Published:Updated:

`தினமும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி... சும்மா இருங்க பாஸ்!' - டச் மக்களின் `நிக்சென்' வாழ்வியல்

டச் மொழியில் `நிக்சென்' என்றால், `எதுவும் செய்யாமல் இருப்பது (Doing nothing)' என்று பொருள். `சும்மா இருக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா' என்பதுபோல, சும்மா இருப்பது குறித்த சில வரையறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

Representational Image
Representational Image

யாரிடமாவது, `என்ன செய்யுற...' என்று கேட்கும்போது, `சும்மா இருக்கேன்' என்று அவர் பதில் சொன்னால், உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? கோபப்படுவீர்கள்தானே... `சும்மா இருக்கேன்' - இந்த வார்த்தையை யார் சொல்லிக் கேட்டாலும் நம்மில் பலருக்கு கோபம்தான் வரும். ஆனால், சும்மா இருப்பதை மன ரிலாக்ஸேஷனுக்கான ஒரு வாழ்வியல் கான்செப்ட்டாக மாற்றி, அதற்கு ஒரு பெயரும் வைத்து பின்பற்றிவருகிறார்கள், டச் மக்கள். அதுதான்... `நிக்சென் (Niksen)'.

நிக்சென்
நிக்சென்

`என்னது, சும்மா இருக்கிறது ஒரு கான்செப்டா...' என நீங்கள் நினைக்கலாம். 'நீங்க நம்பலைன்னாலும் அதுதான் நெசம்' என்கிறது உளவியல் உலகமும். இன்னும் ஒருபடி மேலே போய், `தினமும் கொஞ்ச நேரம் ஒதுக்கி, சும்மா இருங்கங்க' என பரிந்துரைக்கிறார்கள் அவர்கள்.

டச் மொழியில் `நிக்சென்' என்றால், `எதுவும் செய்யாமல் இருப்பது (Doing nothing)' என்று பொருள். `சும்மா இருக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா' என்பதுபோல, சும்மா இருப்பது குறித்த சில வரையறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. சும்மா இருக்கும்போது, ரொம்ப ஸ்ட்ரிக்டாக சும்மா இருக்கணுமாம்.

`நிக்சென்' மோடில் வடிவேலு
`நிக்சென்' மோடில் வடிவேலு

அதாவது, எந்த வேலையும் செய்யாமல் இருப்பது மட்டுமல்ல, சும்மா இருப்பது என்பது மொபைல், டி.வி என எல்லா பொழுதுபோக்குகளுக்கும் நோ. நமக்கு ஆதாயம் தரும் விஷயங்கள்குறித்து பேசக்கூடாது. கையெழுத்து போடக்கூடாது. `அந்த நொடி, அந்த நிமிஷம் சும்மா மட்டுமே இருக்க வேண்டும்' என்பதுதான் இந்த `நிக்செனி'ன் ஒரே கொள்கை, செம ஸ்ட்ரிக்ட் கொள்கை.

`நிக்செனை' எந்த அறையில், எந்தச் சூழலில், என்ன மாதிரியான இடத்தில் மேற்கொள்வது என்பது, முழுக்க முழுக்க தனி மனித விருப்பம்தான்.
ஆய்வாளர்கள்

`சும்மா இருப்பது என்பது, சோம்பேறித்தனம் இல்லை. உண்மையில், அது மனஅமைதிக்கான வழிமுறை' என்கின்றனர் டச் மக்கள். `நிக்செனி'ன் நன்மைகளாக டச் மக்கள் முன்வைப்பவை...

* மனஅழுத்தம் குறையும். ஆகவே, மனநலன் சார்ந்த தீவிர பிரச்னைகள், சிக்கல்கள் இருப்பவர்கள், மனநல ஆலோசகர் அல்லது மருத்துவரிடம் ஆலோசனைபெற்று, தினமும் நேரம் ஒதுக்கி `நிக்செனை' மேற்கொள்ளலாம்.

* `நிக்செனை'யே ஒரு வேலையாக நினைத்துச் செய்யும்போது, அது சோம்பேறித்தனத்துக்கு வழிவகுக்கலாம். எனவே, அட்டவணை இல்லாமல், நேரம் கிடைக்கும்போது `நிக்செனை' மேற்கொள்வது எமோஷனல் ரிலாக்ஸேஷனுக்கு உதவும்.

* `நிக்சென்', ஒருவரின் க்ரியேட்டிவிட்டியை அதிகரிக்கும். தேக்கத்திலிருந்து மீட்டு, வழக்கத்தைவிட புத்துணர்ச்சியோடும் உற்சாகத்தோடும் செயல்பட உதவும். கவனச்சிதறல் ஏற்படாமலிருக்கவும் உதவும்.

