவிடும்.


11
லன்ச் டைம்

மதிய சாப்பாட்டுக்கான நேரம்!

வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற உணவு. இப்போதெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தியே எல்லா சமையலிலும் முக்கியச் சேர்பொருளாகியுள்து. இத்துடன் பணி நேரம் முடிவடைய, பிபிஇ டிஸ்போஸல், மாஸ்க், சானிட்டைசர் என்று வீடு நோக்கிய பயணம்.

கொரோனா தொற்றாளர்களை நேரடியாகக் கையாண்டுவிட்டு வருகிறோம். எனவே, என் வீட்டுக்குள் நான் கோவிட்-19 வைரஸ் விருந்தாளி யாரையும் அறியாமல் அழைத்துச் சென்றுவிடாமல் இருக்க, குளிப்பதிலிருந்து துணிகளைக் கிருமிநாசினி செய்வது, காலணிகள், கைப்பையைக் கையாள்வது வரை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகும் கொரோனாவுக்கு குட்பை சொல்லிவிட்டு வீட்டுக்குள் செல்ல...'' என்றார் தீபா.

வழக்கமான சிகிச்சைகள்போல் அல்லாது, மருத்துவர்கள் மிகத் தீவிரமான ஒரு தொற்றுக்கு இடையில் தினம் தினம் பணிபுரிய வேண்டிய சூழல் இது. அவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு, முன்னைவிட அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். இதுவரை நீங்கள் எங்களுக்குச் சொன்னதை இப்போது நாங்கள் உங்களுக்கும் சொல்கிறோம்.. Take best care, Doctors!