Published:Updated:

ஒட்டுமொத்த கொரோனா வேரியன்ட்களுக்கு எதிராக விரைவில் புதிய தடுப்பூசி; இயல்புநிலை திரும்புமா?

Corona ( AP Illustration/Peter Hamlin )

மேற்கு வங்கத்தின் கஸி நஸ்ரூல் பல்கலைக்கழகம் மற்றும் ஒடிசாவின் புவனேஷ்வர் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து அனைத்து வகை கொரோனா வைரஸுக்கும் எதிராகப் பயன்படுத்தக்கூடிய `AbhiSCoVac' என்ற புதிய தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு எதிராக வீரியமிக்க தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் உலகம் முழுக்கவே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், எதிர்காலத்தில், உருமாறும் கொரோனா வைரஸுக்கும், கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து வைரஸ்களுக்கும் எதிராக இந்திய ஆராச்சியாளர்கள் புதிய தடுப்பூசியைக் கண்டறிந்துள்ளனர்.

corona virus
corona virus
Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேற்கு வங்கத்தின் கஸி நஸ்ரூல் பல்கலைக்கழகம் மற்றும் ஒடிசாவின் புவனேஷ்வர் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து அனைத்து வகை கொரோனா வைரஸுக்கும் எதிராகப் பயன்படுத்தக்கூடிய `AbhiSCoVac' என்ற புதிய தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தத் தடுப்பூசியானது கொரோனா வைரஸின் எதிர்கால தாக்குதலுக்கு எதிராக வீரியமிக்கதாகவும் செயல்படும் வகையில் இருக்குமாம். இது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை, `மாலிக்யூலர் லிக்யுட்ஸ்’ என்ற இதழில் வெளியிடுவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதை பற்றி கஸி நஸ்ரூல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பேசுகையில், ``இந்தத் தடுப்பூசி, அதிக நிலைத்தன்மையையும் நோய் எதிர்ப்புசக்தியையும் கொண்டது. கொரோனா வைரஸின் அனைத்து உருமாற்றங்களுக்கும் எதிராகச் செயல்படும் தடுப்பூசி உலகில் வேறு எங்கும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தத் தடுப்பூசியானது உடலிலுள்ள TLR4 என்ற புரதத்தின் மீது வலிமையான பிணைப்பை ஏற்படுத்தும்.

TLR4 புரதம்தான் உடலில் சார்ஸ் கோவி-2 வைரஸை கண்டறிவதற்குப் பயன்படும். மேலும் வைரஸ் உள்ளே நுழைந்ததும் அதற்கு எதிராக நோய் எதிர்ப்புத் திறனையும் செயல்பட வைக்கும். மேலும் செல்களில் அதிக நினைவுத்திறனையும் உருவாக்கும் என்பதால், வைரஸ் தாக்குதலிருந்து மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பளிக்கும்" என்று தெரிவித்துள்ளனர்.

இந்தத் தடுப்பூசி குறித்து தொற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் ராம் கோபால் கிருஷ்ணனிடம் கேட்டோம்.

Dr.Ram Gopal Krishnan
Dr.Ram Gopal Krishnan

``இந்தத் தடுப்பூசி ஆராய்ச்சியானது ஆரம்ப நிலையில்தான் உள்ளது. அனைத்து வகை கொரோனா வைரஸின் மரபணு தோற்றத்தைக் கொண்டு, அதற்கு எதிராக தடுப்பூசி தயாரிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்கிறார்கள்.

ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் அதை முதலில் விலங்குகளுக்கு செலுத்தி, பரிசோதனை செய்து பார்ப்பார்கள். விலங்குகளின் மரபணுக்களில் இதைப் பரிசோதித்து எந்த பாதிப்பும் இல்லையென்றால் மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆய்வில் புரதத்தின் கட்டமைப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதையடுத்து தடுப்பூசி உருவாக்குவதற்கான ஆய்வுகள் மேம்படுத்தப்படும். அதை அடுத்து விலங்குகளுக்குப் பரிசோதிக்கப்படும். இதுபோன்று பல விஞ்ஞானிகள் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

அனைத்துமே ஆய்வக நிலையில்தான் உள்ளன. கொரோனாவிற்கு மட்டும் அல்ல இன்ஃப்ளூயென்ஸா வைரஸ் போன்ற தொற்றுகளுக்கும் இதுபோன்ற தடுப்பூசி ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தத் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்கு குறைந்தது 2 அல்லது 3 வருடங்கள் ஆகலாம்.

Covid 19 Vaccination
Covid 19 Vaccination
AP Photo / Rajanish Kakade

இந்தத் தடுப்பூசியின் பின்விளைவுகள் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. கொரோனாவிற்கு செலுத்தப்படும் தடுப்பூசிக்கு மட்டுமல்ல அனைத்து தடுப்பூசிகளுக்கும் பின்விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

இந்த வகையான தடுப்பூசி தயாரிப்பதற்கான யோசனை நல்லதுதான். இது பயன்பாட்டுக்கு வந்தால் கட்டாயம் விஞ்ஞானத்துக்கு நன்மை என்றே சொல்லலாம்" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism