Published:Updated:

70 வயதுக்கு முன்பே நிகழும் தொற்றாநோய் இறப்புகள்... காரணம் என்ன? அதிர வைக்கும் WHO அறிக்கை!

representational image

வறுமையோடு தொற்றாநோய்களுக்கு தொடர்பு உள்ளது. ஏனெனில் தொற்றாநோய்கள் வருமானம் குறைவாக உள்ள நாடுகளையே அதிகமாக பாதித்துள்ளன.

70 வயதுக்கு முன்பே நிகழும் தொற்றாநோய் இறப்புகள்... காரணம் என்ன? அதிர வைக்கும் WHO அறிக்கை!

வறுமையோடு தொற்றாநோய்களுக்கு தொடர்பு உள்ளது. ஏனெனில் தொற்றாநோய்கள் வருமானம் குறைவாக உள்ள நாடுகளையே அதிகமாக பாதித்துள்ளன.

Published:Updated:
representational image

தொற்றாநோய்கள் குறித்த அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் இரண்டு விநாடிகளுக்கு ஒருவர் தொற்றாநோய்களால் உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ளது. 

அந்த அறிவிப்பில், ``மரபணு ரீதியாக, மனநல குறைபாடுகள் ரீதியாக அல்லது உடல் பாதிப்பின் காரணமாக நீண்ட நாள்களாக நீடிக்கும் நோயானது தொற்றாநோய்களாகக் கருதப்படுகின்றன. இதில் இதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவை முக்கியமானவை.

WHO - உலக சுகாதார நிறுவனம்
WHO - உலக சுகாதார நிறுவனம்

உலகம் முழுதும் அனைத்து வயதினரும் தொற்றாநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்கள் பொதுவாக வயதானவர்களை பாதிக்கும் நோய்கள் என்று கூறப்பட்டாலும், ஆதாரங்களின்படி 17 மில்லியன் தொற்றா நோய்களின் இறப்புகள் 70 வயதிற்கு முன்பே நிகழ்கின்றன. அதிலும் இந்த மரணங்களில் 86 சதவிகித இறப்புகள்,  குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்கள் உள்ள நாடுகளில் மட்டுமே ஏற்படுகின்றன. 

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* ஆரோக்கியமற்ற உணவுகள், உடல் உழைப்பின்மை, புகையிலை பழக்கம், மது அருந்துதல் போன்றவற்றால் இத்தகைய நோய் பாதிப்பு அதிகரிக்கிறது. 

* தொற்றாநோய்களால் ஆண்டுதோறும் 41 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். இது உலகளவில் ஏற்படும் 74 சதவிகித இறப்புகளுக்குச் சமம்.

*இதய நோய்களால் 17.9 மில்லியன் மக்களும், புற்றுநோயால் 9.3 மில்லியன் மக்களும், நுரையீரல் நோய்களால் 4.1 மில்லியன் மக்களும், நீரிழிவால் 2.0 மில்லியன் மக்களும் இறக்கின்றனர். 

*ஆண்டுதோறும் 8 மில்லியன் இறப்புகள் புகையிலை பழக்கத்தால் நிகழ்கின்றன. இதில் பாசிவ் ஸ்மோக்கர்களின் இறப்பும் அடக்கம். அதாவது புகைப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கு அந்தப் புகையால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பது.

Smoking
Smoking

*அதிகப்படியான உப்பின் பயன்பட்டால் ஆண்டுதோறும் 1.8 மக்கள் இறக்கின்றனர். 

*கேன்சர் மற்றும் மது குடிப்பதால் ஆண்டுதோறும் 3 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இறக்கின்றனர். 

*போதுமான உடல் செயல்பாடு இல்லாததன் காரணமாக ஆண்டுதோறும் 8,30,000 இறப்புகள் நிகழ்கின்றன. 

*தொற்றாநோய்களின் அதிகப்படியான இறப்புக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு, உடல் பருமன் அதிகரிப்பு, குளுக்கோஸ் அளவு அதிகரிப்பு, ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பு போன்ற வளர்சிதை மாற்றமும்  காரணங்களாக அமைகின்றன. 

அத்துடன், வறுமையோடு தொற்றாநோய்களுக்கு தொடர்பு உள்ளது. ஏனெனில் தொற்றாநோய்கள் வருமானம் குறைவாக உள்ள நாடுகளையே அதிகமாக பாதித்துள்ளன. தனிநபர் மற்றும் சமூகத்தில் தொற்றாநோய்களின் தாக்கத்தைக் குறைக்க, தொற்றாநோய்களைக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டும்” என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.