Published:Updated:

திறக்கப்படும் பள்ளிகள்... மாணவர்களின் நோய் எதிர்ப்புத் திறனுக்கான உணவுகள்... ஒரு வழிகாட்டி!

school campus in New Delhi, India
school campus in New Delhi, India ( AP Photo/Altaf Qadri )

இயற்கையான வழிகளில் பிள்ளைகளின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? விடுதி மாணவர்கள் என்ன செய்யலாம்?

மிழகத்தில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இடையில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று அனுமதி வழங்கி, பிறகு எதிர்ப்புகளால் மீண்டும் அந்த அனுமதியை நாள் குறிப்பிடாமல் தள்ளிப்போட்டது அரசு. பள்ளிகள் திறப்பது குறித்து, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டத்தையும் பள்ளிக்கல்வித்துறை நடத்தி முடித்தது.

Students wearing face masks as a precaution against the coronavirus, attend classes as schools reopen after being closed for months due to the COVID-19 pandemic in New Delhi, India
Students wearing face masks as a precaution against the coronavirus, attend classes as schools reopen after being closed for months due to the COVID-19 pandemic in New Delhi, India
AP Photo/Altaf Qadri

இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து, வரும் ஜனவரி 19-ம் தேதி (நாளை) முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பள்ளிகள் அனைத்தும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றி வகுப்புகளை நடத்தலாம் என்றும், ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கவும் அறிவுறுத்தப் பட்டிருக்கிறது. மேலும், மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்திரைகளுக்குப் பதிலாக இயற்கையான வழிகளில் பிள்ளைகளின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? விடுதி மாணவர்கள் என்ன செய்யலாம்? ஊட்டச்சத்து ஆலோசகர் சங்கீதாவிடம் கேட்டோம்.

``லாக்டௌனால் ஏற்பட்ட நீண்ட விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. பல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் மேம்பட வைட்டமின், மினரல் மாத்திரைகளை வழங்குவார்கள். குழந்தைகளுக்குத் தேவைப்படும் சத்துகளை மாத்திரை வடிவில் கொடுப்பதைக் காட்டிலும் உணவு வழியாகக் கொடுப்பதே சிறந்தது.

ஊட்டச்சத்து ஆலோசகர் சங்கீதா
ஊட்டச்சத்து ஆலோசகர் சங்கீதா

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளில் முக்கியமான ஒன்று முட்டை. இதில் வைட்டமின்- ஏ, பி, டி, ஈ உள்ளிட்ட சத்துகள் உள்ளன. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தினமும் காலையில், உணவுடன் சேர்த்து வேக வைத்த முட்டை ஒன்றைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் அடைந்துவிடும் என்பதால் ஒருநாளில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளைக்கூட அவர்களின் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற சிறுதானியங்களில் (Millet) அனைத்து விதமான வைட்டமின், மினரல் சத்துகளும் நிரம்பியுள்ளன. இவற்றில் இனிப்பு அல்லது காரம் சேர்த்து உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்நாக்ஸ் வடிவில் செய்து தரலாம்.

இதேபோல் காய்கறி, கீரைகளிலும் சத்துகள் நிரம்பியுள்ளன. வாரத்துக்கு மூன்று நாள்கள் உணவில் கீரை இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளவும். பச்சைக் காய்கறிகளை சாலட் வடிவில் செய்து கொடுக்கலாம். பழங்களைச் சாறு பிழிந்து தருவதைக் காட்டிலும் அப்படியே சாப்பிடத் தருவதே நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிஸ்கட், சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளுக்குப் பதிலாக முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட உலர் பழங்களை சிறிது காரம், உப்பு போட்டு வறுத்துத் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

குறைந்த பட்சம் வாரத்தில் இரண்டு நாள்களாவது மீன், சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகள் குழந்தைகளின் சாப்பாட்டில் இடம்பெற வேண்டும்.

ஒருநாளில் இரண்டு வேளைக்குப் பசும்பாலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காலையில் 7-9 மணி வரையில் உள்ள சூரிய ஒளியில் வைட்டமின்-டி அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் குழந்தைகளைச் சிறிது நேரம் வெயிலில் நிற்க வைப்பது அவர்கள் இயற்கையான வழியில் வைட்டமின்-டி-யை பெற ஏதுவாக இருக்கும்.

Dry Fruits
Dry Fruits
Photo by Marta Branco from Pexels
கோழிக்கறி vs கொண்டைக்கடலை... சைவமோ அசைவமோ, சரியான ஊட்டச்சத்தைப் பெறுவது எப்படி?

நொறுக்குத்தீனிகளை அதிகம் விரும்பும் குழந்தைகளைக் காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கை உணவுகளைச் சாப்பிட வைப்பது கொஞ்சம் கஷ்டம். அவர்களைக் கவரும் விதத்தில் இந்த உணவுகளைச் சமைத்துக் கொடுத்தால் எளிதில் உண்டுவிடுவார்கள்.

எடுத்துக்காட்டுக்குக் காய்கறிகள், முட்டை எல்லாம் சேர்த்து பீட்சா செய்து கொடுக்கலாம். டிரை ஃபுரூட்ஸில் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். அதிகம் எண்ணெய் சேர்க்காமல் காய்கறிகளைக் கொண்டு கட்லெட் செய்து தரலாம். அவர்கள் விரும்பிச் சாப்பிடும் நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவுகளிலேயே காய்கறிகள், பருப்புகளைச் சேர்த்து வித்தியாசமாகச் செய்து தரலாம்.

இப்படி ஆரோக்கியமான உணவுகளைக் குழந்தைகள் தினமும் சாப்பிடும் பட்சத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகளைத் தனியாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

விடுதி மாணவர்கள் என்ன செய்யலாம்..?

வீட்டிலிருந்து பள்ளி சென்று படிக்கும் மாணவர்கள் தினமும் சத்தான உணவுகளை வீட்டிலேயே செய்து எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால், ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை என்பதால், அவர்கள் தங்களின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்துக்கொள்ள கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும்.

கொண்டைக்கடலை சாலட்
கொண்டைக்கடலை சாலட்

குறிப்பிட்ட நாள்கள் வரை வைத்துச் சாப்பிடக்கூடிய தன்மையுள்ள முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் போன்ற உணவுகளைப் பெற்றோர்கள் ஹாஸ்டலில் தங்கும் பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்தே கொடுத்தனுப்பலாம்.

தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஹாஸ்டல் மாணவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை வாங்கி வைத்துக்கொண்டு தினமும் ஒன்று சாப்பிடலாம்.

கடைகளில் விற்கப்படும் சத்துகள் நிறைந்த பொரி உருண்டை, வேர்க்கடலை மிட்டாய், மசாலா பொரி போன்றவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.

ஆப்பிள், வாழை, கொய்யா எனத் தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.

Classroom in New Delhi, India
Classroom in New Delhi, India
AP Photo/Altaf Qadri
ஒவ்வாமையை ஏற்படுத்தும் குளுட்டன் உணவுகள்... யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

விடுதியில் இயங்கும் கேன்டீன்களும், அங்கே தங்கிப் படிக்கும் மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு கொண்டைக்கடலை, வெல்லம் சேர்க்கப்பட்ட உணவுகள், அவித்த கிழங்குகளைத் தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்" என்கிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் சங்கீதா.

அடுத்த கட்டுரைக்கு