Representational Image
Representational Image

* அடிக்கடி பதற்றமடைபவர்களுக்கு, `நிக்சென்' நிதானத்தைக் கற்றுத்தரும்.

* `நிக்செனை' எந்த அறையில், எந்தச் சூழலில், என்ன மாதிரியான இடத்தில் மேற்கொள்வது என்பது, முழுக்க முழுக்க தனி மனித விருப்பம்தான். சிலருக்கு அடர் இருட்டு அறையில் சும்மா இருப்பது பிடிக்கலாம். இன்னும் சிலருக்கு, சும்மா நடப்பது ரொம்பப் பிடிக்கலாம். சம்பந்தப்பட்ட நபரைப் பொறுத்து சூழல் மாறும் என்பதால், சூழலை அவரே முடிவுசெய்வது நல்லது. நல்ல சூழல் இருந்தால்தான், சும்மா இருப்பதை என்ஜாய் பண்ணிச் செய்ய முடியும். என்ஜாய் பண்ணிச் செய்தால் மட்டும்தான் நன்மைகள் கிடைக்கும்.

நிக்சென்
அந்த நொடி, அந்த நிமிஷம் சும்மா மட்டுமே இருக்க வேண்டும்!

``நம்மில் பலரும் `நிக்செனை'யும் தியானத்தையும் குழப்பிக்கொள்வோம். `நிக்சென்', தியானம் இரண்டும் வேறு வேறு'' என்று தெளிவுபடுத்துகிறார், மனநல ஆலோசகர் லக்‌ஷ்மி பாய். இரண்டுக்குமான வேறுபாடு குறித்தும், `நிக்செனி'ன் இன்னபிற நன்மைகள் குறித்தும் பேசினார் அவர்.

உளவியல் ஆலோசகர் லஷ்மி பாய்
உளவியல் ஆலோசகர் லஷ்மி பாய்

தியானமும் `நிக்செசனு'ம்!

``தியானம் செய்யும்போது, ஒரே இடத்தில் சில நிமிடங்களுக்கு அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். ஆக, என்ன மாதிரியான சூழலில் தியானத்தை மேற்கொள்கிறோம் என்பது இங்கு முக்கியமானதாக இருக்கிறது. `நிக்செனி'ல் சூழல் முக்கியமல்ல. வேலை எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே விதி.

`நிக்செனை'யே ஒரு வேலையாக நினைத்துச் செய்யும்போது, அது சோம்பேறித்தனத்துக்கு வழிவகுக்கலாம்.
உளவியல் ஆலோசகர் லஷ்மி பாய்

நன்மைகள்

எதைப் பற்றியும் சிந்திக்காமல், எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் `நிக்செனை' மேற்கொள்ளும்போது, ரத்த ஓட்டம் சீராகி, மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அடுத்தடுத்த பணிகளின்போது கவனச்சிதறல் ஏற்படாது. முன்பைவிட கூடுதல் மகிழ்ச்சியுடன் பணியை மேற்கொள்ளலாம். எனவே, பணிக்கு இடையே மனஅழுத்தத்துக்கு ஆளாகிறவர்கள், அப்போதே, அங்கேயே சில நிமிடங்களுக்கு `நிக்செனை' மேற்கொள்ளலாம்.

நிக்சென்
நிக்சென்
Vikatan

குறிப்பு:

எப்போதும் ஏதாவது வேலைசெய்துகொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, `நிக்சென்' கான்செப்ட் சோம்பேறித்தனமாகத் தெரியக்கூடும். ஆனால், இது முற்றிலும் தவறான புரிந்துணர்வு. ஏனெனில், வலுக்கட்டாயமாக ஒரு வேலையைத் தள்ளிப்போடுவதுதான் சோம்பேறித்தனம். `நிக்சென்' என்பது, புத்துணர்ச்சிக்காகச் செலவிடப்படும் பிரத்யேக நிமிடங்கள். ஆக, இது சோம்பேறித்தனமல்ல" என்றார் லக்‌ஷ்மி பாய்.

Vikatan

அனைவருக்கும் பிடித்த, மிக எளிதான ரிலாக்ஸிங் வழிமுறையாக இருப்பதால், வருங்காலத்தில் நம் நாட்டிலும் இதற்கு வரவேற்பு கிடைக்கலாம்.

செத்த சும்மா இருப்போம் பாஸ்!