Published:Updated:

``உணர்வைக் காட்டமுடியாததே உச்சக்கட்ட வலி!" - செவிலியர் தமிழ்ச்செல்வி

செவிலியர்
செவிலியர்

இனிமேலும் இந்த சேவை வாழ்க்கைதான் எனக்கானது. தொடர்ந்து செய்வேன். எனக்குக் கொரோனா பயமெல்லாம் இல்லை. எல்லா நோயாளிகளைப் போலத்தான் கொரோனா நோயாளிகளும்.

"எனக்கு 38 வயதாகிறது. என் இரண்டு அக்காக்களும் மருத்துவத்துறையோடு தொடர்புடையவர்கள். மூத்த அக்கா செவிலியர். இவர்களால் எனக்கும் செவிலியர் பணிமேல் ஈடுபாடு வந்துவிட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் 12 ஆண்டுகளாகப் பணி செய்கிறேன். பத்து வருடங்களாக அறுவை சிகிச்சை வார்டில் வேலை. ரொம்பவே சவாலானது. குறிப்பாக எலும்பியல் துறையில் அறுவை சிகிச்சையெல்லாம் எட்டு மணிநேரம் வரைகூட நடக்கும். சாப்பிடக்கூடப் போகமுடியாது. அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் பொது வார்டில் பணி. தற்போது கொரோனா வார்டில் பணியாற்றுகிறேன்.

கலைச்செல்வி கவச உடையில், கலைச்செல்வி
கலைச்செல்வி கவச உடையில், கலைச்செல்வி

பயிற்சிக்காலத்தில் நிறைய அனுபவங்கள். நோயாளிகளிடம் எங்களுடைய உணர்வை வெளிப்படுத்தக்கூடாது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பழகிக்கொண்டேன். அதுதான் இருப்பதிலேயே ரொம்பவும் கஷ்டமானது. நாங்கள் அவர்களுக்குச் செய்கிற சேவையைப் பார்த்து கையைப் பிடித்துக்கொண்டு அழுவார்கள். அப்போதும்கூட உணர்வை வெளிக்காட்ட மாட்டோம். இத்தனை வருடங்களாக இப்படித்தான் என் வாழ்க்கை. இனிமேலும் இந்த சேவை வாழ்க்கைதான் எனக்கானது. தொடர்ந்து செய்வேன். எனக்குக் கொரோனா பயமெல்லாம் இல்லை. எல்லா நோயாளிகளைப் போலத்தான் கொரோனா நோயாளிகளும்.

சென்னை குரோம்பேட்டையிலிருந்து 70 வயது முதியவர் ஒருவர் வந்திருந்தார். அவருக்குக் கொரோனா பாசிட்டிவ். ஏற்கெனவே மஞ்சள்காமாலை, குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் என நிறைய பாதிப்புகளோடு தவித்தவருக்கு இப்போது கொரோனாவும் வந்திருக்கிறது. வீட்டில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்த உறவுக்காரர்கள், 'கொரோனா பாசிட்டிவ்' எனத் தெரிந்ததும் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டார்கள். துணைக்கு யாரும் இல்லாமல் வந்து சேர்ந்திருக்கிறார் அந்தப் பெரியவர். உதவிக்கு யாருமே இல்லாமல் தவித்தவருக்கு சேவைசெய்ய நான் சென்றதைப் பார்த்ததும் அவரின் கண்களில் அவ்வளவு மகிழ்ச்சி. அவருக்கு உடைமாற்றி விடுவது, உணவூட்டுவது, இயற்கை உபாதைகளுக்கு உதவுவது எனப் பணிசெய்தேன். கொரோனா வார்டில் ஒருவாரம் பணி முடித்துவிட்டு இப்போது க்வாரன்டீனில் இருக்கிறேன்.

கலைச்செல்வி கவச உடையில், கலைச்செல்வி குடும்பத்துடன்
கலைச்செல்வி கவச உடையில், கலைச்செல்வி குடும்பத்துடன்

மீண்டும் பணிக்குப் போகும்போது அந்தப் பெரியவரை விசாரித்துவிட்டுதான் வேலையையே தொடங்குவேன். அவர் நிச்சயம் குணமடைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது!" - செவிலியர் தமிழ்ச்செல்வியின் இந்தப் பகிர்வு ஓர் உதாரணம்தான்.

"கவச உடையைப் போட்டதும் பீறிடும் அழுகை" - கலைச்செல்வி' | "எங்களுக்காகவும் தொழுகை செய்த நோயாளிகள்!" - ரேகா | "செவிலியர் மட்டுமல்ல மனநல ஆலோசகரும் நாங்கள்தான்" - கு. செல்வகுமார் | "ரோபோவாக மாறியதுபோல் இருக்கிறது" - கலைச்செல்வி...

- தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் பணியாற்றும் சில செவிலியர்களின் அசாதாரண அனுபவங்களை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > சிரமங்கள் பொறுத்தோம்; சேவைகள் புரிந்தோம்! - வலிகளைப் போக்கும் வழித்துணை செவிலியர்கள். Click Here https://bit.ly/2LbLnaI

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம்.

குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு