Published:Updated:

வாசனைகளையும் சுவைகளையும் உணர்வதில் சிக்கல்... கொரோனாவின் புதிய அறிகுறிகள்?!

கொரோனா
கொரோனா

கொரோனா அறிகுறிகளான, காய்ச்சல், இருமல், சளி, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி அறிவுரை பெற்றுவரும் நிலையில், ஐரோப்பாவில் உள்ள காது-மூக்கு-தொண்டை மருத்துவ நிபுணர்கள், கொரோனாவுக்கான புதிய அறிகுறி ஒன்றைக் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேபோகிறது. மக்கள் தங்களுக்கு கொரோனாவிற்கான அறிகுறிகளான, காய்ச்சல் இருமல், சளி, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி அறிவுரை பெற்றுவரும் நிலையில், ஐரோப்பாவில் உள்ள காது-மூக்கு-தொண்டை மருத்துவ நிபுணர்கள் கொரோனாவுக்கான புதிய அறிகுறி ஒன்றைக் கூறியுள்ளனர்.

கொரோனா
கொரோனா

வாசனையை உணரும் திறனில் திடீரென்று இயலாமையை உணர்ந்தாலோ அல்லது அந்தத் திறன் முழுவதுமாக இல்லாமல்போனாலோ, அவர்களுக்கு வைரஸ் மறைமுகத் தொற்றாக (Hidden carrier) இருக்கலாம் என்றும், அவர்களுக்கு மற்ற அறிகுறிகள் இல்லை என்றாலும் இது மட்டுமே ஒரு பிரதான அறிகுறியாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

தென் கொரியா, சீனா, இத்தாலியில் பாதிக்கப்பட்ட மக்களில் கால் சதவிகிதத்தினருக்கு , வாசனையை உணர்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பிரிட்டிஷ் காது-மூக்கு-தொண்டை அமைப்பின் தலைவர், மருத்துவர் நிர்மல் குமார் கூறுகையில், "தென்கொரியாவில் நோய்த் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 30 சதவிகிதத்தினருக்கு வாசனையை உணரும் தன்மை இல்லை என்பதே முக்கிய அறிகுறியாக இருந்துள்ளது. மற்ற அறிகுறிகள் இல்லாமல் இது மட்டுமே அறிகுறியாக வந்த பலருக்கு, நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பெரும்பாலும் இளவயது நோயாளிகளுக்கு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் குறைவாக உள்ளன. வாசனையை உணரும் தன்மை குறைதல், சுவை குறைதல் இரண்டும்தான் பிரதான அறிகுறிகளாக உள்ளன. இதன்மூலம் வைரஸ் மூக்கின்வழி பரவக் கூடியது என்பது உறுதியாகியிருக்கிறது.'' என்று சொல்லியிருக்கிறார்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் ஏழு நாள்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம். இது, தொற்று மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

வாசனையை உணர்வதிலோ, சுவையை உணர்வதிலோ பிரச்னையை உணர்ந்தால் இனி அலட்சியம் வேண்டாம். அவற்றையும் கொரோனாவுக்கான அறிகுறிகளாகக் கருதி கவனமாக இருக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு